தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 38 வது ஆண்டு நினைவு தினம்

1974 ம் ஆண்டு ஜனவரி 3 ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை தமிழ்மக்கள் தமது மொழி,பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசாங்கம் இதனை ஏற்றுக் கொள்ளாமல் கொழும்பில் நேரடியாகவும் யாழ்ப்பாணத்தில் மாநகர மேயர் ஊடாகவும் தொடர்ச்சியான தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் மாநாடு நடைபெறுவதற்கான முக்கிய அரங்குகளின் அனுமதி இறுதி நேரம வரை மறுக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.

இவைகள் எவ்வாறு இருந்தாலும் மாநாட்டை சிறப்பாக நடாத்த வேண்டும் என்ற மனஎழுச்சி அமைப்பாளர்களிடமும் மக்களிடமும் இருந்தது. மக்கள் அலைஅலையாக திரண்டதைக்கண்ட அரசாங்கம் சற்றுக் கீழ் இறங்கி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்கியது.

மாநாட்டுக் குழுத்தலைவர் நீதியாளர் தம்பையா மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு விரும்பவில்லை. ஆகையால் அவர் தலைவர் பதவியிலிருந்து விலக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் தழிழாராட்சி மாநாடு மூன்றாம் திகதி ஆரம்பமாகி பத்தாம் திகதி வரை யாழ் முற்றவெளி திறந்த வெளியரங்கில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் யாழ் நகரம் வந்தார்கள். அதுவரை நடைபெற்ற எந்த ஒரு மாநாடும் இது போல சிறப்பாக நடைபெறவில்லை. அன்றைய தினம் குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

1974 ம் ஆண்டு ஜனவரி 10 ம் திகதி நிறைவு நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக தமிழின் பெருமைகளையும் பண்பாட்டின் பெருமைகளையும் பற்றிப பேசினார்கள். மக்கள் உணர்வோடு கைதட்டி உட்சாகப்படுத்தினர். இறுதிக தமிழக பேராசிரியர் 'நைனா முகமது' அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யாழ் உதவி காவற்றுறை மாஅதிபர் சந்திரசேகரா தலையினான காவற்றுறை மாநாட்டில் கலந்து கொண்ட மக்களைத் தாக்கியதுடன் துப்பாக்கியாலும் சுட்டார்கள். இச்சம்பவத்தில் 09 பொதுமக்கள் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவி காவற்றுறை அதிதியட்சகர் சந்திரசேகரா பின்னர் ஜனாதிபதி சிறிமாவே பண்டார நாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராக பதவியுயர்த்தப்பட்டார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டேரின் விபரம்

வேலுப்பிள்ளை கேசவராஜன் 15
பரஞ்சோதி சரவனபவன் 26
வைத்தியநாதன் யோகநாதன் 32
யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் 52
குலேந்திரன் அருளப்பு 53
இராசதுரை சிவாநந்தம் 21
இராஜன் தேவரட்னம் 26
சின்னத்துரை பொன்னுத்துரை 56
சின்னத்தம்பி நந்தகுமார் 14
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment