சீனாவை சிறிலங்காவிலிருந்து இந்தியா உதைத்து தள்ளவேண்டும் - முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி


இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளதாக Firstpost.com என்னும் இணையத்தளத்தில் Uttara Choudhury எழுதியுள்ளார். 


அணுவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெரிக்காவுடனான அதன் உறவில் விரிசல் ஏற்பட்;ட 1990 களில் சென்னையில் அமெரிக்கத் தூதரகக் கடமையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி [William H Avery] போன்ற மிகக் குறைவானவர்களே அமெரிக்க - இந்திய உறவுகள் தொடர்பாக நன்கறிந்து வைத்துள்ளனர். 

'சீனாவின் கெட்ட கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த பூகோள வல்லரசாக இந்தியா' [China’s Nightmare, America’s Dream: India as the Next Global Power] என தலைப்பிடப்பட்ட அவேரியால் எழுதப்பட்ட புதிய நூலில், உலகின் மிகப்பெரிய மற்றும் செல்வந்த நாடுகளிற்கிடையில் வளர்ந்து வரும் தொடர்புகள் தொடர்பாக விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நூலில் சீனாவிற்கு எதிரான கருத்துக்களையும் அவேரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தான், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளுடன் அந்தப் பிராந்தியத்தில் சீனா எவ்வாறு தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தக்க பதிலை இந்தியா வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அயல்நாடுகளுடன் சீனாவானது தனது தலையீடுகளை அதிகரித்து வருவதுடன், சிலநேரங்களில் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றது.

தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பில் [Association of Southeast Asian Nations - ASEAN] உறுப்பினராக உள்ள இந்தியா மற்றும் பெரும்பாலான நாடுகள் சீனாவுடன் பிராந்திய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும் என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

"இந்தியா தற்போது சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்குத் தொடர்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். இது குறுகிய காலத்தில் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா தலையீடற்று இருப்பதைத் தடுப்பதாக அமையும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பனிப்போர்க் காலத்தில் சோவியத் யூனியனால் பின்லாந்து அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை அவேறி எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் தென் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள, தென்னாசியாவின் வர்த்தக நடவடிக்கைகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க சிறிலங்காவின் மந்தகரமான மீன்பிடிப் பிரதேசமாக இருந்த அம்பாந்தோட்டையில் வெற்றிகரமான புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக சீனா எவ்வாறு மில்லியன் கணக்கான நிதியை முதலீடு செய்துள்ளது என்பதை அவேறி தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த விடயமான இப்பிராந்தியத்தை மீளமாற்றியுள்ளதுடன், அயல்நாடுகளுடனான தனது உறவை மீளவும் இந்தியா சிந்திப்பதற்கான நிலைப்பாட்டைக் கொடுத்துள்ளது. 

சீன நாடு தற்போது பாகிஸ்தான், பங்களாதேஸ், மியான்மார் போன்ற நாடுகளில் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்துவருகின்றது. அத்துடன் நேபாளத்தில் தொடதருந்துப் பாதைகளை அமைப்பதற்கான திட்டத்தையும் சீனா கொண்டுள்ளது.

அவேறி போன்ற ஆய்வாளர்களின் வாதத்தின் படி, இவ்வாறான சீனத் திட்டங்கள் இந்தியாவிற்கு சினத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய 'முத்துமாலை' என்ற மூலோபயம் ஊடாக சீனாவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவது தொடர்பாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

1991ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப அதன் பூகோள அரசியல் செல்வாக்கானது பொருத்தமான வளர்ச்சியை எட்டவில்லை என அவேறி கவலை தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், முன்னைய புஷ் நிர்வாகம் போன்று தற்போதைய ஒபாமா நிர்வாகமும் இந்தியாவுடன் நீண்ட கால மூலோபாய கூட்டு நடவடிக்கைக்கான முதலீட்டை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதற்கு அப்பால், அமெரிக்காவானது ஆசியாவை முன்னுரிமைப்படுத்துகின்றது எனப் பிரகடனப்படுத்தும் அதேவேளையில் சீனாவானது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதையும் அது அடையாளங் கண்டுள்ளது. 

இந்தியாவானது ஐக்கிய இராச்சியம் போன்று வளரவில்லை. அமெரிக்க நலன்களுக்காக இந்தியா ஒரு லெப்ரினன்ட் போல் பணியாற்றும் என நம்பும் எந்தவொரு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களும் மூலிகையைப் புகைப்பிடிப்பவர் என்றே கருதவேண்டும்.

ஆனால் இந்தியாவானது தனது அண்மைய பொருனாதார வெற்றிகளை உண்மையான பூகோள வல்லரசாக மாறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என அவேறி கருதுகிறார். அமெரிக்காவுடன் இந்தியாவானது பொதுவான நலன்களை அதாவது விரிவான முன்னேற்றமடைந்த துறை சார் நலன்களைத் தேடிக்கொள்கின்றதாகவும், இதை விட ஒத்துழைப்பு வழங்குவதற்கான விருப்பத்தை இந்தியா வழங்கவேண்டும் எனவும் அவேறி குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவானது ஆங்கிலோ- அமெரிக்க உறவில் Anglo-American relationship கைக்கொள்ளப்பட்ட ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆளுமை, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற அதே விழுமியங்களையே கொண்டுள்ளது" என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வலுவான இந்திய –அமெரிக்க கூட்டானது வேரூன்றக்கூடிய நிலையில் உள்ளபோதிலும், தகவற் தொழினுட்பம் மீதான இந்தியாவின் நம்பிக்கை தொடர்பாக அல்லது 'கொலனித்துவ அடிமைத்தனம்' போன்று இணையத்தளங்கள் ஊடாக அமெரிக்க நிறுவனங்களிற்கு அடிமட்ட விலையில் இந்தியாவானது அறிவுத்திறனை விற்பது தொடர்பாகவும் அவேறி தனது நூலில் ஒப்பிட்டுள்ளார். 

வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுடன் கூடிய அமெரிக்க நிறுவனங்களிற்கான செயற்திறனை இந்திய நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும் அவேறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவேறி மீளவலியுறுத்தியுள்ளார்.


நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 கருத்துரைகள் :

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் பகர்வுக்கும் மிக்க நன்றி மாசிலா

    ReplyDelete