பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும்

எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் [பாகிஸ்தான், சிறிலங்கா] முனைப்பாக இருந்து வந்துள்ளனதென்னாசிய நாடுகளிலே சிறிலங்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதை இருதரப்பு அரசாங்கங்களும் பலமுறை வெளிப்படுத்தி உள்ளன. தொடர்ச்சியான தமது உறவுநிலையை மிக திறந்த முறையிலே பேணிவருகின்றன. 


இருநாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைக்கு உளார்த்தமாக அவற்றின் இந்திய எதிர்ப்பு போக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தத்தமது நலன்களுக்கு ஏற்ற வகையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும்  அவ்வப்போது செய்து கொள்கின்றன. ஆனால் உள்நாட்டில் சமூக ரீதியாக கொண்டுள்ள இந்திய எதிர்ப்பு மனோநிலை காரணமாக பதவிக்கு வரும்  எந்த அரசாங்கமும் இவ்விருநாடுகளிலும் இந்திய எதிர்ப்பு போக்கிலிருந்து தவறிப்போக முடியாத நிலையில் உள்ளன.

வுரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு இக்கட்டான காலங்களில் சிறிலங்காவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்பட்டதை காண்கிறோம். அத்துடன் எவ்வெப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில்  இவ்விரு நாடுகளும் முனைப்பாக இருந்து வந்துள்ளன.

தனது நிலையை கடுமையுடன் எடுக்க முடியாத இந்தியாவோ தனது தேவை கருதி இவற்றுடன் கூட்டாக இயங்கி வருகிறது. இந்தியா தனது போக்கை மாற்றி உறுதியான வெளியுறவு கொள்கையை கையாள வேண்டும் என்பது பல ஆய்வாளர்களின் வேண்டுகோள்களாக இருந்து வருகிறன.

இந்நிலைக்குரிய சாதியப்பாடுகள் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் சமபல நிலையை பேணும் பொருட்டு உலக ஒழுங்கிற்கு ஏற்றாற்போல் எண்பதுகளில் அமெரிக்காவுடனும். தற்போது சீனாவுடனும்  சிறிலங்காவைப் போலவே தமது நலன்களின் அடிப்படையில் எதிராளியுடன் கூட்டு வைத்து இந்தியாவை கையாள முனைகின்றன. 

அல் கைதா இயக்கத்தலைவர் பின் லாடன் பாகிஸ்தான் எல்லைக்குள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அரச ரீதியான உத்தரவு எதுமின்றி பாகிஸ்தானிய  எல்லைக்குள் நுழைந்து அந்த தாக்குதலை செய்த அமெரிக்க போக்கின் மீது கோபம் கோபங்கொண்ட பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் உடனடியாக சீனாவுக்கு தமது பிரதமரை அனுப்பி வைத்தனர்.

அமெரிகாகாவுக்கு எதிர்பலமாக சீனாவை பார்க்கும் பாகிஸ்தான் சீனாவூடாக தனது அதிருப்தியை தெரிவித்தது. சீனாவும் தனது தரப்பிற்கு ஒருநாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் இந்னொருநாடு நுழைவதை கண்டித்திருந்தது.

இந்த போக்கை கருத்தில் எடுத்து கொண்ட அமெரிக்க ஆய்வு நிறுவனமான  The Heritage Foundation  சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள உறவு நிலை குறித்த ஆய்வு ஒன்றை நடாத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதிலே சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவியில் வரையறைகளை கடைப்பிடித்து வந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன். மிகவும் தேவையான காலப்பகுதிகளில் கூட சீன உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளங்கப்பட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இருந்த போதிலும் கடந்த காலங்களில் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளின் போது பாகிஸ்தான் மீது மிக்கடுமையாக நடந்து கொண்ட போதெல்லாம் இஸ்லாமாபாத் தலைமை பீஜிங் பக்கம் அதீதமாக சார்ந்து விடக்கூடிய தன்மைகள் குறித்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர்.

இதன் பொருட்டு கணிசமான அளவு பொருளாதார இராணுவ உதவிகளை கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா பாகிஸ்தானுக்க வழங்கி வந்திருந்தது.

ஆனால் சீனாவின் கரிசனையோ பாகிஸ்தானில் அதீதமாக படர்ந்திருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதத்திலேயே இருந்து வந்திருக்கிறது என்பது இந்த ஆய்வறிக்கை கண்டறிந்த விடயமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் வட மேற்கு மாநிலமான சிங் ஜியாங் [Xinjiang] பகுதியல் வாழும் உய்கிர் [Uighur] இன இஸ்லாமியர்கள் ஒரு போராட்டத்தை நடாத்தி இருந்தனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் உய்கிர் இன போராளிகள் இராணுவப்பயிற்சி பெற்று கொள்வதற்குரிய வசதிகள் தென்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானின் தயவு சீனாவுக்கு தேவைப்பட்டது. 

பாகிஸ்தானிய வடகிழக்கு எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமைகள் எப்பொழுதும் தளர்வுற்ற நிலையிலேயே இருப்பதால் போராளிகளின் நடமாட்டம் குறித்து சீனா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி வந்தது. இதனாலேயே மேற்கு சீன பகுதிகளில் வன்முறை அதிகரித்து வருகிறது என்பது சீன அதிகாரிகளின் குற்றசாட்டாகும்.

அதேவேளை அதீத பாதுகாப்ப நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் உய்கிர் சமூகத்தினுள்ளே கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்ட சீன அரசு ஆப்கனிஸ்தானில் நிலைகொண்டு இருக்கும் நேட்டோ படைகளுக்கு தளபாடஉதவிகள் புரிவதன்மூலம் தனது எல்லைக்குள் இடம் பெறும் கிளர்ச்சிகளை  கட்டுக்குள் வைத்திருக்கிறது. 

தனது உள்நாட்டு சமூக கிளர்ச்சிகளை கட்டுக்கள் வைத்திருக்க முனையும் சீன அரசுக்கு பாகிஸ்தானிய நிலையை கணிசமான அளவு தந்திரோபாயத்துடன்  பரந்த அளவில் கையாள வேண்டிய தேவை உள்ளது.

இத்தகைய சீனாவின் பரந்தளவிலான பாகிஸ்தான் மீதான வெளியுறவுக் கொள்கைக்கு அயல் நாடான இந்தியாவும் முக்கியம் வாய்ந்தது. வல்லரசான அமெரிக்க ஒத்தாசையுடன் சீனாவுடன் சமபலநிலையை எட்ட முனையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முக்கியமான தாகும்.

சீன பாகிஸ்தானிய பாதுகாப்பு ஒப்பந்த உறவுநிலை கடந்த பல பத்தாண்டுகளாக உறுதியாக இருந்து வருகிறது. இந்தியாவை கொள்ளடக்கி வைக்கும் திட்டத்தில் பாகிஸ்தானிய ஆயுத பலப்பெருக்கம் முக்கியமான தந்திரோபாயமாக சீனாவுக்கு படுகிறது. 

இதன் அடிப்படையில் சீனா, பாகிஸ்தானுக்கு அணு ஆய்வு தொழில் நுட்பங்களை விற்றது, இராணுவ தளவாட உற்பத்தி மையங்களை விற்றது, சீன தயாரிப்பு தாக்குதல் விமானங்களை கொடுத்தது. 

ஒருகாலப்பகுதியில் இந்தியாவுடன் மோத வேண்டிய நிலை ஏற்படுமிடத்து மோதற்களத்தை இரு முனைப்பட்டதாக ஆக்கி விடும் சிந்தனை கொண்டது இந்த உதவிகள் என்பது இந்திய இரானுவ ஆய்வாளர்கள் கருத்தாகும்.

சீன அரசால் வழங்கப்பட்டவற்றில் அணுஆயுத தொழில்நுட்பமும் நீண்டதுர ஏவுகனை தொழில் நுட்பமும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் அடிப்படை வாதிகளின் கையில் அணுஆயுத தெழில் நுட்பமும் அவற்றை கையாழும் சக்தியும் சென்று விடக்கூடாது என்பது குறித்து மேலைதேய பாதுகாப்பு ஆய்வாளர்கள் பெரும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அணு செறிவுபடுத்தும் தொழில்நுட்பம் 2003ம் ஆண்டில் பாகிஸ்தானில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதை பாகிஸ்தானிய அணு விஞ்ஞானி Abdul Qadeer (A.Q.) Khan வெளிப்படுத்தியிருந்தார்.  இதன் மூலம் பாகிஸ்தானில் அணுதொழில் நுட்ப நடவடிக்கைகள் அமெரிக்காவினால் மிக கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனா அமைத்து தரவிருந்த மேலும் இரு அணுசேமிப்பு ஆலைகளை அமெரிக்கா மறுத்திருந்தது. புதிய அணு வழங்கல் கூட்டு நாடுகளில் அங்கம் வகிக்கும் சீனா இந்தமுயற்சியை கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் வேண்டு கோளாய் இருந்தது. ஆனால் சீனாவோ அணுசேமிப்பு ஆலைத் திட்டம் 200ம் ஆண்டு நிறுவகம் பெற்ற அணு வழங்கல் கூட்டு ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்பே தெடங்கப்பட்ட ஒப்பத்தத்தின் அடிப்படையிலே அமைக்கப்படுவதாக கூறி விட்டது.

ஊழல்கள் நிறைந்த நிர்வாக கட்மைப்புகள், பொறுப்புகளை உணர்ந்து செயற்பட முடியாத அரசியல் தலைவர்கள், இலகுவாக விலைபோகக்கூடிய விஞ்ஞானிகள், அடிப்படையில் மேலைத்தேய எதிப்பு மனோநிலை கொணட இஸ்லாமியவாத சமூக கடடமைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்ட பாகிஸ்தானில், அணுவிஞ்ஞானம் ஈரானின் பக்கம் திரும்பி விடுவதற்கோ அல்லது இந்திய மற்றும் மேலைத்தேய எதிர்ப்பு பண வலு கூடிய பயங்கரவாத கட்டமைப்புகள் கையில் சிக்கி விடுவதற்கோ மிக இலகுவான ஏதுகள் இருக்கிறன. இந்த நிலைமை இந்திய அமெரிக்க கூட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிகவும் கரிசனைக்குரிய பகுதியாகும்.

சீனாவை அமெரிக்காவிற்கும் மேலான தனது பாதுகாப்பு நண்பனாக பாகிஸ்தான் கருதுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் சீனாவோ பொருளாதார ரீதியாக பாகிஸ்தானுக்கு உதவிகளை கட்டுக்குள் வைத்து கொண்டு ஆயுத விற்பனைகளை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பொறுப்பு எடுத்து கொள்ளவிரும்பாத சீனா பாகிஸ்தானை இந்திய மேலைதேய நாடுகளின் எதிரியாகவே காண முனைகிறது.

இங்கே ஆய்வாளர்களால் அதிகமாக பேசப்பட்டு வந்த குவாடார் துறைமுக கட்டுமானம் மிக முக்கியமானதாகும். 250 மில்லியன டொலர் செலவில்முதற்கட்ட  வேலைகளில் எண்பது சத விகிதம் பூர்த்தியாகிய நிலையில் இரண்டாம்கட்ட வேலைகளுக்கு சீனா மேலும் 500 மில்லியன் டொலர் தேவையென கேட்டதால் பாகிஸ்தான் அரசு சிங்கப்பூர் துறைமுக அதிகாரசபையுடன் இந்த துறைமுகத்தை நடாத்துவதற்கான 25 ஆண்டு ஒப்பந்தத்தை செய்துள்ளது. 

அதேவேளை இந்த துறை முகத்துடன் தொடர்புடைய வீதிகள். எரிபொருள் எண்ணைக் குழாய்கள் உட்பட துறைமுகத்தை சூழ உள்ள பகுதி ஏற்றுமதி வலயமாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் நிலுவையில் உள்ளது.

இந்திய அமெரிக்க கவனத்திற்கு உட்பட்ட தமது துறைமுக திட்டத்தை முக்கியப்படுத்தும் விதமாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தாம் சீன கடற்படை முகாம் அமைப்பதற்குரிய அழைப்பை விடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.இந்த அறிக்கையை சீனா மறுதலித்திருந்தது பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

தனது உள்நாட்டு கிளர்ச்சிகளில் செல்வாக்க செலுத்த கூடிய நாடு பாகிஸ்தான் என்பதை நன்கு உணர்ந்த போதிலும் பிராந்திய அனைத்துலக நிலைமைகளுக்கு அமைவாக பாகிஸ்தானை கையாள்வதில் சீனா மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. 

அதேவேளை இந்திய கொள்ளடக்கும் கொள்கைக்கு ஏற்ற வகையில் தனது எரிபொருள் வழங்கல் பாதையில் அமைந்துள்ள சிறிலங்காவை சீனா எவ்வாறு கையாள முனைகிறது என்பதையும் சிறிலங்கா பாகிஸ்தான் போக்குகளை இந்தியா கையாளும் நிலை குறித்தும் தெடர்ந்து பார்க்கலாம்.

நன்றி புதினப்பலகை 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment