இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் பொறுப்புக்கூறுதல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கை அரசு அக்கறை காண்பிக்கவில்லை எனவும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்முறையாக கனடா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையரசினால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கனடா கவனத்தில் கொண்டுள்ளது. நாங்கள் இந்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து வருகின் றோம். இருந்த போதிலும், நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி, படைக்குறைப்பு குறித்த விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந் துரைகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனடா வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. போரின் இறுதிப்பகுதியில் புரிய ப்பட்டதாக கூறப்படும் மோசமான மனிதவுரிமை மீறல்கள் குறித்த பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முழு மையாக பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்பதை கனடா கவனத்தில் கொண்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழுவினால் குறிப்பிடப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த கருத்துக்களோ அதற்கான பரிகாரமோ நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை. பொறுப்புக் கூறுதல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கை அரசு அக்கறை காண்பிக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஜனநாயகம், சுதந்திரம், மனிதவுரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதுள்ள தனது கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கனேடிய வெளி விவகார அமைச்சரின் அறிக்கையில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
நன்றி வலம்புரி
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment