சிங்களத்தின் சுதந்திரதினம் - தமிழீழத்தின் துயரதினம்


சிறிலங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து, அதன் மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது. பாதுகாப்பு சபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலம் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. அத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகின்றன. சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.


சிறிலங்கா அரசின் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசு ஒரு குற்றமிழைத்த நாடாகவே பார்க்கப் படுகிறது. சிறிலங்கா, மனித நேயத்திற்கு எதிராக குற்றம் இழைத்த நாடு என்று இந்த உலகமே கூறி நிற்கும்போது- சிறிலங்காவை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு சபையில் இருக்கும் ரஷ்யா, சீனா, இந்திய போன்ற நாடுகளும் முன்னிலையில் நிற்கின்றன.


இந்த சர்வதேச போட்டியில் தமிழர் நாம் சிக்கி நிற்கின்றோம்.


இன்று உலகமே சிறிலங்கா குற்றமிழைத்த நாடு என்று கூறி இருக்கும் நிலையில், சிறிலங்கா போர்க்குற்றம் மட்டும் இழைக்கவில்லை, 1948ல் அல்ல, 1917ல் இருந்தே சிங்கள தேசிய இனவாதிகள் ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாட்டில் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.


யூதர்கள் எப்படி 1948ல் இருந்து பாலஸ்தீன மக்களை தமது நிலங்கள், குடிமனைகளில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் நிலங்களில் குடியேற்றங்களை உருவாக்கினார்களோ அதே வடிவத்தை நாம் சிறி லங்காவில் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிறிலங்காவில் 1948ல் ஆரம்பித்த இனவாத படுகொலைகள்,தொடர்ச்சியான இன அழிப்பு, சிங்களமயப்படுத்தல் என்பன 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பின் உச்ச நிலையைக் கண்டுள்ளன.


1948யில் இருந்து சிறிலங்காவில் தமிழர்களுக்கு என்ன நடந்தது?


அங்கு நடந்தது ஒரு இனத்தை அடியோடு அழிக்கும் நீண்டகால செயல் திட்டம். சிறிலங்கா சரித்திரத்தில், மகாவம்சத்தில் எழுதப்படாத திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.  சிறிலங்காவில் நடந்தது, நடந்து கொண்டு இருப்பது ஒரு இனப்படுகொலை என்பதை இன்று நாம் உரத்து கூறவேண்டிய காலம். இலையேல் பாலஸ்தீன மக்கள் போல் 18% நிலப்பகுதியில் வாழும் அளவுக்கு தமிழர்கள் நாம் தள்ளப்பட்டு விடுவோம்.


உலக தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், சிறிலங்கா ஒரு குற்றமிழைத்த நாடு என்று எல்லோரும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில்,  தொடர்ந்தும் சிறிலங்காவில் தமிழர்களை முற்றாக அழிக்கும் இனப்படுகொலை நடந்து கொண்டிருகிறது.  உலத்தில் பல பகுதிகளில் நடந்து மறக்கப்பட்டிருக்கும் பல இனப்படுகொலைகளில் தமிழர்களின் இனப்படுகொலையும் ஒன்றாக மாறிவிடக்கூடாது.


உலகத்தில் மிகவும் பழமையான இனம், பழமையான கலாச்சாரம், பழமையான நாகரீகம்- தமிழர் அழிந்து விட நாம் காரணமாக இருந்து விடக்கூடாது. சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்கவும், தமிழர்களுக்கு நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேசத்தினது என்பதையும் வலியுறுத்தி நாம் எமது மவுனம் கலைத்துப் போராடுவோம்.


பெப்ரவரி 4!  சிறிலங்காவின் சுதந்திர தினம்!


பெப்ரவரி 4  சிறிலங்காவின் இனப்படுகொலை தினமாக மாற்றுவோம். எல்லோரும் ஒரே குரலாக பெப்ரவரி 4 சிறிலங்காவின் இனப்படுகொலை தினம் என்று வலியுறுத்துவோம். தமிழீழ மக்களை குற்றவாளியின் கையில் இருந்து விடுதலை செய்ய ஒரே குரல் கொடுப்போம். வடக்கு கிழக்கு தமிழீழ பிரதேசங்களை மீண்டும் இணைக்க குரல் கொடுப்போம்.


நன்றி ஈழதேசம் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment