ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது ! அதிர்ச்சியில் சிறிலங்கா


சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது. இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும்.
அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு இன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவினை அங்கத்துவ பலப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முடியும்.
சிறிலங்கா அரசானது, குறித்த இந்த பிரேரணை வரைவினை, பலவீனப்படுத்தி, தோல்வியுறச் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கும்.
இந்நிலையில், தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்ற, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றினை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையின் வரைவில் காத்திரமான உள்ளடக்கத்தையே நாங்கள் எதிர்பார்கின்றோம்.
இதேவேளை, இத்தகைய விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கென இருக்கின்ற பொறுப்புள்ள கடப்பாட்டினை, இந்த பிரேரணை தொடர்பில், சபை பொறுப்புடன் ஆற்றும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு :
அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் தமிழ் ஆக்கம்
தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)
ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக...
பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்...
சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..
சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று...
சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்
2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்
3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete