நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தோர் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பது ஏன்?



இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நிராகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை அடியொற்றி அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதோடு, ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருப்பது காலத்திற்குக் காலம் வந்த அரசாங்கங்களினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே எனவும், அதனை நிறைவேற்றினால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தியாக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றது இதனை 47நாடுகளுக்கு கூட்டமைப்பின் தலைமை எழுதியுள்ள கடிதம் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. எனவே அரசியலை அரசியல்வாதிகளிடம் பாரம்கொடுத்துவிட்டு மக்கள் ஒதுங்கியிருக்க முடியாது. இனியும் அவ்வாறிருப்போமானால் எமது எதிர்காலமே கேள்விக்குறியாக மாற்றப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று சனிக்கிழமை யாழ்.பிரதான வீதியிலுள்ள கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.


இந்தச் சந்திப்பில் கஜேந்திரகுமார் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது,


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும், அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவும் ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கை அரசு தொடர்பாக பிரேரணையொன்று சர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதுபற்றி பரவலாகஇஊடகங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கை அரசிற்கு எதிரானதென்றும், தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கப்போவதாகவும். ஆனால் அந்த தீர்மானம் விசேடமாக அரசுநியமித்த நல்லிணக்க ஆணைக்குழு  அறிக்கையை வரவேற்று அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த கோரியதாகவேயிருக்கின்றது.


மேலதிகமாக யுத்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் வகையில், இலங்கை அரசு உள்ளக ரீதியாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும்இ அதற்கு சர்வதேச மட்டத்தில் ஆலோசனைகளை வழங்கத் தயாராக ஐ. நா உள்ளது என்ற அடிப்படையில்தான் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் அமைந்திருக்கின்றது.  இதை நன்கு அவதானித்தால் முற்றாக அது ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தியுள்ளது.


நிச்சயமாக அது தமிழர்களுக்கு நன்மையளிக்குமா என்பதை தீர்மானித்துக் கொள்வதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எப்படியுள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கவேண்டிய கட்டாயமொன்று இருக்கின்றது. முதலில் நல்லிணக்க ஆணைக்குழு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தை பார்க்கவேண்டும். இலங்கையானது யுத்தகாலத்தில்(இறுதி 3இ4வருடங்களில்) செயற்பட்ட விதத்தில் சரியான முறையில்  விசாரித்து அங்கு மனிதவுரிமை மீறல்கள்இ மனிதத்துவத்திற்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்றதென்றால்  அது யார் செய்திருந்தாலும் அதற்குப் பொறுப்புக்கூறும் வகையில் செயற்பாடுகள் இருக்கவேண்டும் என்ற அழுத்தம் சர்வதேச மட்டத்திலிருந்து வந்திருந்த நிலையில் இலங்கை அரசு இந்த நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இப்போதைய அரசிற்கு மிகவும் நெருக்கமானஇ அவர்களுக்கு விசுவாசமான, தரப்புகளை நியமித்து, ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.


அந்த அறிக்கையின் குறைபாடுகள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறவேண்டிய விடயங்கள், சர்வதேசமட்டத்தில் வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு இந்தவிடயத்தில் ஆணைக்குழு தவறியிருப்பதாக அனைத்துத் தரப்புகளும் தெளிவாகக் கூறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக விசேடமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு என்றவகையில்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு முழுமையாக அறிக்கையினை தயாரித்து முற்று முழுதாக நிராகரித்து, அதற்கான ஆக்கபூர்வமான கருத்துகளையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதில் நாங்கள் உட்பட ஏனைய தரப்புக்களும் ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்த காரணங்களுக்கு மேலாக, இலங்கை அரசு ஒரு தனிமனிதனல்ல, அது ஒரு அரசு. அது முடிவெடுக்கும்போது அது எதிர்காலத்திலும் தனக்கு வரவுள்ள ஆபத்துக்கள், எதிர்ப்புகள் குறித்து ஆராய்ந்து, அதை எப்படிக் கையாள்வது, என்று சிந்தித்தே முடிவு எடுப்பார்கள். ஆகவே ஆணைக்குழு நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், அழுத்தங்களை எதிர்கொண்ட சூழலிலும்தான். ஆணைக்குழுவை உருவாக்கி அதிலிருந்து தப்பிக்க எடுக்கப்பட்ட முயற்சியே. ஆணைக்குழு அமைக்கப்பட்டமை என்பதை யாரும் மறுக்கமுடியாது.


அந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டு அதன்மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கைதான் இன்று அமெரிக்கா தலைமையில் ஐ .நா. வில் தீர்மானமாக கொண்டுவரப்படுகின்றது. அந்தவகையில் நாம் திட்டவட்டமாக கூறவிரும்புவது அமெரிக்காவின் முயற்சி தமிழர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. படுகொலைகள் உச்சமாக நடைபெற்ற காலத்தில், அப்போது நாம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம். அந்த அமைப்பின் வெளிவிவகார குழு உறுப்பினர்களாகவும் இருந்தோம்.

அப்போது நாம் அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் சந்திப்புகளை மேற்கொண்டபோது எமக்குத் திட்டவட்டமாக கூறப்பட்டது என்னவென்றால். நாங்கள் அரசிற்கு ஆணித்தரமாகவும். உறுதியாகவும் எச்சரித்துள்ளோம், அதாவது இரத்தக்களரி நடந்தால் பாரிய விளைவுகளை சந்திக்கநேரிடும் என்றும், அதை உறுதியாக நம்பலாம் என்றும் எமக்கு கூறப்பட்டது. இந்தச் செய்தி எமக்கு மட்டுமல்ல இரவுஇ பகலாக போராடிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் சொல்லப்பட்டது.


அவ்வாறான ஒரு பின்னணியில்தான் 3வருடங்களின் பிற்பாடு இன்றைக்கு ஐ. நா. மனிதவுரிமைகள் பேரவையில் தமிழரின் பெயரைப்பயன்படுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. இதிலே மற்றொரு விடயம் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்படும் நிலையில்,  அதனை தடுப்பதற்கு கூறப்படும் கருத்தே. இதுவொரு ஆரம்பக்கட்டம் என்பதால் படிப்படியாக போகின்ற காரியம் என்றும் ஆனால் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.


இன்று போர் இல்லாத சூழல், இன்று எமக்கெதிராக நடைபெறும் அநியாயங்கள்  உயிரிழப்பு இல்லாதது. வேறுவேறு கோணங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அப்படியான ஒரு சூழலில் கடந்தகால சம்பவங்களுக்கு கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்த இடத்திலிருந்து அழுத்தத்தை கூட்டலாம் என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.

இதை இலங்கை அரசு நன்றாகவே அறிந்துள்ளது. அவ்வாறு கூட்ட முனைந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாத வகையில் அவர்களுடைய செயற்பாடுகள் அமையும், தமிழ்மக்கள் பெயரில் அவர்களுக்காக கொண்டுவரப்படும்போது ஆகக்குறைந்தது அவர்களது எதிர்பார்ப்பு குறைந்தபட்சத்திலேயே நிறைவேற்றக்கூடிய தீர்மானமாகவே அமையும், அவ்வாறில்லாமல் குறையவே அடையப்போகின்றதென்றால், அதை கூட்டலாமா என்பது ஒரு கேள்விக்குறியாகவேயிருக்கின்றது.


ஐ .நா மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்கா கொண்டுவரும் பிரகடனத்தீர்மானம் தொடர்பாக தமது கருத்தை ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்த ஐ.நா நிபுணர்குழுவினர், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மிகவும் பலவீனமானது என குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றால், எப்படி நியாயப்படுத்தமுடியும்?
இந்த இடத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று கூறக்கூடிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றது. ஐ.நா கொண்டுவரப்படும் தீர்மானம் கூட தமிழர்களின் பெயரைப் பயன்படுத்தியே கொண்டுவரப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்பு என்றவகையில், ஆணைக்குழு வெளியானவுடனேயே 105பக்க அறிக்கை மூலம் உடனடியாகவே நிராகரித்திருந்தனர்.


அப்படியிருக்கவும் இன்று அதே கூட்டமைப்பு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளமை மட்டுமல்ல அந்த தீர்மானத்தை எப்படி அடையாளப்படுத்தியிருக்கின்றனர் என்றால், நல்லிணக்க ஆணைக்குழுவில் அரசு காலத்திற்குக் காலம் கொடுத்த வாக்குறுதிகளை உள்வாங்கியதாக இருக்கின்றது. ஆகவே அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக பூர்த்தியடையக்கூடும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, ஜ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47நாடுகளுக்கும் கடிதத்தை கூட்டமைப்பின் தலைமை அனுப்பியுள்ளது.


ஆகவே ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தினால் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக பூர்த்தியாகும் என்று கூறியதன் பிற்பாடு, சர்வதேச மட்டத்தில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு அதிகமாக கொண்டுபோகலாம் என்பது மிகவும் கடினமான விடயமாகவே அமையப்போகின்றது. ஆகவே தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்த நிலை எமக்கும், எம் எதிர்காலத்திற்கும் மிகப்பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. 


அந்தவகையில் இன்று தமிழ்மக்களின் அனுமதியுடனேயே, தாமே விரும்பி இந்த மிகமோசமான நிலைமையை ஏற்றுக்கொண்டவிடயமாகவே இது காட்டப்படுகின்றது. உண்மைகள் எல்லாம் வெளியான பிற்பாடு எமது மக்கள் அரசியலை அரசியல்வாதிகளிடம் பாரம்கொடுத்துவிட்டு இருக்க முடியாது, இன்றைக்காவது எமது  மக்கள் இந்த விடயத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளை நம்பி நாம் இனிமேலும் ஒதுங்கிநின்றால் எம்முடைய எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக மாற்றப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.


இதேபோன்று, மனிதவுரிமைகள் அமர்வில் ஒரு பதிவுசெய்யப்பட்ட மனிதவுரிமைகள் அமைப்பின் சார்பில் நாம் கலந்து கொண்டு உரையாற்றப்போகின்றோம் என்றால், அதற்காக எம்மைப் பற்றிய தகவல்களையும், நாம் பேசப்போவது தொடர்பான விடயங்களையும் கொடுக்கவேண்டிய இறுதித் திகதி 24 ஆம் திகதி. அதுவரை கூட்டமைப்பு செல்லும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 25 ஆம் திகதி நாம் போகவில்லை என கூட்டமைப்பு அறிக்கை விடுகின்றது.


எனவே அதன் பின்னர் யாருமே போகமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, இது காலத்திற்குக் காலம் இருந்து வருகின்ற நடைமுறை. உலகத்தில் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் பலர் இவ்வாறு கலந்து கொண்டே தமது நியாயப்பாட்டை தெரிவித்திருக்கின்றார்கள். கொடுக்கப்படுகின்ற 4தொடக்கம் 5நிமிடங்களுக்குள் பல விடயங்கள் பற்றி பேசி முடிக்கலாம். அந்த நம்பிக்கை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும், உள்ளேயும் அதிகமாகவேயிருந்தது. நாம் தற்போது கலந்து கொள்வதற்காக ஒருசில முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம் ஆனால் கூட்டமைப்பின் செயற்பாட்டினால் இந்த நிலை வந்துவிட்டது என்றார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment