குருசேஷ்திரத்தில் போர் ஆரம்பமாக இருக்கின்றது. போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு கண்ணபரமாத்மா தேர்ச் சாரதியாக இருக்கின்றார். போர்க்களத்தில் அம்பு எய்யும் போர் வீரனை விட தேர்ச்சாரதியே மதியூகம் உள்ளவனாக இருக்கவேண்டும்.அதனால்தான் கண்ணன் பார்த்தனுக்கு சாரதியாக அமர்ந்து கொண்டான். குருசேஷ்திரத்தில் கெளரவர் தரப்பில் வீஷ்மர், துரோணர் உள்ளிட்ட பெரியவர்களைக் கண்டதும் அர்ச்சுனன் தளர்வுறுகிறான்.
எதிரிலே என் குருநாதர்- என் தந்தையிலும் பெரியோர்...இவர்களை எப்படி...முடியாது என்று மனம் சோர்கின்றான். நிலைமையை உணர்ந்த கண்ணபரமாத்மா அர்ச்சுனனைத் தேற்றத் தலைப்படுகிறார். போர்க்களத்தில் போர் வீரன் தளர்வுற்றால் தேர்ச் சாரதி இறங்கி ஓடுவான். ஆனால் இங்கோ அர்ச்சுனனை உசார் படுத்துகின்றார் தேர்ச் சாரதி. இதுவே உலகம் முழுவதும் வழுவின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய பகவத்கீதை என்று போன்றப்படுகின்றது.
அர்ச்சுனா! கொடுமையும் அதர்மமும் செய்பவர்கள் உயிரோடு நடமாடினாலும் அவர்கள் இறந்தவர்களே! என்று கண்ணன் உரைத்தார். இந்த உபதேசமே அர்ச்சுனனுக்கு ஆத்ம ஞானத்தைக் கொடுக்கின்றது. இந்த ஆத்ம ஞானம் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பாற்றுகின்றது. குருசேஷ்திரத்தில் கண்ணபரமாத்மாவின் உபதேசம் கூறுவது என்ன? தர்மம், நீதி, நியாயம் என்பவற்றைக் காப்பாற்ற வேண்டுமாயின், இவர் நம்மவர்இ நம் உறவு என்று இம்மியும் நினைத்தலாகாது.
அவ்வாறான நினைப்பு இருக்குமாயின், அதர்மத்தை, ஊழல் நிறைந்த நிர்வாகத்தைஇ மோசடியை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது. அதேநேரம் பகவத்கீதை எங்கள் மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். போரினால்இ இழப் பினால் மனவலிமையை இழந்தவர்களாக நாம் இருக்கிறோம். மனவலிமை இழப்பு எப்படி அர்ச்சுனனுக்கு தளர்வைக் கொடுத்து அவனின் வீரத்தைப் புறந்தள்ளியதோ, அதேபோன்று எங்கள் மக்களும் போரினால் மனவலிமையை இழந்த நிலையில் உள்ளனர்.
இந்நிலைமையானது எப்படியும் வாழலாம் என்ற வெறுப்புத் தன்மையை உருவாக்கிவிடும்.இன்று நாம் குறைபட்டுக் கொள்ளக்கூடிய கலாசார பிறழ்வு. இளைஞர்களின் மதுப்பாவனை என்ற விடயங்கள் அத்தனைக்கும் பின்னால், அவர்களின் வீடுகளில் இருக்கக்கூடிய துன்பங்கள்இ பெற்றோர்கள் விடும் கண்ணீர்இ காணாமல்போன உறவுகளின் நினைப்பு என்ற துயரங்கள் இருப்பதை மறந்துவிடலாகாது.
ஆகையால்தான், தமிழ் மக்களின் மீட்சிக்கான - எழுச்சிக்கான புதிய பகவத்கீதை ஒன்று இப்போது தேவைப்படுகின்றது. இந்தப் பகவத்கீதையை தரவல்ல பார்த்த சாரதியாரோ?
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment