மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம்

பாகிஸ்தான், சிறிலங்கா, தன்சானியா போன்ற நாடுகளுடன் வர்த்தக, நிதி, முதலீட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் சீனா தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தென்னாசியாவில் உள்ள ஆதிக்கம் மிக்க இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் அமெரிக்காவிற்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட  The Guardian  ஊடகத்தில்  Simon Tisdall  எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீதான நடவடிக்கைகளின் பின்னரான அமெரிக்காவின் பாதுகாப்பு மூலோபாயம் தொடர்பாக அறிவிப்பதற்காக இவ்வாரம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ரகனிற்கு வருகை தந்திருந்தார். 

அங்குஇ அமெரிக்க இராணுவம், புதிய நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பத்தாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளின் பின்னர் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் தனது உரையில் குறிப்பிட்ட போதிலும், குறிப்பாக 'சீனா' என்ற சொல்லை அவரது உரையின் எந்த இடத்திலும் கேட்க முடியவில்லை. 

இச்சொல்லை விட்டமைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது, ஆனால் இது தவறான கருத்தாக்கத்திற்கு வழிவகுக்கின்றது. சமாதானத்தை உண்டுபண்ணுபவராக தேர்தலில் மீளவும் போட்டியிடுகின்ற அரசியல்வாதி என்ற வகையில், உலகின் வல்லரசாக உள்ள அமெரிக்காவின் ஒரேயொரு தீவிர போட்டியாளருடன் புதிய பனிப்போர் ஒன்றை உருவாக்குவதற்கான தோற்றத்தை உருவாக்கிக் கொள்வதில் ஒபாமா எந்தவொரு விருப்பத்தையும் கொண்டிருக்கவில்லை. 

ஆனால் ஹவாயில் பிறந்த ஒபாமா ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் செல்வாக்கைச் செலுத்தும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிகளையும் தோற்கடிப்பதில் நிச்சயம் முயற்சிப்பார் என்பது அண்மையில் ஒபாமாவால் மேற்கொள்ளப்பட்ட ஆசிய பயணத்திலிருந்து தெளிவாகின்றது. அமெரிக்க மூலோபாயக் கொள்கையானது முக்கியத்துவம் பெற்ற இவ் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் மீது அதிக கவனத்தைக் குவித்துள்ளது. 

அமெரிக்கப் படைகளை ஈராக்கிலிருந்து எடுத்த கையோடு சீனாவுடன் யுத்தத்தை ஆரம்பிப்பதில் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மாற்றின் டெம்சி  General Martin Dempsey   ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் சீனாவின் பாதுகாப்புச் செலவீனங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை டெம்சி நன்கறிவார். "சீனாவின் இத்துரித வளர்ச்சியின் மூலம் இப்பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்களைத் தவிர்ப்பதற்கான மூலோபாயக் கொள்கைகளை அதிக கவனத்தடன் வகுத்துக் கொள்ள வேண்டும்" என்பதை மூலோபாய ஆவணம் வலியுறுத்துகின்றது. 

1945ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா தனது அதிகாரத்தைச் செலுத்தி வரும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் எவ்வாறு பலப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை டெம்ப்சி உற்று நோக்கி வருகிறார். 

"எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டிய மூலோபாயம் தொடர்பாகவே ஒபாமா தனது பென்ரகன் உரையில் தெரிவித்திருந்தார்" என டெம்ப்சி குறிப்பிடுகின்றார். 

"மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும். ஆனால் இந்து சமுத்திரக் கரையோரங்களிலும் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என ஜெனரல் டெம்ப்சி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் சீனா தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் டெம்ப்சி யாரைப் பற்றி, எதைப் பற்றிப் பேசினார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த விடயத்தில் எவரும் இதனைப் புரிந்து கொள்ளத் தவறமாட்டார்கள். 

"அமெரிக்காவின் எதிர்காலப் பொருளாதாரம் மற்றும் எமது தேசியப் பாதுகாப்பு போன்ற விடயங்களை முக்கியத்துவப்படுத்தியே இப்பிராந்தியம் தற்போது வளர்ந்து வருகின்றது. எடுத்துக் காட்டாக, எமது இராணுவத்தின் தொழிநுட்பங்கள் மற்றும் இதன் சுதந்திரமான செயற்பாடுகள் போன்றவை இப்பிராந்தியத்தில் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பனெற்றா தெரிவித்துள்ளார். 

சீனா இது தொடர்பாக இன்னமும் நேரடியான பதிலைத் தரவில்லை. ஆனால் சீனாவானது அமெரிக்காவால் நகர்த்தப்படும் ஒவ்வொரு நகர்வுடன் போட்டியிடத் தயாராக உள்ளதாக சீனா கம்யூனிசக் கட்சியின் வெளியீடான  Global Times ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"அமெரிக்காவுடன் புதிய பனிப்போர் ஒன்று உருவாவதைத் தடுக்கவே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதேவேளையில், அயல் பிராந்தியத்துடன் சீனாவின் பாதுகாப்பு பிரசன்னத்தைக் கைவிடவேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது" என இப்பத்திரிகையின் ஆசிரியர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"அதிகரிக்கப்பட்டு வரும் அமெரிக்க ஈடுபாடானது உறுதிப்பாட்டை அதிகரிப்பதாக அமைந்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் இராணுவச் செயற்பாடுகள் அமைதியைக் குலைப்பதாக இருக்கலாம்" என  Xinhua  என்னும் சீனச்செய்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வரப்போகும் 21ம் நூற்றாண்டில் அமெரிக்க-சீன போட்டியானது அதிகரிக்கும் என்பதற்கான காரணிகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிகின்றன. குறிப்பாக தோற்கடிக்கப்பட்ட தேசியவாதியான  Kuomintang  ன் இறுதித் தங்குமிடமாக இருந்த தாய்வான் உள்ளடங்கலாக இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிலைக்கான முக்கிய காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. சீனாவைப் பொறுத்தளவில் தாய்வான் ஒரு 'துரோகம் இழைத்த மாகாணமாகவே' கருதப்படுகின்றது. 

தாய்வானுடனான சீனாவின் உறவுநிலை பின்னர் சுமூகநிலையை அடைந்த போதிலும், சீனாவானது தற்போதும் தாய்வான் கால்வாயை ஊடறுத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நிலைநிறுத்தியிருப்பதால் இது தாய்வானை அச்சங்கொள்ள வைத்துள்ளது. தாய்வான் பாதுகாப்பிற்கு நிழல் பொறுப்பாளியாகவும், பிரதான ஆயுத வழங்குனராகவும் செயற்படும் அமெரிக்கா மீது பனிப்போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரமெனிலும் சுவாலை விட்டெரியலாம். 

தென் மற்றும் கிழக்கு சீனக் கடற் பிரதேசங்களில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் மீதான சீனாவின் பிராந்திய மற்றும் வள ஆதிக்கமானது யுத்தம் மூள்வதற்கான பிறிதொரு காரணியாக அமைந்துள்ளது. அமெரிக்காவுடன் மட்டுமன்றி சீனா நாடானது வியட்நாம் போன்ற அயல்நாடுகளுடனும் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. வியட்நாம், அமெரிக்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தி வரும் ஒரு நாடாகும். 

சீனாவின் பிராந்தியச் செல்வாக்கு அதிகரிப்பதானது யப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றது. இந்நாடுகள் தமது வர்த்தக உறவுகளை சீனாவுடன் மேற்கொண்டு வருகின்ற போதிலும் சீனாவின் பிராந்தியத் தலையீடு இந்நாடுகளிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

ஒபாமாவின் ஆசிய பயணத்தின் போது, டர்வின் மற்றும் சாத்தியப்பட்டால் பிலிப்பீன்சிலும் இராணுவத் தளம் ஒன்றை ஆரம்பித்தல் தொடர்பன சமிக்கையை வழங்கியிருந்தார். சீனாவை விட வடகொரியாவிற்கு எதிராக அதிகம் மேற்கொள்ள வேண்டியுள்ள போதிலும், தற்போது அமெரிக்காவின் யப்பானுடனான தொலை தூர ஏவுகணைப் பாதுகாப்பு ஒத்துழைப்பானது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வேறு உலக நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுகின்ற போதிலும், தென்கொரியா மற்றும் யப்பான் ஆகிய இரு நாடுகளிலும் தொடர்ந்தும் அமெரிக்கப் படைகள் தக்கவைக்கப்படுவர். அனைத்துலகக் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு அதி முன்னுரிமை வழங்கப்படுகின்றது. 

இவற்றை விட அமெரிக்க – சீன முறுகல் நிலைக்கு குறிப்பிடத்தக்க வேறு காரணங்களும் உள்ளன. பூகோள - மூலோபாய விடயத்தைப் பொறுத்தளவில், இந்தியாவுடன் சீனா ஏற்படுத்திக் கொண்ட உறவின் பின்னால் உள்ள சீனாவின் நோக்கத்தைக் கண்டறிவதற்காக இந்தியாவுடன் புஷ் நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையை சமாளிக்கவே அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளது. 

பாகிஸ்தான்இ சிறிலங்கா, தன்சானியா போன்ற நாடுகளுடன் வர்த்தக, நிதி, முதலீட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் சீனா தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தென்னாசியாவில் உள்ள ஆதிக்கம் மிக்க இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் அமெரிக்காவிற்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

அமெரிக்காஇ பர்மாவுடன் இராஜீக உறவுகளை விரிவுபடுத்திக் கொண்டதன் மூலம் சீனாவிற்கு எதிரான போட்டியை அமெரிக்கா மேற்கொண்டது. அதாவது பர்மாவின் ஜனநாயகத் தலைவரான ஆங்சாங் சூயிக்கு ஆதரவு வழங்க விருப்பம் காட்டுவதென்பது உண்மையானதாகும். ஆனால் அமெரிக்கா இதில் தனது சொந்த நலனையும் கவனத்திற் கொண்டுள்ளது. 

சீனா தனது வர்த்தகச் செயற்பாடுகளில் அதிக நன்மைகளை அடைந்துள்ள ஆபிரிக்காவின் உப சகாராவில் தற்போது யுத்தத்திற்குத் தேவையான ஆயுத தளபாடங்கள், பொருளாதார வளங்கள், அரசியற் செல்வாக்கு, இராணுவப் பலப்படுத்தல்கள் என்பன மீளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது லத்தீன் அமெரிக்காவிலும் அதிகரித்து வருகின்றது. 

அமெரிக்காவின் போக்கானது மேற்கூறிய இரு பிராந்தியங்களின் மீதும் இருக்கவில்லை. அமெரிக்கா தற்போது ஜனநாயகம் தொடர்பாகவே அதிகம் பேசிவருகின்றது. ஆனால் இதன் பிரதான நோக்காக பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் போன்றவற்றின் மீதே அதிகம் காணப்படுகின்றன. ஆபிரிக்கா மீதான பென்ரகனின் கட்டளை அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் கூட சிறப்பாக மக்ரெப் மற்றும் சாகெல் பிராந்தியங்களின் மீதே தற்போது அமெரிக்காவின் கவனம் அதிகம் குவிந்துள்ளது.

வடகொரியாவை சீனா பாதுகாப்பதன் ஊடாகவோ அல்லது சிரியாஇ ஈரான், சூடான் போன்ற சிக்கலான பிராந்தியங்களிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு சீனா தனது ஆதரவை வழங்குவதில் தயக்கம் காட்டினாலும் கூடஇ சீனா தற்போது அதிகரித்த இராஜதந்திர மற்றும் அரசியல் சவால்களை வழங்கிவருகின்றது. 

அமெரிக்க விமர்சனத்தைப் பார்க்கும் போது, சீனாவானது உலகில் 'சிறந்த குடிமகனாக' பொறுப்புடன் செயற்படத் தவறியுள்ளதானது, பொருளாதார ரீதியாக இதன் ஏற்றுமதி மீது தாக்கத்தைச் செலுத்துகின்றது. அத்துடன் பொருளாதார ரீதியில் ஐரோப்பிய வலயத்திற்கு உதவி புரிவதற்கு இது தயக்கம் காட்டுவதாக அமைந்துள்ளது. 

21 ம் நூற்றாண்டில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரைத் தவிர்க்க முடியும். இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் நன்மதிப்பு, நல் உறவு, சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில் இவற்றிற்கிடையிலான உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. ஜனநாயகம், பண்புகள்இ திறந்த மனப்பாங்கு, மத நம்பிக்கை, இணைந்த அரசியல், பொருளாதார நிலைப்பாடுகள் என்பன அடிப்படையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இவ்விடயங்களில் இவ்விரு நாடுகளும் இணைந்து செயற்பட்டுக் கொள்ள முடியும். 

வரலாற்று ரீதியாக, 19 ம் நூற்றாண்டில் பிரித்தானியாவும், 20 ம் நூற்றாண்டில் அமெரிக்காவும் உலக வல்லரசாக இருந்தது போன்று இனிவருங்காலங்களில் சீனா வல்லரசாக வருவதற்காகச் செயற்படுகின்றது. 

இதன் நம்பிக்கை, வளர்ச்சி, தனது சொந்த அதிகாரத்தில் உள்ள நம்பிக்கை என்பன இவ்வாறு சீனா உலக வல்லராசாக வருவதற்குக் காரணமாக அமையலாம். ஒபாமாவின் பாதுகாப்பு மூலோபாயக் கொள்கையானது சிறப்பாக இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. அத்துடன் தீமைக்கு வழிவகுப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினப்பலகை

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment