கடந்த முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்மக்கள் உயிரிழந்து உடையிழந்து சுகமிழந்து சொத்திழந்து சொந்தபந்தமிழந்து வாழ்வழ்விடங்களை இழந்து வாழ்கையிழந்து வீதியில் நிர்கதியாக நிற்கின்றனர். ஆனால் யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இவர்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் சென்று வாழ்வதற்கு அரசால் மீள்குடியேற்றப்படாமல் நிர்கதியாக நிற்கும் அவலநிலை தான் தொடர்கின்றது. இவ்வாறான அவலநிலையின் தொடர்கதையாக அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய இருபிரதேசத்தை சேர்ந்த 832 குடும்பங்கள் 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம் ஆகிய பிதேசங்களில் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
தங்கவேலாயுதபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ஆர். அருளானந்தம்
தங்கவேலாயுதபுரத்தில் 425 குடும்பங்களைச் சேர்ந்த 1254 பேர் வாழ்ந்து வந்தோம். கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட யுத்ததினால் உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்து திருக்கோவில், தம்பிலுவில், விநாயகபுரம் ஆகிய பிதேசங்களில் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து பல கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் யுத்தம் முடிந்து 2 வருடங்களாகியும் எமது சொந்த வாழ்விடத்திற்கு சென்று வாழமுடியாமல் உள்ளோம். எங்கள் ஜீபனோபாய தொழில் விவசாயம். எமது சொந்த இடத்தில் சென்று வாழ்வதற்கு அரசாங்கம் மீள்குடியமர அங்கீகாரம் தராமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து வருகின்றது
நாங்கள் கடந்த 1986 ம் ஆண்டு இடம்பெற்ற 178 பேர் படுகொலையையடுத்து இடம்பெயர்தோம் பின்னர் 1988 ஆண்ட மீள்குடியேற்றப்பட்டோம் பின்னர் 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து பின்னர் 2002 ம் ஆண்டு மீளகுயேற்றப்படடோம் இதன் போது அழிநத் எமது வீடுகளை நெக்டப் திட்டத்தின் மூலம் கட்டிய இடைநடுவில் மீண்டும் 2006 ம் ஆண்டு இடம்பெயர்ந்து இவ்வாறு மாறி மாறி குடியேறுவதும் இடம்யொவதும் கடந்த 25 வருடமாக எமது அன்றாட வாழ்வியல் நிலையாகிவிட்டது. இதனால் எமது பிள்ளைகளின் கல்வியையிழந்து எமது வாழ்வாதாரத்தையிழந்து வீடுகள் இன்றி நிர்கதியாக நிற்கின்றோம்.
எங்களை மீள்குடியமர்த்துமாறு பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் அரசில்வாதிகளிடம் கோரியுள்ளோம். ஆனால் இற்றைவரை எதுவும் நடந்ததாக இல்லை. அரசாங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் எமது உயிர் வாழ்வதற்கான ஒரே தொழிலான விவசாயத்தை மேற்கொள்ளுவதற்காக நாங்களாக சென்று இருப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைப்பதற்கான கம்பு, தடிகளை காட்டில் வெட்ட அனுமதிதருமாறு கேட்டோம். அதற்கும் இதுவரை தெளிவான பதில் இல்லை. எமது ஜீபனோபாய தொழிலைக் கூடசெய்யமடியாமல் உறவினர் வீடுகளில் வாழ்ந்து வருகின்றோம்.
இந்தநிலையில் 50 குடும்பங்கள் தனாகவே குடியேறியபோதும் குடிப்பதற்கான தண்ணீர்வசதி மற்றும் யானைகளின் அட்டகாசம் போன்றவற்றினால் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தமது ஜீபனோபாய தொழிலுக்காக வாழ்ந்தவருகின்றனர். அரசியல்வாதிகள் வருவார்கள் பார்ப்பார்கள் கேட்பார்கள் போவார்கள் ஆனால் ஒன்றுமில்லை எனவே எங்களை நிரந்தரமாக மீள்குடியேற்றி வாழ வழிசெய்துதரவும்;
கஞ்சிக்குடியாறு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலேஸ்வரன் 32 வயது
கங்சிக்குடியாறு பிரதேசத்தில் 406 குடும்பங்களைச் சேர்ந்த 1436 பேர் வாழ்ந்து வந்தோம் 2006 ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் குறிப்பிட்ட காலமாக உலர்உணவு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்த ஒன்றரைவருடங்களுக்கு மேலாக அவை நிறுத்தப்பட்டுள்ளன. சமுர்த்திகூட இல்லை இவ்வாறான நிலையில் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கத்தில் மீள்குடியேற்றுவதாக அறிவித்தனர் ஆனால் இன்றுவரை மீள்குடியேற்றப்படவில்லை. பிரதேச செயலாளரிடம் கேட்டோம் அராங்க அதிபரின் பதில்கிடைத்ததும் மீள்குடியேற்றப்படும் என்றார். இந்தநிலையில் அரசாங்க அதிபரை கிராமமக்கள் சந்தித்தோம். அதற்கு அவர் தற்காலிக குடிசை இல்லாததனால் குடியேற்ற முடியாதுள்ளது என்றார். அதற்கு நாங்கள் எங்களுக்கு தற்காலிககுடிசை இல்லாவிட்டால் பறவாயில்லை குடிசையமைப்பதற்காக காட்டில் தடிகள், கம்புகள் வெட்ட அனுதிகோட்டோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார் அதுவும் நடக்கவில்லை.
இரு கிராமமக்களும் குடியேறுவதற்கான அனுமதியை தருமாறு பிரதேசசெயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு மனுக்கொடுத்தோம். அந்த அனுமதிகூட வழங்கப்படவில்லை. வாழ்வதற்கான எந்த நிலமையும் இல்லாததனால் வாழ்வாதாரத்திற்காக சிறியளவிலான குடும்பங்கள் குடியேறியுள்ளோம். இந்தநிலையில் தண்ணீர் இல்லை, போக்குவரத்து இல்லை, மின்சாரம் இல்லை, உள் வீதிகள் இல்லை, இரவில் யானைகளின் தொல்லை அதிகம் இதனால் அடிக்கடி திரும்பி திருக்கோவில் பிரதேசத்திற்கு சென்று திரும்பிவரவேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் இருகிராம மக்களும் கவனிப்பார் அற்ற நிலையில் உள்ளேம். எங்கள் பிரதேச இடப்பெயர்வுக்கு பின்னர் இடம்பெயர்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் அம்பாறை மவட்டத்தில் இடம்பெயர்ந்த இரு கிராம மக்களும் குடியேற்றப்படாமல் இருக்கின்ற காரணம் என்னவென்று எங்களுக்கு புரியவில்லை எங்களை எமது பூர்வீக நிலங்களில் வாழவழிவகுத்து தருமாறு அதிகாரிகளை கேட்கின்றோம்.
விவசாயியும் தங்கவேலாயுதபுரம் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைருமான சாமித்தம்பி மதியழகன்
பிள்ளைகளின்ரை கல்வி பாதிப்பு. 1986 ம் ஆண்டு தொடக்கம் உடுத்த உடுப்புடன் இடம்பெயர்வதும் மீள்குடியேறுவதுமாக தொழில் இல்லாமல் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எங்களை எவரும் திரும்பிபார்ப்பதாக இல்லை. வீடுகள் எல்லாம் தரைமட்டம். வீதிகள் ஒன்றும் இல்லை தண்ணீர் குடிப்பதற்கான கிணறு இல்லை. இந்தநிலையில் அரசியல் வாதிகள் வந்தார்கள் தங்களது தேர்தலுக்குரியவைகளை சொல்லுகின்றதுடன் இடம்பெயர்ந்த மக்களின் குறைகளை கேட்பதாக படத்தை எடுத்து பேப்பர் ரிவியிலை போட்டு விட்டு மக்களை ஏமாற்றி விட்டு தங்களின் பாட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் நடவடிக்கை எதுவும் இல்லை அரசாங்கம் எங்களை குடியேற்றம் என்று தந்தால் போதும்.
ஒருபிள்ளையின் தாயாரான அருளாணந்தம் கலைவாணி
நாங்கள் இடம்பெர்ந்து திருக்கோவிலில் உறவினரின் வீட்டில் தங்கியிருக்கின்றோம். எங்கடை சொந்த இடமான தங்கவேலாயுதபுரத்தில் வந்து இருக்க முடியாமல் உள்ளோம். வீடு உடைந்போயிட்டு குடிசையமைக் காட்டில் கம்பு வெட்ட விடுறாங்களில்லை அரசாங்கமும் எங்களை குடியேற்றுகிறார்களில்லை. நாங்களாக குடியேறமுடியாமல் உள்ளது எங்கள் வாழ்வாதார தொழிலுக்காக இங்குவந்த தொழிலை செய்வேண்டியுள்ளதனால் நாங்கள் இங்கு நின்றால் பிள்ளைகள் உறவினர் வீடுகளில் இருந்து படிக்கின்றனரில்லை அம்மா.அப்பா தேவை இங்கு வரப்போறன் என்றால் இங்கு பாடசாலை நடக்கின்றதில்லை பாடசாலையை ஆரம்பிப்பது என்றால் அரசாங்கம் மீள்குடியேற்ற அனுமதிதரவேண்டும் என சொல்லுகின்றனர் இதனால் எமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படடுள்ளது என்செய்வது என்று விளங்கவில்லை விவசாயத்தை செய்தால்தான் வாழலாம் எங்களை மீள்குடியேற்றி பிள்ளைகள் கல்வியை கற்க வழிசெய்து தரவும்
திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம்
கடந்த 2010 ம் ஆண்டு பிரதேசத்தில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை இராணுவத்தினர் அற்றிய பின்னர் எங்களை அந்த பிரதேசத்திற்கு செல்ல அனுமதித்தனர். அதன்பின்னர் யுனெப்ஸ் நிறுவனம் 10 கிலோமீற்றர் தூரம் கொண்ட தங்கவேலாயுதபுரம் கஞ்சிக்குடியாறு பிரதான வீதியை நிருமானித்து தந்துள்ளது. இவ்விருபிரதேச மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக முழு ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அரசாங்க அதிபரிடம் கேட்டோம் அதற்கான நிதியில்லாததனால் மாவட்டஓருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோட்டோம். அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சிடம் இருந்து இதற்கான நிதியை பெறுமாறு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் மீள்குடியேற்ற அமைச்சுக்கு இந்த மீள்குடியேற்றம் தொர்பான நிதியை கோரியுள்ளோம் இதுவரை அதற்காண எந்தவிதமான பதிலும் இல்லை. இந்தநிலையில் நாங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களை கூட்டி கோட்டோம் மீள்குடியேற்றுவதற்கான உதவியை அவர்களும் தங்களிடம் இதற்கான நிதியில்லை என்றனர்.
இதேவேளை இப்பிரதேச மக்கள் தமது ஜீவனோபாய தொழிலுக்காக செல்லவேண்டியுள்ளதன் காரணமாக தாங்களாக குடியேறி குடிசையமைக்க காட்டில் கம்பு, தடிகளை வெட்ட அனுமதிக்குமாறு அனுமதிகோரினர். இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர் ,பொலிசார், காட்டு இலாகக்கள் , மாகாணசபை உறுப்பினர் உட்பட பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல் செய்து ஓரு தற்காலிக குடிசையமைக்க தேவையான தடி, கம்புகளின் எண்ணிக்கையை தருமாறும் அதற்கான அனுமதியை பாதுகாப்பு படையினர், பொலிசார், காட்டுஇலாக தருவதாகவும் ஓருகுழுவும் அமைத்தோம் இதுவரையில் அதற்கான கடிதங்களை தரவில்லை அப்படியாயின் எவ்வாறு காட்டில் கம்பு, தடி வெட்டமுடியும்.
இவ்பிரதேசத்தில் மீள்குடியமர்த்துவதற்கான வீடுகள் எல்லாம் முற்றாக சேதமடைந்துள்ளன. உள்ளகவீதிகள் இல்லை, குடிதண்ணீர் , மின்சாரம் மலசலகூடம் போன்ற அடிப்படைவசதிகள் இன்றியுள்ளது. இந்தநிலையில் தற்காலிக கொட்டகை கூட இல்லாமல் இந்தமக்களை நான் மீளகுடியேற்றுவதாக எங்கு சென்று விடுவது நடுவீதியலா?; மரத்தின் கீழா? கொண்டுவந்து இந்த மக்களை விடுவது இதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை. யாராவது தற்காலிக கொட்டகைகளையாவது அமைத்துதந்தால் உடன் மீள்குடியேற்ற முடியும் என்றார்.
இந்தபிரதேச மக்ளை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் கொண்டு சென்று வழவழிசெய்வது அரசின் கடமையாகும். அதைவிடுத்து மாவட்டத்தில் வீதிகள், கட்டிடங்கள் மைதானங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்து என்னபயன் இருப்பதற்கே வீடு இன்றி அரைகோப்பை கஞ்சியுடன் தமது வாழ்வுக்காக நித்தம்நித்தம் போராடும் மக்களுக்கு ஒரு குடிலாவது தேவை. சம்மந்தப்பட்டவர்கள் இப்பிரதேச மக்களை அவர்களது சொந்த நிலத்தில்வாழ வழிசெய்வார்களா?
நன்றி நாதம்
0 கருத்துரைகள் :
Post a Comment