சிறிலங்கா போகும் பரிதாபமான பாதையின் குறிகற்கள் !


சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியென்பது திட்டமிட்ட கொலைகளையும், முழுமையான நீதி வழுவல்களயும் உள்ளடக்கித்திகழும் ஒரு இருண்டகாலமாக  மாறிவிட்டதென்பதே உண்மை.
தமிழர்களின் போராட்டத்தின் சரித்திரத்தையே திருப்பி எழுதும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு எதிராக, எதிர்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியுள்ளனவெனினும், இதுவரையில் உலகளாவியரீயிதியில் மதிப்புடைய எந்த ஒரு சுயாதீனமான அமைப்பும் சிறிலங்கா அரசின் கதைகளைத் தட்டிக்கேக்கும் அளவுக்கு முன்னேற்ற்ம் எதையும் இங்கே காணமுடியவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.
இவ்வாறு Committee to Protect Journalists எனும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் ஆசிய பிராந்திய திட்ட இணைப்பாளர்  Bob Dietz அவர்கள் தெரிவித்துள்ளார்.
( CNN – ASIA WEEK  ஆகிய ஊடகங்களின் கருத்தாளராகவும்- சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான அமைப்பின் திட்ட இணைப்பாளராகவும் உள்ளார்)

சிறிலங்கா போகும் பரிதாபமான பாதையின் குறிகற்கள் எனும் கருப்பொருளில் இவர் எழுதிய கருத்துரையின்  தமிழகாக்கத்தை நாதம் செய்திகளுக்காக வழங்குபவர் :தெய்வேந்திரன் கந்தையா (கனடா)
சிறிலங்கா போகும் பரிதாபமான பாதையின் குறிகற்கள் !
சனவரி மாதம்தான்,  சிறிலங்காவின் ஊடகவியலாளரைப் பொறுத்த வரைக்கும் ஒரு பாரிதாபமான மாதம் என்று கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது. ஜனவரி 2011 இல் சொனாலி சமரசிங்க தனது கணவர் லசந்த விக்கிரமதுங்க இரண்டாண்டுகளுக்கு முன்பதாக ஜனவா 9, 2009 இல் கொல்லப்பட்டது பற்றி எழுதியிருந்தார்.ஜனவா 2010 இல் நான்  ‘ஓராண்டு ஆகியும்இலங்கை ஊடகவிலாளர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த மறுக்கிறது’ என்ற தலைப்பில், இந்த மரணம் தொடர்பாக நீதிவிசாரணைகளை மேற்கொள்ளமறுக்கும் அரசின் போக்குப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கட்டுரையானது 2009 ஜனவரியில் சீ பீ ஜே  தந்திருந்த அறிக்கை மீதான ஒரு தொடர் கணிப்பாகும். குறிப்பிட்ட இந்த அறிக்கை, லசந்த மீதான தாகுதலை விடவும், இன்னொரு தொலைக்காட்சி சேவை ஒன்றின்மீதும், உபாலி தென்னக்கூன் என்ற இன்னொரு ஊடகவிலாளர் மீதும் மேற்கொள்ள்ப்பட்டு இருந்த தாக்குதல்கள் பற்றியும்குறிப்பிட்டு இருந்தது.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரான விகிரமதுங்கவை அவர் பயணித்த பாதையில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்றுக்கும் விமானப்படைத்தளமொன்றுக்கும் வெகு அருகில் வைத்தே தடிகளாலும் கம்பிகளாலும் தாக்கிக் கொலைசெய்து ஆண்டுகள்மூன்று ஓடிவிட்டாலும், இதுபற்றிக் காலத்துக்குக் காலம் காவல்துறை அறிக்ககளைப் பெற்றுக்கொண்டிருக்கும் நீதிமன்றத்தினால் இதுவரை குற்றவாளிகளைக்கூண்டிலேற்றக் கூடிய முயற்சிகளெதையும் மேற்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மையாகும்.
சொனாலி சமரசிங்கவின் அறிக்கையை இங்கே நாம் சிறிலங்கா அரசின் உத்வேகமின்மை மீதும்,  ஊடகவியலாளர் மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் மீது இன்றுவரை தொடரும் தாக்குதல்கள் மீதுமான  ஒரு பன்முனைக்குற்றச்சாட்டு என்றேகூறவேண்டும். சுதந்திர ஊடகங்களுக்கான அமைப்பானது கடந்த வாரம் வெளியிட்ட தனது அறிக்கையில்மூன்று ஆண்டுகளாகியும்,  அதுவும் அறுபது தடவைகள் நீதிமன்றம் சென்றிருந்தும் கூடப் காவல்துறையினரால் இவ்விசாரணை சம்பந்தமாக எதுவித முன்னேற்றமும் காண முடியவில்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும்,  எதிர்வரும் சனவரி 24ம்திகதி, பிரகீத் எக்னெலியகொடவின் மறைவின் பின்னான இரண்டாவது ஆண்டும் நிறைவு பெறப்போகிறதென்பதையும் இங்கே நாம் நினைவு கூர வேண்டும். இந்த ஊடகவியலாளரானவர் எதிர்க்கட்சிகளு ஆதரவாகத் தொழிற்பட்ட  ஒரு கருத்துப்பட ஊடகவியலாளர் ஆவர். இவரது மறைவு சம்பந்தமான விசாரணையும் ஆண்டுகள் இரண்டாகியும்முன்னேற்ற்மெதுவுமின்றி நீதிமன்றுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு விவரமாகும். என்ன தான் நடந்தது என்று தொடந்து கொள்வதற்காகவென்று,  ஒரு சிறிய காவல்நிலையத்தின் தகவல் மேசையிலிருந்து நீதி அமைச்சின் பெரும் பெரும் நாற்காலிகள்வரையில், திருமதி எக்னெலியகொடவும்  அவரது இரண்டு புத்திரர்களும் தட்டாத கதவுகள் எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் பேணிவரும் அட்டவணையாகிய ‘தாட்சண்யமின்மை சம்பந்தமான உலக அட்டவண’யின் பிரகாரம் (இம்பியூனிடி இண்டெக்ஸ்)  ஊடகவில்லாளர்களின் கொலைகளை ஊக்குவிக்கும் வகையில் 2011இல் சிறிலங்காவானது  உலக அளவில்; நான்காவது இடத்தைப் பெறுகின்றது. எமது அறிக்கையில் குறிப்பிட்டவாறே, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியென்பது திட்டமிட்ட கொலைகளையும், முழுமையான நீதி வழுவல்களயும் உள்ளடக்கித்திகழும் ஒரு இருண்டகாலமாக  மாறிவிட்டதென்பதே உண்மை. கடந்த பத்தாண்டுக்காலத்தில் இடம்பெற்ற ஒன்பது ஊடகவியலார் கொலைகளின் ஒன்றேனும் கண்டுபிடிக்கப்பட முடியாமற் போனது, இந்தக்க் கொலைகளில் ஆட்சியாளர்களுக்கும் பங்குண்டோ என்றை ஐயத்தையே உருவாக்கியுள்ளது.
ஒருவாறாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை உலகனைத்துமே, ஒரு அப்ப்ட்டமான பூசி மெழுகும்முயற்சியெனக்கூறி நிராகரித்துள்ளன. நொவெம்பர் 2011 இல் நாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி இந்த அறிக்கையானது ஒரு காட்டுமிராண்டித்தனமான இருட்டடிப்பு என்று தான் கூறவேண்டி இருக்கிறது.

மார்ச்சு 2011ல் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் வல்லுனர் குழுவொன்றும் இந்த அறிக்கையை அடிப்படையிலேயே தவறான ஒரு அறிக்கை என்று தனது அறிக்கையிற் குறிப்பிட்டிருந்தது.

பயப்பிராந்திகளைத் தூண்டிவிடும்முயற்சிகளான நடமாட்டக் கட்டுப்பாடுகள்மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசு முற்றாகக் கைவிட வேண்டும் என்று ஐ.நா வல்லுனர் குழு மேலும் கூறியிருந்தது.

இந்த குழப்பமான நிலைவரம் காரணமாகத் தான், சிறிலங்காவின் சுதந்திர ஊடகங்கள் பெருமளவுக்கு அனைத்தையுமே அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருகின்றன. எனினும் கூட ஆங்காங்கே எதிர்க்குரல்கள் எழும்பாமல்இல்லை. நவீன காலத்தின் மிகப்பாரிய உள்நாட்டு யுத்தங்களில் ஒன்றான தமிழர்களின் போராட்டத்தின் சரித்திரத்தையே திருப்பி எழுதும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியுள்ளனவெனினும்இதுவரையில் உலகளாவியரீயிதியில் மதிப்புடைய எந்த ஒரு சுயாதீனமான அமைப்பும் சிறிலங்கா அரசின் கதைகளைத் தட்டிக்கேக்கும் அளவுக்கு முன்னேற்ற்ம் எதையும் இங்கே காணமுடியவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.
எனவே தான் தான் நாம் இங்கே கூறுகிறோம்: ‘சுதந்திரமான ஊடகத்தைக்கொண்டிலங்கிச் சட்டத்தைச் சரழவரப் பேணும் ஒரு ஒழுங்கான நாடு’ என்ற தனது நிலையினின்று பிறழ்ந்து ஒரு புதிய பாதையில் இலங்கை ஆரம்பத்திருக்கும் பயணத்தின் இரு குறிகற்கள் தாம் இந்த 2009 இலான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையும், 2010 இலான பிரகீத் எக்னெலியகொடவின் மறைவும் என்பதில் ஐயமேதும் இல்லை.
நன்றி - நாதம்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment