அசோக் காந்தா இந்தியத் தூதரா? இலங்கைத் தூதரா? குகதாசன்


பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம் என்றான் பாரதி, காரணம் அவ்வளவு மகிமைகளும், மகத்துவங்களும் அதற்கு அன்று இருந்தமை தான். ஆனால், அந்த உயர் பண்புகளும், அதி உன்னத ஆற்றல்களும் இன்றைய இந்தியாவிடம் உள்ளதா? என்ற கேள்வியை கேட்க வைக்கிறார் இன்றைய இலங்கைக்கான தூதர் திரு அசோக் காந்தா அவர்கள்.
இவரைப் போன்ற ஒரு சாதாரண தூதரான ஜே என் டிக்ஜித் தான் இராஜதந்திரம் மிக்க “ஜே ஆரையே” ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தார். இருந்தும், இன்றைய இந்திய அதிகாரிகளினாலும் , பிரதமராலும், தூதர்களினாலும் ஏன் அப்படி எதையும் செய்ய முடியாமலுளளது? என்ற கேள்வி அவர்களது சுய கணிப்பீட்டிற்கும், தமிழர் தரப்பின் நகர்விற்கும் ஆரோக்கியமானது.
வெளிநாட்டுத் தமிழர் அரசியலானது இனியாவது, சர்வதேச மட்டத்தில் நகர வேண்டும் என்ற எமது முன்னைய முன்மொழிவை, இனறளவில் தமிழ்வின்னூடாக ஒரளவாவது ஏற்றுக் கொண்டமை ஓரளவு திருப்பி தந்தாலும், சர்வ தேசத்தினதும், அதற்குள் ஒரு அங்கமாக இருந்து கொண்டு இலங்கைத் தமிழர் விவகாரத்தை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தன் தலையீட்டால் குழப்பி வரும் இந்தியாவின் தேசிய நிலைப்பாட்டையும் நாம் புரிந்து கொள்ளாத வரை நாம் அடுத்த தலைமை பற்றியோ அன்றில் எந்தப் போக்கை தமிழர் ஆதரிக்க வேண்டும் என்றோ தீர்மானிக்க இயலாது.
அடுத்து, தற்போதைய தலைமை எது என சர்வதேசமும் இந்தியாவும் தீர்மானித்துள்ள தமிழர் தேசியக் கூட்டமைப்பை எந்தத் தமிழரும் எதிர்க்கலாம். அதாவது, இன்னனொரு தலைமையை முழுமையாக அமைத்து ஏற்க முன்னரும் அதனைச் செய்யலாம்.
ஆனால் அப்படிச் செய்ய முன், செய்பவர்கள், குறைந்த பட்சம் தங்களது மேலோட்டமான ஒரு திட்ட வரைபையும், தமிழர் அரசியற் போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் நகர்த்த ஏதுவான ஒரு போக்கையுமாவது வரையறை செய்து வெளியிட வேண்டும். வழிவகை ஏதுமின்றி போராடுவோம் போராடுவோம் என்பதில் என்ன பொருள் முதலில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
முன்பு தமிழ்வின்னில் எழுதியபடி தமிழர் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலானது, ஜெனீவாவிற்கு ஜென்ம பூமியிலிருந்து நகர்ந்து விட்ட தேர்தலின் வாக்காளர்கள் அமெரிக்கா, கனடா , பிரித்தானியா, நோர்வே இந்தியா போன்றவை மட்டுமல்ல சீனா, பாகிஸ்தான் , ரஸ்யா அடங்கலாக அனைத்து நாடுகளினதும் தூதரகக் கதவுகளைத் தட்டிக் கொண்டு உள்ளே செல்லக் கூடிய ஒரு “வேடத்தையாவது” நாம் போட்டுக் கொள்ள வேண்டிய தேவையை வெளிநாட்டுத் தமிழர் உணர வேண்டும்.
நமது ஆலயத்தில் ஒரு அபிஷேகத்தை செய்யவே பல விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே சர்வதேச நாடுகள் ஏற்காத நிலையில் நாம் சர்வதேச அரசியலிற்குள் நுழைய இயலாது. எது நமது தேவை, எது நியாயம் என்பதை தாண்டிய நிலையில் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை இது.
இதனை தமிழர் கூட்டமைப்பின் தலைமை திரு சுமந்திரன் போன்றோரின் தெளிவான புரிந்துணர்வு மிக்க ஆதரவுடன் தொடர்கிறது. இதனுடன் திருப்திப்படாமல், திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அணியும் ஒரு நிலைப்பாட்டில் சர்வதேச மட்டத்தில் நகர வல்லதாக உள்ளது.
ஆனால் வெளிநாட்டுத் தமிழராகிய நாங்கள் தான் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்தும் நாம் வாழும் நாடுகளுடன் கூட எந்த “ ராஜீகத்” தொடர்புமற்று உள்ளோம். அதாவது அமைச்சர்களாக உள்ள அரசியல்வாதிகளின் தொடர்பும், பிரசன்னமும் அனுதாபமும் அனுசரணையும் வேறு ராஜீகத் தொடர்பு வேறு. இதனை நாம் முள்ளிவாய்க்காலின் பின்னராவது புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அங்கம் வகிக்கும் அமைப்பினர் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் எந்த நாட்டின் தூதரையும் சங்கடம் ஏதுமின்றிச் சந்திக்க வல்லலதான ஒரு நிலையும், நிலைப்பாடும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதை விடுத்து எழுவோம் போராடுவோம் என்பது ஏற்புடையதானதாக ஏற்கப்படவல்ல நிலை உலக அரங்கில் இன்னும் மீண்டும் தோன்றவில்லை.
நாம் நம்மக்களை நோக்கி தமிழில் எதையும் எழதலாம். இதோ நான் பொறுப்பான பதவிக்கு தயாராகிவிட்டேன் என்னும் ராகுலையும், பிரியங்காவையும் வெற்றி பெற்றால் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க வல்ல வலுவுள்ள ஒரு பரந்துபட்ட தமிழ் அமைப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் உள்ளதா? இல்லையெனில் தமிழராகிய நாம் எவ்வாறு சர்வதேச மட்டத்தில் நகரப் போகிறோம்?
கண்ணியமானவரான போதும் தற்போதைய இந்தியப் பிரதமரின் தலைமை வலுவற்ற நிர்வாக நகர்வினை சரிவர தமிழ்வின்னில் சித்தரித்ததிற்கு ஏற்பவே சர்வதேச சஞ்சிகை ஒன்றும் பின்னர் எழுதியுள்ளது. இதனைத் தொடரந்து ராகுல் மேலே நகரலாம்.
இந்தநிலையில், இன்னமும் கருணாநிதியின் பஞ்சாய மட்ட வீரவசன அரசியலையே வாபஸ்பெறும் நிலையை கண்டிக்காத தமிழக உறவுகளின் தெளிவு நிலையை வைத்துக் கொண்டு தலையைத் தூக்கவே இரண்டரை ஆண்டுகள் எடுத்த நம்மவரையும் வைத்துக் கொண்டு அதிகம் நாம் எதையும் சாதித்து விட இயலாது.
நித்தியானந்தாவை இன்னமும் நம்பும் கனடாத் தமிழ்ப் பக்தர்கள் கூட ஒரு அமைப்பை கனடாவில் அமைத்துள்ள நிலையில் சிக்கலான சர்வதேச அரசியலை இவர்களிடம் எவ்வாறு கொண்டு சென்று புரிய வைப்பது என்பது நமது சவாலாக உள்ளது.
முப்பதாண்டு காலமாக மனங்களில் பதிந்த வடுக்களை விட வேறு எதையும் எண்ண முயலாத ஒரு மனோவியற் தடையை வெளிநாடுகளில் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் தாண்டாமையினாற் தான் வெளிநாடுகளில் தமிழர் மத்தியில் அரசியல் வெற்றிடம் அல்லது மந்தநிலை தொடர்கிறதெனலாம்.
அதாவது சம கால யதாரத்த நிலையை பார்க்க மறுத்து, எங்களது பழைய மன விருப்பங்களோடு நாம் நகர்கிறோமா?
தமிழர்கள் உலக இராஜாங்க விடயங்களில் பரிச்சயமும் தொடர்பும் பெற்று விடக் கூடாதென்பதில் இந்தியாவிற்குள்ள அக்கறையை நாமின்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.
பிரித்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் நமது தமிழர் பற்றி அவர்கள் கொண்டிருந்த சரியான கணிப்பீடானது இன்று எவ்வளவு மாறியுள்ளது என்பதையும் நாம் அறிந்த பாடில்லை.
இந்த நிலையில் சீனா காரணமாக மகிந்த இன்வாத அரசுடன் முரண்படும் அமெரிக்காவுடன் தமிழர் அணி சேர்வதை முதற் தடவையாக பகிரங்கமாக இந்தியத் தூதர் திரு அசோக் காந்தா எதிர்த்துள்ளார்.
இதற்கு தமிழர் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளப்படி ஆடுகிறது என்று முன்பு எழுதியவர்களும் பேசியவர்களும் இனிமேலாவது இனப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
போராடத்திற்கு நிதி சேர்தவர்கள் அதனாற் பாதிக்கப்பட்ட போராளிகள் பற்றியோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றியோ பொறுப்பாக சிந்திக்காத நிலை வெளிநாடுகளில் அவதானிப்பிற்குரியது.
இந்த வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களின் பொறுப்பை வலிந்து முன் வந்து சில அமைப்புக்களும் தனி மனிதர்களும் தான் தொடர்கிறார்கள். முன்பு நிதி சேர்த்தவர்களும் மௌனித்து விட்டார்கள்.
தாயகத் தமிழரிற்கான இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையிலும், திரு அசோக் காந்தா அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை தன் தேவைப்படி இந்திய மட்டத்தில் வைத்திருக்கவும் தீர்க்கவுமே சர்வதேசத்தை நம்ப வேண்டாம் என்கிறார்.
ஏற்கனவே இங்கு எழுதியபடி, காஸ்மீர் தொடர்பான ஐ நாவின் சர்வதேச முடிவை பாகிஸ்தானுடனான ஒரு தனிப்பட்ட இந்திய – பாகிஸ்தான் உடன்பாட்டை பங்களாதேஷ் யுத்தத்தை தொடர்ந்து செய்த இந்தியா மறுதலித்தது.
இவ்வாறே தான் இந்தியா, முள்ளிவாய்க்காலில் தமிழரை முற்றாக அழித்து 2002 ஆண்டு பிரபா ரணில் ஒப்பந்தத்தை அர்த்தமற்றதாக்கியது.
அதாவது தமிழரின் வெளியுலக மற்றும் மேற்குலக தொடர்புகளை அறுப்பதே இந்தியாவின் ஈழத் தமிழர் தொடர்பான கொள்கையாகிவிட்டது. அடுத்த ஜெனீவா அமர்வின் முன் கூட்டமைப்பினரை மகிந்தவுடன் பேச அமர்த்தி, ஜெனீவாவில் இலங்கை எதிர்கொள்ள உள்ள ஆபத்தை தவிர்க்க இந்தியா போடும் சதியே இது.
இனியாவது கூட்டமைப்பு அமெரிக்கத் தொடர்பை தவறென்று கணித்தவர்கள் விழிக்க வேண்டும்.
மேலும் சர்வதேசத்தை நம்ப வேண்டாம் என்று திரு அசோக் காந்தா கூறியதிலிருந்து, அந்த குங்குமப் பொட்டு அம்மா மட்டுமல்ல, இறுதியாக வந்து திரும்பிய மாண்புமிகு திரு சிவ்சங்கர் மேனன் கூட இந்த கொழும்பின் பாராளுமன்ற தெரிவுக் குழு மாயைக்கு எதிராக பேசும் தரவுகளையும், வரலாற்றுப் பின்னணியையும் கொழும்பிற்கு எடுத்துரைக்கவில்லை என்பது உறுதியாகிறது.
ரணில் அடங்கலாக சகல இனத்தவராலும் ஏற்கப்படவல்ல தீர்வு என்பது இன்று இந்தியா என்ற நாட்டாலும் ஏற்கப்படவல்ல தீர்வாக வேண்டுமென்பதை இந்தியா தமிழகத்தை எச்சரிப்பதைப் போல் காட்டிக் கொண்டு மேற்குலகிற்கு புலித் தடை நீடிப்பூடாக உத்தியோக பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அதாவது தனி ஈழக் கோட்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்தியா தமிழர் தரப்பை ஆதரிக்க வல்ல அமெரிக்க உள்டளடங்கலான அரசுகளிற்கு தெரிவித்துள்ளது.
அப்படியாயின் அபிஷேகா தெரிவித்த சர்வதேச நகர்வின் நிலை என்னவாக அமைய வேண்டும் என்றில்லாவிட்டாலும், எவ்வாறு அமைய முடியாதென்பதை இந்தியா கோடிட்டுக் காட்டியுள்ளது.
தவிர இன்று வரை எந்த தனிநபரோ அமைப்போ முள்ளிவாய்க்காலில் இரத்தத்தால் தாரை வார்க்கப்பட்ட போராட்டத்தை தொடரும் பொறுப்பை சரிவர உறுதியாக வெளிப்படையான பிரகடனப்படுத்தி வெளிநாடுகளில் ஏற்கவில்லை என்பதே உண்மை.
தேசியம் அனைத்து தமிழரினதும் பொதுச் சொத்து. அதற்கு கொள்கை வடிவைக் கொடுத்து தமது அரசியல் வெறுமையை நிவர்த்தி செய்பவர்களும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
தேசிய அரசுப் பேரவை என்ற சிங்களத்தின் பாராளுமன்றத்தில் கூட சகல கட்சிகளும் உள்ளன. ஆம் தேசியம் என்பது இனம் நாடு சாரந்த பதம். அது ஒரு குழு அல்லது அமைப்பு சாரந்ததாக மாற்றப்பட முடியாதது என்பதை இங்கு கனடாவில் ஒரு அமைப்பு அமைக்கப்பட முன் மக்களிடம் கருத்து கேட்ட பொழுது தெரிவித்தும் அதனைக் கவனியாது தமிழர் விரும்பும் தேசியத்தை கொள்கையாக்குவதும். தனிநாட்டுக் கோரிக்கையை கொள்கையாக்குவதும் பொருத்தமானவை அல்ல.
இவற்றை எவ்வாறு அடைவது அல்லது குறைந்த பட்சம் இதனை நோக்கி எவ்வாறு நகரலாம் என்பதே புலம்பெயர் அரசியலின் தேவையும் கேள்வியுமாகும். தமிழ் மக்கள் விரும்பும் தேசியம், தமிழ், நாடு, அரசு போன்ற பெயரிலேயே பலர் குளிர் காய்ந்து கொண்டிருப்பதை இனியாவது தமிழர்கள் வெளிநாடுகளில் அவதானிக்க வேண்டும்.
அதாவது உலக அரங்கின் ஏற்படமையுடன் நகர வல்ல ஒரு நிலையை எந்த புலம்பெயர் அமைப்பும் கொண்டிருக்கவில்லை அல்லது கொண்டிருந்தாலும் வேண்டிய ஆதரவை புலம்பெயர் நாடுகளிற் பெறவில்லை என்பதன் திருத்தம் பற்றி அவரவரும் சுய கணிப்பீட்டை மேற்கொள்ளலாம்.
இல்லாத புலிகளிற்கு இந்தியா தடை போடவில்லை. ஈழக் கோரிக்கைக்கு தடை போடுகிறது என்றே நாம் அதை மொழி பெயர்க்க வேண்டும். இந்தத் தடையானது என்றும் தொடரும். இந்த அறிவிப்பின் பின்னரும் அதனைக் கேளாத செவிடுகளைப் போல் நாம் பழைய போக்கிலேயே சர்வதேச அரங்கில் அபிஷேகம் செய்ய இயலுமா?
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ற கழுமரத்தில் ஏற வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இவரும் கோருவது இவர் இந்தியத் தூதரா அல்லது இலங்கையின் தூதரா என்ற ஐயத்தையும் தோற்றுவிக்கிறது.
சர்வதேசத்தை நம்பிக் கொண்டிராமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சேர்ந்து செயற்படுங்கள் என்று இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இங்கே வெளிப்படும் இராஜதந்திர மடமை என்னவென்றால் சர்வதேசம் என்ற குடைக்குள் இந்தியா இல்லை என்பதை ஐயனே ஏற்றுக் கொள்வது தான். ஈழத் தமிழர் தொடர்பான சர்வதேசத்தின் நகர்வு மற்றும் அணுகுமுறைகளை இந்தியா விரும்பவில்லை என்பதை ஒத்துக்கொள்வதைத் தான்.
இந்தியாவின் அதே ஜனநாயக முறையில் சென்றடையப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான ஜனநாயகத்தை இந்தியா ஏற்க மறுப்பதைத் தான். திரு சம்பந்தனும், திரு சுமந்திரனும் அன்று பிரசன்னமாகாதுவிடினும் யாராவது இப்படி நீதி கேட்டிருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பாரக்க வேண்டும்.
மேலும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் ஏன் கூட்டமைப்பினர் போகாதுள்ளனர் என்பதை அறிய முயலாத, அல்லது புரிந்து கொள்ளாத இவராலோ அல்லது இந்தியாவாலேயோ எவ்வாறு தமிழர் விடயத்தை கையாள இயலும்?
எனவே பாராளுமனறத் தெரிவிக் குழு ஒரு புறமிருக்க ஐ.நாவிற்கு, ஜெனீவா வரை சென்று விட்டதை திரும்பவும் கொழும்பிற்கு கொண்டு வரவே இந்தியாவும் இலங்கையும் முயல்வதை சுட்டிக்காட்டுவதே இன்றைய எனது நோக்கமாகும்.
அதாவது இந்தியா தனது இலங்கையுடனான 1987 ம் ஆண்டு ஒப்பந்தத்தை செயலிழக்க வைத்த 2002  பிரபா - ரணில் சமாதான ஒப்பந்தத்தை கிழிக்க முடியாத நிலையில், இந்தியாவைத் தாண்டி மேற்குலகம் சென்ற புலிகளை அழிப்பதன் ஊடாகவே ரணில் பிரபா ஒப்பந்தத்தை இல்லாது செய்துள்ளது.
இருந்தும் தமிழர் பிரச்சனை ஆசியாவைத் தாண்டி மேற்குலகு சென்றதை பொறுக்க முடியாத இந்தியா மீண்டும் அதனைச் சிதைக்க ஆரம்பித்துள்ள இராசதந்திர யுத்தத்தின் வெளிப்பாடே அசோக் காந்தாவின் இந்தக் கோரிக்கையாகும்.
இவ்வாறான ஒரு செயற்பாட்டை முள்ளிவாய்க்கால் முடக்கத்திற்கு முன்னர், சார்க் மாகாநாட்டிற்கு திரு. மன்மோகனை அழைத்து வைத்துக் கொண்டு செய்ததை அன்றே இந்தியாவின் ராசதந்திர முற்றுகை என்று எழுதியதற்கு உரிமை கோரிக் கொண்டு நிறைவு செய்கிறேன்.
நமக்கு புலப்படுவதை எழுதுவது நம் கடமை. ஏற்பதும் மறுப்பதும் வாசகர் பொறுப்பு. சரியான கணிப்பீடுகளிற்கு காலமே சாட்சி.
நன்றி. 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. India has been ignoring the Tamil Nadu fishermen killed in the sea, trespassing of Sri Lankan Navy in the Indian territorial waters for the past 15-25 years. The purpose of this could be:

    The ignorance of the diplomats

    A covert plan to teach a lesson to Tamil Nadu which has been objecting for forced Hindi, etc.

    Not to hurt the feelings of Sri Lanka for the bribes received

    But the consequences are dangerous:

    Sri Lanka could try to attack Tamil Nadu from Sea or even invade Tamil Nadu

    Sri Lanka could start a war with India with the backing of others

    Tamil Nadu could launch its armed forces to defend from outsiders

    India and Tamil Nadu could be in war

    Will the Indian intellectuals think about this?

    ReplyDelete