இலங்கை தவறினால் சர்வதேச விசாரணை - அமெரிக்கா அறிவிப்பு

போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறி முறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக் கோரும் மனு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது.

வெள்ளை மாளிகையின் இணையத்தளம் மூலம் இந்தக் கோரிக்கை மனுவில் 5 ஆயிரத் திற்கும் அதிகமானோர் ஒப்பமிட்டிருந்தனர். இந்தக் கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம்இ மனித உரிமைகள்இ தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் மைக்கல் எச்.போஸ்னர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக் கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவதுஇ இலங்கையில் அண்மைய மோதல்களின்போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பான உங்களின் கவலைகளுடன் அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.

அத்துடன் இலங்கையின் எல்லாக் குடிமக்களுக்குமான நியாயமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை அரசுஇ ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் உறுதியாக இருக்கிறது. அமெரிக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இலங்கையில் அண்மைய மோதல்களின்போது இடம்பெற்றஇ அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இரண்டு அறிக்கைகளை தயாரித்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இந்த 2 அறிக்கைகளிலும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். அத்தகைய மீறல்களுக்கு தனிப் பட்ட பொறுப் புக்கூறுதல் நல்லிணக் கத்தின் முக்கியமானதொரு பகுதி என்று நாம் நம்புகின்றோம். இது தொடர்பாக இலங்கையின் அர்த்தமுள்ள சொந்த முயற்சிகள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்த மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதில் முன்னேற்றத்தை அளிக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2011 செப்ரெம்பர் கூட்டத் தொடரின்போது இலங்கை தேசிய மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தோம். போரின்போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற் றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு-பக் கம் சாராத வகை யில் இலங்கை துரிதமாகவும் நம்பகமாகவும் பதில ளிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம்.

காணாமல்போனவர்கள்இ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கும் மோதல் களில் கொல்லப்பட்டவர்களுக்கு மரணச்சான்றி தழ்களை வழங்க வும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விவகாரங்களில் ஐ.நா. மற்றும் அனைத்துல சமூகத்துடன் இணைந்து இலங்கை ஆக்கபூர்வ மான முறையில் பணியாற்ற முன்வரவேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொள்வோம். இறுதியாக இலங்கை அரசாங் கம் இந்த நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களு க்கு அனைத்துலக கடப்பாடுகளு க்கு அமைய பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பொறுப்புக் கூறுவதற்கு அரசை தொடர்ந்தும் நாம் வலியுறுத் து வோம்.அதேவேளை அனைத்துலக மனிதாபிமான மனித உரிமைச் சட்டமீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படை பொறுப்பை உள்ளக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒரு அரசாங்கத்தினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ் நிலையில்தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும். இலங்கை விவகாரத்தில் தொட ர்ந்து ஆர்வம் காட்டுவதற்கு நன்றி என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நன்றி - வலம்புரி
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment