நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடுத்த அதிபர் தேர்தல் முடியும் வரை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இந்தத் தகவலை “லங்கா நியூஸ் வெப்“ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அடுத்த அதிபர் தேர்தலில் தான் போடடியிடவுள்ளதாகவும், எனவே சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை இழக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தாலும் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்த அதிபர் தேர்தல் முடியும் வரை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுகிறது ஆணைக்குழு அறிக்கை - மகிந்த சமரசிங்க
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை அவசியமற்றது.. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சுதந்திரமானதாகவும், அனைத்துலக நாடுகளில் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறும் வகையிலும் அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்று அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளது.
மிகவும் சுதந்திரமாகவும் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவுமே நல்லிணக்க ஆணைக்குழு பல மாத காலமாக பொதுமக்களிடமிருந்தும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்தும் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டது.
நல்லிணக்க ஆணைக்குழு பல பரிந்துரைகளைக் கூறியுள்ளதுடன், போர்க்காலப் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கும் வலியுறுத்தியுள்ளது. எனவே சிறிலங்கா அரசின் வெளிப்படைத்தன்மை இன்று உலகிற்கு தெரியவந்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்விலும் சிறிலங்காவின் முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிப்படுத்த முடியும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment