மடுத்தேவாலயப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு - 20.11.1999

இலங்கை தீவில், சிங்கள மற்றும் இந்திய இராணுவத்தினாலும், இனவெறியர்களாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் 150000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட பல படுகொலைகள் மக்கள் அடைக்கலம் புகுந்த வழிபாட்டுத் தலங்களில் வைத்தே மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ஆதாராங்களாக உள்ள பல சம்பவங்களில்; ஒன்றுதான் மடுதேவாலயப் படுகொலை.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், புனித யாத்திரைத் தலமாகவும் மடுத்தேவாலயம் விளங்குகின்றது. மன்னார் மாவட்டத்தில் மடுப்பிரதேச செயலர்பிரிவில் இத்தேவாலயம் அமைந்துள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இனமத வேறுபாடின்றி மக்கள் வந்து தரிசிக்கின்ற ஒரு புனிதத் தலமாக மடுத்தேவாலயம் விளங்குகின்றது. 1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், பாதுகாப்பான இடம் எனக் கருதி மடுமாதா திருப்பதியில் தஞ்சம் புகுந்திருந்திருந்தனர்.

1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபதாம் திகதி பாலம்பிட்டி சின்னப்பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதியூடாக மடுநோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறு முன்னேறினார்கள். இதனால் பாலம்பிட்டி, தட்சணாமருதமடு மக்களும் இடம்பெயர்ந்து மடுப் பிரதேசத்தில் தங்கியிருந்தார்கள். முன்னேறிய இரானுவத்தினர் இடம்பெயர்ந்துகொண்டிருந்த மக்களை மடு தேவாளயத்தில் இருக்குமாறு கோரியிருதனர். தாக்குதல் நடைபெற்றபோது 3000 வரையான பொதுமக்கள் தேவாலையத்தில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

பெரியபண்டிவிரிச்சானில் தங்கியிருந்த படையினர் இரவு 9.45 மணியளவில் டாங்கிகளிலிருந்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். முதல் இரண்டு எறிகணைகளும் மடுத் தேவாலயத்திற்கு முன்னிருந்த ஆலமரத்தில் பட்டுச் சிதறியது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மூன்றாவது எறிகணை மடுத்தேவாலயத்தின் இருதய ஆண்டவர் ஆலயத்தின் மீது வீழ்ந்து வெடித்தது. அப்போது அந்த ஆலயத்தினுள்ளிருந்த குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள், முதியவர் என முப்பத்தியொரு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்கள். அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மக்களில் ஒன்பது பேர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள். இறந்தவர்களில் இருபத்தேழு பேரின் உடல்கள், தேவாலய ஆயர் வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணையின் பின்னர் மீண்டும் மடுத்தேவாலயத்திற்கு கொண்டுவந்து, மடு சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்த மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது.

கடுமையான ஆட்லறி ஏறிகனை தாக்குதல்கள் மற்றும் டாங்கிகளின் தாக்குதல்களுடன் முன்னேறிய இராணுவத்தினர் மடு தேவாளயம் உட்பட சுற்று பகுதிகள் முழுவதையும் இரவு கைப்பெற்றியிருந்தார்கள். இதன் பின்னர்ரே காயமடைந்த பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டார்கள்.

இத்தாக்குதலை உலகம் முழுவதுமே கண்டித்திருந்தது. உலக பிரசித்திபெற்ற தேவாலயம் மீது சிறிலாங்கா இராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் இத்தாக்குதலினை மேற்கொண்டார்கள் என்பதற்கு போதியளவு ஆதாரங்கள் இருந்தபோதும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவுமில்லை. போர் குற்றவாளியாக யாரும் அடையாளப்படுத்தப்படவுமில்லை.

முன்னால் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரானயக்கா ஆட்சியில் இருந்த போதே இப்படுகொலை நடைபெற்றது. இவர் தமிழ் மக்கள் மீது பாரிய இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இன்று எந்த விதமான அதிகாரங்களும் இல்லாது இருக்கின்ற போதிலும் கூட இவர் மீது சர்வதேச நீதிமன்றங்களோ மனித உரிமை அமைப்புகளோ எந்தவிதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவர் மீது சரியான சட்டப்படியான நடவடிக்கைகளை சர்வதேசம் மேற்கொண்டிருந்தால் மகிந்த அரசு இவரிலும் கூடிய இன அழிப்பில் ஈடுபட்டடிருக்காது. இந்திய, சிங்கள் அரசுகள் மட்டுமல்ல சர்வதேச அரசுகளும் மனித உரிமை அமைப்புகளும் கூட்டாக இணைந்தே தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனவா? என இன்று தமிழ் மக்கள் சிந்திக்கின்றார்கள். இவர்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்றால் முதலில் இப்படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு சரியான தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கட்டும். அநியாயகமாகக் கொல்லப்பட்ட எம் உறவுகள் சாந்தி அடையட்டும்.

இச்சம்பவத்த்தில் காயமடைந்த்த தெய்வசேகரம் அமரசிங்கம் இப்ப்படுகொலை பற்றிக் கூறுகையில்
"அன்றைய தினம் 6.30 மணிக்குப் பின்னர் நாம் இருந்த தேவாளயப்பகுதி எங்கும் சரமாரியான துப்பாக்கிச் சத்தமும் எறிகணைவீச்சுச் சத்தமும் கேட்டவண்ணமிருந்தது. ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் உறங்கச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும் முதலாவது எறிகணை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில் விழுந்து வெடித்தது. அதன்பின்னர் கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது. இதன்போது என்னைச் சுற்றியிருந்த எனது அம்மாவான சந்திரசேகரம் பூமணி, அக்காவான அம்பிகாவதி, இவரின் மூத்தமகனான கஜானன் மற்றும் பெரியப்பாவின் மகன்-மனைவி மற்றும் மகள்-கணவர் உட்பட பல உறவினர்கள் பலியானார்கள். இத்தாக்கதலில் நாற்பது பேர்வரை இறந்தும் ஆறுபதிற்கும் மேற்பட்டவர்கள் வரை காயமடைந்தும் இருந்தார்கள். இந்த எறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச்சத்தமும் இல்லாமல் ஒரே அமைதியாகக் காணப்பட்டது. எங்கள் மேல் வீசப்பட்ட எறிகணைகள் அனைத்தும் தேவாலயத்திற்கு முன்னாலிருந்த மடு அரச செயலகத்திலிருந்த இராணுவத்தினர் ஏவியதை நான் உட்பட பல மக்கள் கண்டோம். இதிலிருந்து இது ஒரு வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே கருதவேண்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச்சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திய பின்னரே இச்செயலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் எனது அண்ணாமார், அயலவரின் உதவியுடன் இரவு 1.00 மணியளவில் என்னை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு எடுத்து சென்று இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அதன்பின்னர் மயக்கமுற்ற நான் இருபத்தைந்து நாட்களுக்குப் பின்னர்தான் பழையபடி எனது சுயநினைவைப் பெற்றேன்."

20.11.1999 மடுத்தேவாலயப் படுகொலையில்; கொல்லப்ப்பட்டோர்விபரம்
01. சூரியகுமார் சுகந்தன் - விவசாயம் 22
02. சூரியகுமார் சுகந்தி - வீட்டுப்பணி 23
03. இந்திரமோகன் தட்சாயினி - மாணவி 13
04. நிக்கலஸ்யூட் யாழினி; - ஆசிரியை 25
05. நவரட்ணம் இராசேஸ்வரி - வீட்டுப்பணி 58
06. கனகரத்தினம் வாரித்தம்பி - கமம் 54
07. காளிதாசன் செல்வகுமாரி - வீ.பணி 22
08. கிரேசு செல்வராஜா - விவசாயம் 39
09. கருணைராசா கபாஸ்கர் - மாணவன் 15
10. கருணைராசா தெய்வானை - வீட்டுப்பணி 49
11. குணவீரசிங்கம் யோகேஸ்வரி - வீ.பணி 22
12. குணவீரசிங்கம் லோகேஸ்வரி - மாணவி 10
13. குணவீரசிங்கம் சுகன்யா - 9
14. குணவீரசிங்கம் சுவேனியா - மாணவி 20
15. தர்மலிங்கம் தர்மநீதன் - மாணவன் 10
16. தர்மலிங்கம் சாந்தகீதன் - குழந்தை 4
17. தம்பாப்பிள்ளை திசவீரசிங்கம் - விவசாயம் 46
18. திசைவீரசிங்கம் மதிராஜ் - குழந்தை 3
19. திசைவீரசிங்கம் அம்பிகாவதி - வீட்டுப்பணி 37
20. முனியாண்டி உதயகுமார் - விவசாயம் 22
21. முனியாண்டி செல்வம் - வீ.பணி 55
22. முத்தையா சிவானந்தம் - கமம் 26
23. ஜெயராம் ஜெயசீலன்; - மாணவன் 18
24. செல்வராசா நிறாஜ் - மாணவன் 9
25. செல்வராசா ரதன் - மாணவன் 12
26. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் - 44
27. ந்திரமோகன் பபிதரன் - மாணவன் 6
28. சந்திரமோகன் சுஜிதரன் - மாணவன் 9
29. சந்திரமோகன் சுதாகரன் - மாணவன் 9
30. சந்திரசேகரம் பூமணி - வீ.பணி 61
31. சதாசிவம் ஜமுனன் - 21
32. சிவானந்தம் சுகந்தினி - வீ.பணி 22
33. சிறிபாஸ்கரன் மைந்தினி - குழந்தை 3
34. வாரித்தம்பி பவானி - மாணவி 17
35. ஏகாம்பரம் ராமேஸ்வரி - வீ.பணி 52

காயமடைந்தவர்களின் விபரம
01. சூரியகுமார் செல்வராணி - வீட்டுப்பணி 43
02. இளையதம்பி உருக்குமணி
03. இராமசாமி கேதீஸ்வரன் - 24
04. இராமலிங்கம் இந்திராணி - 17
05. இராமலிங்கம் தனலட்சுமி - 52
06. இரத்தினம் நவரத்தினராசா - 46
07. இரத்தினம் தனேஸ்வரன் - 29
08. இரத்தினம் விஜயலட்சுமி - 17
09. இரத்தினம் ரங்கம்மா - 55
10. ஈஸ்வரி - -
11. உதயசீலன் - -
12. நிஷhந்தன் - -
13. நவரத்தினராசா துஸ்யந்தினி குழந்தை 3
14. நவரத்தினராசா தயாளினி குழந்தை 4
15. நவரத்தினராசா மனோரஞ்சிதம் - 43
16. நவரத்தினராசா அகதீஸ்வரி - 19
17. நவரத்தினராசா சந்திரகாந்தன் மாணவன் 11
18. கஜன் குழந்தை 3
19. கனகரட்ணம் குமுதினி மாணவி 13
20. கந்தசாமி - -
21. கார்த்திக் குமரன் - -
22. கார்த்திக் சத்தியா - -
23. கார்த்திக் சிவபாதமலர் - -
24. கதிரவேலு சூரியகுமார் - -
25. குமாரசாமி கேதீஸ்வரன் கமம் 26
26. கிற்ஸ்ரி ரஞ்சினி வீட்டுப்பணி 37
27. பூபாலசிங்கம் முகிலன் மாணவன் 9
28. பூபாலசிங்கம் முத்துப்பிள்ளை வீட்டுப்பணி 40
29. பாலசுந்தரம் - -
30. பவித்திரா - -
31. பரமேஸ்வரி - -
32. தயாநிதி மாணவி 10
33. தனுசன் - -
34. தர்மலிங்கம் உதயகீதா மாணவி 11
35. தர்மலிங்கம் குமுதகீதன் மாணவன் 6
36. தர்மலிங்கம் கமலாதேவி - 33
37. திருக்குமரன் - -
38. மல்லிகாதேவி - 34
39. அம்பிகா - -
40. அழகன் செல்வம் - 43
41. ஜோன் திவாகரன் மாணவன் 13
42. யோகராசா நாகேந்திரன் - -
43. யோகராசா பகீரதன் - -
44. கோகுலசாரதி - 59
45. கேதீஸ்வரன் டினோசன் குழந்தை 3
46. கேதீஸ்வரன் ஜெயந்திமலர் - 29
47. பெருமாள் ரவி - -
48. மோகன் பஜாணன் மாணவன் 9
49. செல்வன் கஜன் குழந்தை 4
50. செல்லத்துரை சிவராசா கமம் 38
51. செல்லத்துரை ராதாகிருஸ்ணன் - 36
52. சுஜி - -
53. சந்திரசேகரம் அமரசிங்கம் - 35
54. சுகந்தினி - -
55. சத்தியவாணி - -
56. சதானந்தம் - -
57. சறோஜினி - 32
58. சிந்துஜா - -
59. சிவபாதசுந்தரம் கமலநாயகி வீட்டுப்பணி 38
60. சிவமலர் - 28
61. சிவசக்தி - -
62. சிவராசா மல்லிகாதேவி வீட்டுப்பணி 35
63. சிவராசா வரம்சவல்லி மாணவன் 10
64. சிறிபாஸ்கரன் கௌசல்யா - -
65. சிறிபாஸ்கரன் சயந்தா - -
66. சிறிபாஸ்கரன் சங்கீதா - -
67. சிறிபாஸ்கரன் - 29
68. சிறிபாலசுந்தரம் - 50
69. சிறிதரன் - -
70. வள்ளுவன் - -
71. ரவி - -
72. எஸ்.சதானந்தன் மாணவன் 13
73. ஏகாம்பரம் சிவராஜ் - -
74. எப்.உதயசுதா மாணவி 12
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment