முப்பது வருட கால யுத்தம் முடிபடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், தமிழ்
மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இன்னமும் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என
சிரே ஷ்ட அமைச்சரும் விஞ்ஞான தொழில் நுட்பத்துறை அமைச்சருமான திஸ்ஸ விதாரண
தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு வட-கிழக்குப் பெண்கள்
சம்பந்தமாக தயாரித்த அறிக்கையயான்றை கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் நேற்று
வெள்ளிக் கிழமை நடைபெற்ற மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம்
கையளித்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
கூறினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி
தொடர்பாக இலங்கைப் பெண்களுக்கான நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரில் அவரின் உரை
அமைந்திருந்தது.அவர் அங்கு மேலும் உரை யாற்றுகையில்,இலங்கை அரசு தமிழர்களுக்கான
தீர்வை பல்வேறு வழிகளில் வழங்குவதற்குத்தான் முயற்சித்து வருகிறது என்றும் ஒரு சில
காரணங்களால் அந்த முயற்சி வெற்றியளிக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது
கவலைக்குரிய விடயமே என்றார். மேலும் முன்னாள் போராளிகளின் புனர் வாழ்வு விடயத்தில்
அரசு வேகம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சில விடயங்களை
அமுல்படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவதாக கொழும்பு முதல் கிராமங்கள் வரை அதிகாரப் பகிர்வு முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்படுதல் வேண்டும் அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும். பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்குமிடையிலும் சமூகங்களுக்குமிடையிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியயழுப்பினால் மட்டுமே பெண்களது அபிவிருத்தியையும் பூரணமாக முன்னெடுக்கமுடியும்.

உலகில் எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் எந்தக்காலத்தில்
நடந்தாலும் அதனால் கூடுதலாக பாதிக்கப்படுவோர் பெண்களே. எனவே தீர்மானம் எடுக்கும்
அமைப்புக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். எனது
கருத்தின்படி ஆகக் குறைந்தது தேர்தல்களில் முப்பது சதவீதமான பெண்களுக்காவது
சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்றார். அமைச்சர் சுமேதா டி.ஜயசேன, நாடாளுமன்ற
உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்ற லைபிரியாவைச்
சேர்ந்த லெமா கோபி, டிஸ்னி நிறுவனத்தைச் சேர்ந்த அல்பியன் டிஸ்னி, யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப் பின் பணிப்பாளர் சுமித்திரா ரத்நாயக்க, தலைவி விசாகா
தர்மதாச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment