சிறிலங்காவில் அனைத்துலக அரசியல் உறவுகள்

யுத்தமும் முடிவடைந்து ஆண்டுகள் இரண்டுக்கு மேலாகிவிட்டன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதுமே உடனடித் தலையீட்டை வேண்டி நிற்கும், மனிதாபிமானச் சீர்குலைவென்று ஒன்று ஏற்படத்தான் செய்கிறது.  இப்போதெல்லம், அனைத்துலக அவதானிகளின் கவனமும், அரசு சார்பற்ற நிறுவனங்களின் கவனமும், ருனீஷியா, எகிப்து, லிபியா, சிரியா என்று வேறு திசைகளில் திரும்ப ஆரம்பித்தாகிவிட்டது! இலங்கைத் தீவின இனச்சிக்கல் குறித்து உலகின் ஆர்வம் குறைந்துவிடுமோ என்று கருதவும்இடமுண்டு. இருந்துங்கூட, மே 2009 இல் இலங்கையில் நடைபெற்றவை , இலகுவாக ஒதுக்கித் தள்ளப்படக் கூடியவை  அல்ல.
இனப்பிரச்சினை என்பது நிலவிரிப்பின் கீழ்கூட்டித் தள்ளிவிட்டால், அது இல்லாமற் போயேவிடும் என்று கருதக்கூடியவிடயமல்ல !
இவ்வாறு  he International Association of Constitutional Law அமைப்பின்  journal of Foereign Relations சஞ்சிகையில்  Gibson Bateman அவர்கள் எழுதிய கருத்துரையில் பதிவு செய்துள்ளார். Gibson Bateman அவர்கள் நியூ யோர்கின் பிரபல சர்வதேச சட்ட ஆலோசகராக இருப்பதோடு லத்தீன் அமெரிக்கா தென்னாசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அரச சார்பற்ற மனிதநேய அமைப்புக்களில் பங்காற்றி வருபவர்.
இலங்கையின் இனநெருக்கடி குறித்து பல கருத்துரைகளை வழங்கியுள்ள அவர்கள் ‘சிறிலங்காவில் அனைத்துலக அரசியல் உறவுகள் கூட ஒரு விளயாட்டுத் தான்’ எனும் தலைப்பில் சஞ்சிகையில் பதிவு செய்த கருத்துரையினை தமிழாக்கம் செய்து வழங்குபவர் : தெய்வேந்திரம் கந்தையா (கனடா)
சிறிலங்காவில் அனைத்துலக அரசியல் உறவுகள் கூட ஒரு விளையாட்டுத் தான்!
கொடுத்த வாக்கைத் தவறாது காப்பாற்றுவது போல, சிறிலங்கா அரசானது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட்டு விட்டது. அதுமட்டுமல்லாது  ‘மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐந்தாண்டு தேசிய திட்டம் 2011-2016′ என்ற பெயரில் ஒருபுதிய ஆவணத்தையும் அது வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ஆவணமானது, ஐ.நாவின் மனிதஉரிமைகள் ஆணையத்தின் முன்னால் (எச் ஆர். சீ) 2008ம் ஆண்டு சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாகவே உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
இங்கே கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், இந்த இரு ஆவணங்களும் ஒரே நோக்குடன் உருவான ஆவணங்கள் தான். சட்ட நியாய சம்பந்தமான உள்நாட்டு அமைப்புக்கள் யாவும், நாட்டினுள்ளே சிறப்பாக தொழிற்படுகின்றன என்ற மாயத் தோற்றப்பாடொன்றை உருவாக்கி, அனைத்துலகச் சமூகத்திற்கு தாலாட்டுப் பாடுவதே நோக்கமாகும்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போலவே, ஐந்தாண்டுத்திட்ட அறிக்கையும், நல்லம்சங்கள் சிலவற்றை உள்ளடக்கித்தான் வெளிவந்துள்ளது. ஆனால் அங்கே பொதிந்திருக்கும் பொய் புழுகுகளும், சொல்லாமல் விடப்பட்டுவிட்ட விடயங்களுளோ ஏராளம், ஏராளம்! எடுத்துக்காட்டொன்றை இங்கே குறிப்பிடுவதானால,; அந்த அறிக்கையில் சித்திரவதைத் தடுப்புச் சம்பந்தமான அத்தியாயத்தைப், பரிசீலிக்கும் ஒருவருக்கு, அது வெறும் வேடிக்கையாக வந்தமைந்திருப்பது ஒரு வேதனைக்குரிய விடயமாகத்தான் தென்படும்!
சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை சித்திரவதை என்று ஒன்று வருமானால் அதனை அணுவளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதுதான் அரசின் கொள்கை என்கிறது இந்த அறிக்கை. எழுந்தமானத்துக்கு எடுத்துவிடப்பட்ட இந்தக்கூற்றானது, எவ்வளவு தூரம் உண்மையை மறுதலிக்கின்றதென்பது (அண்மையில் ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான கழகத்தினால் (சீ.ஏ.ரீ)தயாரிக்கப்பட்டஅறிக்கையுட்பட) அளவு பரிணாமமின்றிக் குவிந்து கிடக்கும் தடயங்கள், சாட்சியங்களைப் பரிசீலிக்கும்போது தௌ்ளெனத் தெளிவாகும்.
இவை அனைத்துக்குமே சிகரம்வைத்தாற்போல், வந்தமையும் கொடுமை தான் இந்தச் சித்திரவதை தடுப்புத் திட்டத்துக்குப் பொறுப்பான முக்கியமான அமைப்பாகப் பாதுகாப்பு அமைச்சு இனங்காணப்பட்டிருப்பது எனலாம். இது குறித்து எவரேனும் கலவரமடைவதற்குக் காரணமேதும் வேண்டுமானால், அண்மையில்சண்டேலீடர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்திருந்த விவரமான ‘கடந்த சிலஆண்டுகளுக்குள் மட்டும் வடக்கிலும் – கிழக்கிலும் இருந்து 500 பேர்கள் அளவில் காணமற்போயிருக்கிறார்கள்’ என்கின்ற அந்த ஒன்றே போதும்!
மகிந்த ராஜபக்சவின்ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகி சீர்குலைந்துகொண்டே இருப்பது கண்கூடு. ஆனாலும்தான், 2012 மார்ச்சில் நடை பெறவுள்ள மனிதஉரிமைகள் சபையின்  19வது அமர்வில் இந்த ஐந்தாண்டுத்திட்டம்சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது!
ஜெனீவாவில் நடைபெறப்போவதுதான் என்னவோ?
ஒரு பேச்சுக்குச் சொல்லப்போனால் ராஜபக்ச அரசுக்குத் தலைவலிதரக் கூடிய விடயங்கள் நிறையவே அங்கே இருக்கின்றன! மனித உரிமைகள் சபை சம்பந்தமான விவாதங்களும், இவை பற்றிய அணிசேர்ப்பும் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டன. யுத்ததின்குற்றப் பொறுப்பு சம்பந்தமாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எதுவுமே கூறாதது பற்றி அண்மைக்காலத்தில் வெளிநாடுகள் பலவும் பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ளன. இருந்துங்கூட, இங்கே சிறிலங்காவின்ன் நிலைப்பாடானது, யுத்தமுடிவில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் பற்றி, எவ்வளவு தான் நம்பகம் வாய்ந்த தடயங்களைக்கொடுத்தாலுங்கூட, விசாரணைகளை மேற்கொள்ள  மறுப்பதாகவே இருக்கிறது. அரசின்அதிகாரிகளைப் பொறுத்தவரையில், யுத்த இறுதியில் நடை பெற்ற சம்பவங்கள் பற்றிய பேச்சை எடுக்க அவர்கள் எவரும் தயாராகவில்லை என்பது தெட்டெனத் தெளிவு.

2012ம் ஆண்டு இளவேனிற் காலத்தில், ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கூட்டத்தொடரில், அனத்துலகு சார்ந்த குற்றவிசாரணைப் பொறிமுறை ஒன்றுபற்றிக், கடுமையான வற்புறுத்தல்கள் இடம்பெறலாம். அங்கே எதுவும் முற்றாகவில்லை என்றால், மீண்டும் கோடை அமர்வு என்று ஒன்று இருக்கத்தான் செய்கின்றது.

இந்த இரண்டு அமர்வுகளிலும் எதுவிதத்தீர்மானங்களும் இடம்பெறாது பார்த்துக்கொள்ள முடியுமானால், அதன் பிறகு எதுவுமேநடக்கப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டோடு, ராஜபக்ச அரசு தன் பதவிக்காலம் முழுவதுமே கண்ணை மூடித் தூங்கலாம்! 
அனைத்துலக அரசியல் முன்னெடுப்புக்களை பொறுத்தவரையில், அவை எப்போதுமே வெற்றி-தோல்வி இன்றித்தான் முடிவடைய வேண்டுமென்று எவரும் எதிர்பார்க்கமுடியது. உண்மையை வளைத்துப்போடும் கைங்காரியத்தையும், முழுப்பூசணிக்காயைச் சோற்றுட் புதைக்கும் கைங்காரியத்தையும், அரச அதிகாரிகள் திறம்படச் செய்துகொண்டிருக்கும் வரையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், மனிதஉரிமைகள் சம்பந்தமான தேசிய ஐந்தாண்டுத் திட்டமும், அரசின் கையில் மிகப்பலம்பொருந்திய ஆயுதங்களாகத் தான் இருக்கப்போகின்றன.

இங்கே ஒரு குறிப்பு: இந்த அறிக்கைகள் இரண்டுமே உண்மையைக் கயிறு திரிப்பவை என்பதனால், இந்த ஆவணங்கள் சிறிலங்கா அரசுக்கெதிராகப், பயன்படுத்தப்பட வேண்டியவை என்பது தான் உண்மை.
இவை உறுதிப்படுத்தும்செய்தி ஒன்று உண்டென்றால், அது ராஜபக்ச அரசு மனித உரிமைகள் பற்றி அலட்டிக்கொள்ளும் நிலையில் இப்போதைக்கு இல்லை என்பது தான்!
எனவே இங்கே உருவாகியிருப்பது ஒரு விசித்திரமான நிலைப்பாடு எனபதனை நாம் மறுப்பதற்கில்லை. 
நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கிய ஏற்பாடுகளானாலும் சரி, தேசிய ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கிய ஏற்பாடுகளானாலும் சரி, இவை முற்றிலும் திருகுதாளங்களின் பாற்பட்டு, சுயாதீன இயக்கத்தை துடைத்டெறிந்த ஏற்பாடுகளாகும். நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு சுயாதீன அமைப்பல்ல என்பதுவும், அதன் உறுப்பினர்கள் எண்மருமே மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும் உலகறியும்.

ஆனலும் கூட, சிறிலங்காவுக்கு உள்ளேயானாலும் சரி, வெளியே ஆனாலும் சரி, மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத்திட்டமென்பது அதிகம் அறியப்படாத ஒன்றாகவே இருந்துவருகின்றது. அந்தத்திட்டத்தின் முதல் வரைவை மேற்கொண்டிருந்தவர்கள் உண்மையில் அறிவியலாளர்கள், சுதந்திரமான சிந்தனையாளர்கள், சிவில் சமூகத் தலவர்கள் என்று திறமை வாய்ந்த எண்மர் குழுவினராவர்.
அதன் பிற்பாடு, அவர்கள் அதிலிருந்து தவிர்க்கப்பட்டு விட்டார்கள் என்பது தான் உண்மை. இந்தத் திட்டமானது, அனைத்து வல்லுனர்களையும் உள்ளக்கி, கவனமாக வரையப்பட்ட திட்டமென்று இப்போது சிறிலங்கா அரசு கூறுவதானது, மகா மட்டமானது.
அப்படி எதுவுமே இடம்பெறவில்லை என்று அக்குழுவின் உறுப்பினராக இருந்த ரோஹான்எதிரிசிங்க இப்போது கூறுவது இங்கே கவனிக்கப்பட வேண்டியதொன்று. வரைவுக்குழு உறுப்பினர்கள், முதல் வரைவை மட்டும் தான் அங்கீகரித்து இருக்கின்றார்கள் அன்றி, வரைவயல்ல.
இவ்வாறு, எல்லாவகையிலும் திராணி குறைக்கப்பட்ட, அந்தத் திட்டத்தை இது சரியானவழியிலமைந்த ஒரு திட்டமென்று, அரசு பரப்புரை வேறு செய்வது மகா கபடத்தனமானது!


உண்மையில் இதை உருவாக்கப் புறப்பட்ட அரசின் முயற்சியை, குள்ள நரித்தனம் வாய்ந்த சதித்திட்டமென்று தான் குறிப்பிட வேண்டும்!


நிலைமைகள் இவ்வாறு இருந்தும்கூட, பொதுவாக நிலவும் ஒரு பீதிநிலை காரணமாக, எவருமே எதுவிதத்திலுமே இதனைக்கண்டிக்கத் தயாராகவில்லை என்பது கண்கூடு. ஆண்டாண்டு காலமாக எதிர்க் கட்சிக்களுக்கிடையே இருந்து வந்துள்ள பிணக்குகளானவை, ராஜபக்ச அரசுக்குக் கிடைத்த உண்மையான வரப்பிரசாதமென்பதில் ஐயமேதுமில்லை. சிவில் சமூகத்தினுள்ளே நிலவும் பிணக்குப்பாடுகளும், அரசாங்கத்தின் நிலையைப் பலப்படுத்த உதவியுள்ளன என்பதும்தெளிவு!
இந்த ஆண்டைப் பொறுத்தவரைக்கும், ஜெனீவாவில் இடம்பெறப்போகும்ஆரவாரம் நிறைந்த விவாதங்களுக்கப்பால், ஐ.நாவினால் இரண்டு ஆண்டுகளுக்கொரு தடவைமேற்கொள்ளப்படும், கால இறுதி மீளாய்வு என்று ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது.
இதுதொடர்பில், சிறிலங்கா அரசு ஏற்கெனவே முழுமையான உத்வேகத்துடன் செயற்பட ஆரம்பித்துவிட்டது. 
சனவரி, பெப்ரவரி மாதங்களில், அரசு பல்வேறு நாடுகளிலிருந்தும், அரச உயர்நிலையாளர்களை கொழும்பில் வரவேற்கத் தொடங்கிவிடும்.

இந்த வருகைகளை ஒரு பரப்புரை மேடையாக்கி , முழுமையான கயிறுதிரிப்பு என்று மட்டுமே விவரிக்கக்கூடிய ஒரு பொய்யான பரப்புரையை பெப்ரவரி இறுதியிலும், மார்ச் முற்பகுதியிலும், ஜெனீவாவில் மேற்கொள்வதற்கான பிரயோகத்தளமாகவும், அதனைப்பயன்படுத்தும்.
இந்த அடிப்படையில்தான், இலங்கைத்தீவின் நிலைவரமானது, எவ்வாறு தர்ம நியாயங்களின் பாற்பட்டு, திருப்திகரமாக அமைந்துள்ளது என்பதற்கு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையும், தேசிய ஐந்தாண்டுத்திட்டமும், உண்மையான எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன என்று அரசு நிறுவ முற்படும். 
இது அரங்கேறும்போதுதான், இது எவ்வளவு கோமாளித்தனமான நாடகம் என்பது புலனாகும்! 
இப்போதைய நிலைவரத்தை, சற்றுக் கணக்கிடுவோமனால், ஏற்கெனவே ஜனவரி 2010 இல் ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்கா நடுத்தர வருமான நாடொன்றாக அறிவித்துள்ளது.



யுத்தமும் முடிவடைந்து ஆண்டுகள் இரண்டுக்கு மேலாகிவிட்டன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதுமே உடனடித் தலையீட்டை வேண்டி நிற்கும், மனிதாபிமானச் சீர்குலைவென்று ஒன்று ஏற்படத்தான் செய்கிறது.
இப்போதெல்லம், அனைத்துலக அவதானிகளின் கவனமும், அரசு சார்பற்ற நிறுவனங்களின் கவனமும், ருனீஷியா, எகிப்து, லிபியா, சிரியா என்று வேறு திசைகளில் திரும்ப ஆரம்பித்தாகிவிட்டது! 
உலகின் ஆர்வம் குறைந்துவிடுமோ என்று கருதவும் இடமுண்டு. இருந்துங்கூட, மே 2009 இல் இலங்கையில் நடைபெற்றவை ,இலகுவாக ஒதுக்கித் தள்ளப்படக் கூடியவை அல்ல. 
இனப்பிரச்சினை என்பது நிலவிரிப்பின் கீழ்கூட்டித் தள்ளிவிட்டால், அது இல்லாமற் போயேவிடும் என்று கருதக்கூடியவிடயமல்ல!

எதிர்காலத்தை நோக்கி……………….
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது, இராணுவத்தை முற்றுமுழுதாகக், குற்றப் பொறுப்புகளில் இருந்து விலக்கி விட்டிருந்தாலும்கூட, அந்த அறிக்கையில் நல்ல அம்சங்கள் வேறு பல இருப்பதனை நாம் முற்றாக மறுக்க முடியாது.
அதிகாரப்பரவல், நில உரிமைகள், வடக்கு-கிழக்கில்ருந்து இராணுவ விலக்கல், பாதிக்கபட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களுக்குமான இழப்பீடுகள் என்ற, இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை தாம்! 
தேசிய ஐந்தாண்டுத்திட்டத்திலுங்கூட, இவ்வகையிலான நல்லம்சங்கள் பல காணப்படுகின்றன. 
எனினும், இந்த நல்லம்சங்களில் எவற்றையேனும் நடைமுறைப்படுத்தும் சாத்தியக் கூறுகள் சிறிலங்கா அரசுக்கு உண்டோவென்றால், அது தான் இல்லை.





2008ம் ஆண்டு ஐ.நாவின் கால இறுதி ஒருங்கிணைந்த மீளாய்வின்போது, அரசு இணங்கிய ஏற்பாடுகளில் ஒன்றையேனும் இதுவரையில் நடைமுறைப்படுத்தி உள்ளதோவென்றால், அதுதான் இல்லை! 
நல்லிணக்க ஆணைக்குழுவை புகழ்ந்து தள்ளினாலுங்கூட, அதன் இடைக்கால அறிக்கையில், தரப்பட்ட மதியுரைகளைக்கூட அரசு புறக்கணித்தே இருந்திருக்கிறது. 
இன்றைய இலங்கையின் அரசியற் பேச்சுவழக்கில் ‘மதியுரை’ என்பது ஒரு அர்த்தமற்ற சொல்லாக மாறிவிட்ட இந்த நாட்களில், இந்த வகையிலான மதியுரைகளில் நாட்டம் கொள்பவர்கள் எவருமிலர்! 
அந்த வகையில், சரி, மதியுரைகளைத்தான் மறந்து விடுவோமே! ஒரு நாட்டினது யாப்பிற்கே மதிப்புத்தரமுடியாத அரசொன்றின் கோலோச்சலை என்னெவென்று தான் விவரிப்பது?


எடுத்துக்காட்டாக ஒன்றைத்தருவதானால், வடக்குக்-கிழக்கிற்கு அதிகாரப் பரம்பலைத் தரும் யாப்புத்திருத்தம் இல13 ஐப் பாருங்கள்! இதனை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் கொஞ்சங்கூட அசைந்துகொடுத்து உதவமுடியாத ராஜபக்ச அரசின் நிலைப்பாடானது, நிலைமைகள் சீர்திருந்துவதர்கு எந்தவகையில் தான் உதவமுடியும்?

ஏன்! இந்நாட்களில்….
தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையை ஒருதடவை கவனியுங்கள்! உங்களுக்கு மனதில் தென்படுவது உண்மயிலயே ஒரு அரசியல்முன்னெடுப்பா, அல்லது ‘கோடேற்றுக்காகக் காத்திருகின்றோம்’ என்ற திரைப்படத்தில்இருந்து ஒரு காட்சியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 
கூர்ந்து கவனித்தால், யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து, நாளுக்கு நாள் சிறிலங்கா  அரசு,  ஒரு எதேச்சாதிகார அமைப்பாக மாறிக்கொண்டே வருகின்றதென்று திடமாக நாம் கூற முடியும். 
நாட்டின் சரித்திரம், மக்களாட்சி மரபினால் ஆனதென்று என்பதற்காக, அந்த மரபு என்றென்றுமே நிலைத்து நிற்கத்தான் போகின்றதென்று, நாம் அடித்துக் கூறிவிட முடியாது. 
2009 இன் பின்னால் மீதிருந்த சரிபார்ப்புக்களுக்கும் பலச் சமநிலைப்படுத்தல்களுக்குமான, ஏற்பாடுகள் அனைத்தும், கொஞ்சம் கொஞ்சமாகக் விடுபட்டே வந்துவிட்டன.
2010 இல் நிறைவேற்றப்பட்ட 18வது யாப்புத் திருத்தம், ஆட்சித்தலைவர் மீது இன்னும் அதிகமான அதிகாரங்களை ஈர்த்தளித்திருக்கிறது. எனினும்உங்களுக்கு நாம் உவந்தளிக்கும் செய்தி இது தான்: ‘இதுவரையில் ராஜக்பக்ச, ரொபெர்ட் முகாபேயாக உரு மாறிவிட்டார் என்ற செய்திகளில், எதுவித உண்மையுமில்லை. 

சிறிலங்கா சிம்பாப்வேயாக மாறிவிட்டதென்ற செய்தி கூட உண்மையாகத் தெரியவில்லை’
நன்றி நாதம் 




Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment