மணலாற்றின் பெயரை மாற்றி ‘வெலி ஓயா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அங்கு நிறுவப்பட்ட சிங்கள நிர்வாகம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தாயகத்தின் வடகிழக்குப் பகுதிகளின் நில இணைவு அமைவை நிரந்தரமாகப் பிரிப்பதாகும். அதே வேளையில் வட மத்தியப் பகுதியின் அனுராதபுரத்தையும், கொக்கிளாய் கிழக்கு கடற்கரையையும் இணைக்க சிங்கள நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சி பல நூற்றுக்கணக்கான சிங்கள குடியிருப்புக்களுடன் வெகு விரைவிலேயே ஒரு சிங்கள தேர்தல் தொகுதியை முல்லைத்தீவில் ஏற்படுத்தி விடும் நிலை உள்ளது.
முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையினை ஒட்டி வன்னியின் மணலாற்றுப்பகுதி மக்கள் கொக்கிளாய்க்கு வட மேற்கே அமைந்துள்ள அவர்களது வேளாண் நிலங்கள் 1500 ஏக்கர் வரை இன்னமும் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கரைநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களிலிருந்து தமிழர்களை 1984-ல் ராணுவம் வெளியேற்றியதிலிருந்து இன்னமும் அந்த நிலங்கள் ராணுவ வசமே உள்ளன. கடந்த வெள்ளியன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எஸ். சிறீதரன் ஆகியோர் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஓர் உண்மை கண்டறியும் விசாரணைக்காகச் சந்தித்த போதே இவ்வுண்மைகள் வெளியிடப்பட்டன. கிழக்கில் கொக்கிளாய் மற்றும் தென் மேற்கே கென்ட் மற்றும் டாலர் பண்ணைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த வேளாண் நிலங்கள் ஆக்கிரமிப்பில் தொடர்வதானது தமிழர் தாயகத்தின் ஒருங்கிணைப்புக்கு முக்கிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில் நிலத்தையும் கடலையும் ஆக்கிரமிக்கும் போக்கையும் தமிழ் அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தா விட்டால் இந்தப் பகுதி முழுவதுமே பறிபோய் விடும் என்று தெரிவித்தனர். இந்த நிலப்பரப்பிலும் கடலிலும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அவர்கள் வேறிடங்களை நாடிச் செல்ல நேரிடும்.
அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் கூறியதாவது: ஆமையன் குளம், உத்தராயன் குளம், அடையக்கருத்தான், பூவாமடுக்கண்டல், எரிஞ்சக்காடு, நாய்கடிச்ச முறிப்பு, தட்டாமாலை, சக்களத்து வேலி, சுவந்த முறிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது இடங்களைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. தங்கள் நிலங்களைப் பார்ப்பதற்கு மக்கள் கொக்கிளாய் ஆற்றை கடந்து செல்ல வேண்டும். ஆனால் ராணுவமோ அவர்களை ஆற்றைக் கடக்க அனுமதிப்பதில்லை. வெளி ஓயா என்ற பெயரில் ஒரு புதிய சிங்களப் பிரிவை அங்கு அரசு உருவாக்கி வருகையில் ராணுவத்தினரோ அப்பகுதி முழுதும் கண்ணி வெடிகள் நிறைந்துள்ளதாகக் கூறி வருகிறது. ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களோ அங்கு கண்ணி வெடிகள் எதுவும் இல்லையென்று கூறுகின்றனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் அவர்களுக்காக முயற்சி மேற்கொள்வதாகவும், எனவே அவர்கள் தங்கள் இடத்தை விட்டுவிட்டுச் செல்ல வேண்டாமென்றும் கூரியிருக்கின்றனர்.
கொக்கிளாயின் ஆழ்கடல் பகுதி ஏற்கனவே சிங்கள மயமாக்கப்பட்டு விட்டது. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் வரையிலான முழுப் பகுதியும் சிங்கள மீனவர்களின் ஏகபோகத்தில் உள்ளது. அவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளுடன் வந்து ஆக்கிரமித்துள்ளபடியால், மீள்குடியேற்றப்பட்ட தமிழர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
மணலாற்றின் பெயரை மாற்றி ‘வெலி ஓயா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அங்கு நிறுவப்பட்ட சிங்கள நிர்வாகம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தாயகத்தின் வடகிழக்குப் பகுதிகளின் நில இணைவு அமைவை நிரந்தரமாகப் பிரிப்பதாகும். அதே வேளையில் வட மத்தியப் பகுதியின் அனுராதபுரத்தையும், கொக்கிளாய் கிழக்கு கடற்கரையையும் இணைக்க சிங்கள நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சி பல நூற்றுக்கணக்கான சிங்கள குடியிருப்புக்களுடன் வெகு விரைவிலேயே ஒரு சிங்கள தேர்தல் தொகுதியை முல்லைத்தீவில் ஏற்படுத்தி விடும் நிலை உள்ளது.
நன்றி ஈழதேசம்
0 கருத்துரைகள் :
Post a Comment