ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் போது, அதனை யார் ஆதரிக்கின்றார்கள் எவர் எதிர்க்கிறார்கள் என்ற கணக்கெடுப்புகளுக்கு அப்பால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதே இப்போதைய முதன்மை விடயமாக உள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வெற்றிபெறுவதைக் காட்டிலும் அது தோற்கடிக்கப் படுமாக இருந்தால் அது அமெரிக்காவை மேலும் சினம் கொள்ள வைக்கும். சிறிய நாடாகிய இலங்கை அமெரிக்காவை சுத்த நினைத்தால் அது நாட்டுக்குப் படுபாதகமாக அமையும் என்பது இலங்கைக்கு நன்கு தெரியும். அதன் காரணமா கவே சாட்சாத் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோர் மெளனம் காக்கின்றனர்.
ஜெனிவாத் தீர்மானத்தில் இருந்து இலங்கை தப்புவதற்காக அல்லாவிட்டாலும் அமெரிக்கா வின் கோபத்தைச் சற்றுக் குறைப்பதற்காகவேனும் விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் மெளனம் காப்பது அவசியம் என்பதை அரசு அவ ர்களிடம் ஆணித்தரமாகக் கூறியுள்ளது. இருந்தும் ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானத்தை எதிர்த்து அரச தரப்பு கொழும்பில் நடத்திய அமெரிக்காவுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க ஜனாதி பதி ஒபாமாவின் உருவப்பொம்மைக்கு செருப்பு மாலை அணியப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒபாமா வின் உருவப்பொம்மைக்கு செருப்புமாலை அணிந்து, ஊர்வலத்தில் எடுத்துச்சென்றதை அமெரிக்கா நன்கு அறியும். ஜனாதிபதி மகிந்த ராஜபக் பிரதமராக இருந்த போது, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைப்பார் வையிடுவதற்காக வட மராட்சிப் பகுதிக்கு வந்திருந்தார். அதே நாள் அப்போது ஜே.வி.பியின் பிரசார செயலாளராக இருந்த விமல் வீரவன்ச வும் அங்கு வந்தார். விமல் வீரவன்சவை எதிர்த்த மக்கள் விளக்கு மாறுகளைத் தூக்கிக்காட்டினர். எனினும் நினையாப் பிரகாரமாக அது மகிந்த ராஜபக்வின் வருகையின் போது இடம்பெற்றுவிட்டது.
இந் நிகழ்வு அவருக்குத் தமிழ் மக்கள் மீது அளவு கடந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த ஆத்திரமே வன்னிப் பேரழிவாகியது என்றும் கூறுவோர் உளர். இது உண்மையாயின் ஒபாமாவின் உருவப் பொம்மைக்கு அணிந்த செருப்பு மாலை ஜனாதிபதி ஒபாமாவுக்கு எவ்வளவு தூரம் ஆத்திரத்தை ஏற் படுத்தும்? அப்படியானால் அதன்விளைவு என்ன வாக இருக்கும்?
நன்றி - வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment