இலங்கைத்தீவின் அரசியல் வெளியில் 13 பிளஸ் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் சிறிலங்காவுக்கான பயணங்களின் போதுஇ 13 பிளஸ் என்ற 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எனும் விடயம் பேசப்படுவது வழமையாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் சிறிலங்காவுக்கான பயணத்தையொட்டிய இன்றைய இலங்கைத்தீவின் அரசியலில்13 பிளஸ் பேசுபொருளாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, இலங்கைத்தீவின் இனநெருக்கடிக்கு தீர்வைக் காண, அரசியல் அமைப்பின் 13 திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்ல தான் உறுதியாக இருப்பதாக, சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்நிலையில்இ 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் என்னென்ன விடயங்களைப் பகிர்வது என்பது பற்றித்தான், இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணிஇ காவல்துறை அதிகாரங்கள், மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தில் இவை உள்ளடங்குகின்றன. இனி இதனை நடைமுறைப்படுத்துவது குறித்துதான் அரசுடன் பேச வேண்டும் என எம்.சுமந்திரன் தெரிவித்திருக்க, மறுபுறத்தே 13 பிளஸ்சில் காணி, காவல்துறை அதிகாரம் குறித்து சிறிலங்காவின் அரசுத் தலைவர் ஒருபோதும் கூறவில்லை என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
13வது திருத்தச் சட்டம் நாட்டில் நடைமுறையில் இல்லை. எனவே அதற்கு அப்பால் என்று கூறப்படுவதுஇ திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்டத்தையே குறிக்கின்றது எனவும் சிறிலங்காவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இக்கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ், இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வைக் காண்பதற்கு, அரசிலிருக்கும் கடும் போக்காளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அரசுத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 13 பிளஸ் குறித்தான வாதப்பிரதிவாதங்களில் தன்பங்கிற்கு கருத்துரைத்துள்ள சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சியாக ஐ.தே.க, ஜெனிவா ஐ.நா மனித உரிமைச் சபை கூட்டத் தொடரின் போது, தனக்கு ஏற்படப் போகும் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, 13 பிளஸ் எனும் பல்லிவியை சிறிலங்கா அரசுத் தலைவர் மீண்டும் ஒரு தடவை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெனீவா மாநாட்டில் இந்தியாவின் ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் உத்தியாகவே, இந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசுத் தலைவர் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க, சிறிலங்கா அரசு வழங்கிய பல உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துமாறு, அதற்கு அழுத்தம் கொடுக்காமல் இந்தியா அமைதியாக இருப்பது புரியாத புதிராகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரின் போது, தமிழர்களுக்கு நாங்கள் இவ்வாறானதொரு தீர்வை வழங்கவுள்ளோம் எனக் கூறி, தப்பித்துக்கொள்வதற்கு சிறிலங்காஅரசு கையாளும் உபாயம் என குறிப்பிட்டுள்ள ஐ.தே.க, இதன் போது இந்தியாவும் சிறிலங்காவின் போலி உறுதிமொழிகளை நம்பி அரசுக்கு பக்கபலமாக இருக்கும் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதுஇவ்வாறிருக்கஇ 13 பிளஸ் குறித்தான தனது கருத்தினை பதிவு செய்துள்ள ரொலோ அமைப்பின் அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜலிங்கம், போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 13 பிளஸ் என்று ஏமாற்றிய மகிந்த அரசு, மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடர் முடியும் வரையிலும்இ தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து கூறுபோடும் வரையிலும், சிறிலங்கா அரசு பேச்சு நாடகத்தை தொடரவே செய்யும் என குறிப்பிட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம்இ உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களைத் தாங்கள் ஆளக்கூடிய ஆட்சி அதிகாரத்தை, சர்வதேசத்தின் உத்தரவாதத்துடன் பெறுவதே கடந்த காலத்தில் கொடுத்த தமிழ் உயிர்பலிகளுக்கு ஈடாகும் என தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment