இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்புக்காக காத்திருக்கின்றது. அமெரிக்காவால் கொண்டு வரப் படும் தீர்மானம் வெற்றிபெறுமா? தோற்கடிக்கப்படுமா? என்பதில் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள கலக்கம் உச்சமடைந் துள்ளது. தீர்மானம் நிறைவேறினால், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற ஏக்கம் என்பதற்கப்பால், குற்றவாளிக் கூண்டில்- யார் யார் ஏற வேண்டி வரும் என்ற அந்தரிப்புகளும் கூடவே, குழப்பிக் கொள்கிறது. தீர்மானம் நிறைவேறினால் அரசில் இருந்து அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் முதலில் வெளியேற்றப் படுவர்.
இதுவே அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும். சம்பிக்க ரணவக்கவினதும், விமல் வீரவன்ச வினதும் நாவால் தான் நாடு கெட்டுப் போனது என்று குற்றஞ்சாட்டப்படும். எனவே,இவ்விருவரையும் வெளியேற்றினால் தான் விமோச னம் என்ற கருத்து மேலோங்கும். இது அரச பக்கமாக இருக்க, தமிழ்ப் பகுதியில் என்ன நடக்கும்? தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு வலு பெளவியமாக இருக்கிறது. தீர்மானம் நிறைவேறாமல் போனால், நாங்கள் போகாமல் விட்டதனால்தான் தீர்மானம் நிறை வேறவில்லை.
எனவே அரசு எங்களுடன் பேசவேண்டும். அரசைக் காட்டிக் கொடுக்கும் செயலை நாங்கள் செய்யவில்லை என்று கூட் டமைப்பின் முக்கிய தலைகள் கூறிக் கொள்ளும். மாறாக தீர்மானம் நிறைவேறினால், கூட்ட மைப்பு செய்ய வேண்டிய தெல்லாம் செய்துவிட்டு அமைதியாக இருந்தது. எங்கள் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது என்று உரிமை கோரும். சில வேளைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நாங்கள் சந்தித்து எங்கள் பிரச்சினையை இடித்துரைத்தோம் என்று அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் எதனையும் அறிய விரும்பாதவர்களாக அல்லது அறிந்தவற்றை வெளியில் சொல்லப் பயந்தவர்களாக இருக் கின்றனர். கூட்டமைப்புக்கு இதுபோதும்.
அமெரிக்காவால் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் நிறைவேறினாலும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டு மாயின் அப்பளுக்கற்ற-தியாக உணர்வுள்ள -நேர்மையான அரசியல் தலைமை உடனடியாகத் தேவை.தங்களுக்கு வசதியும் வாய்ப்பும் கிடைக்கின்ற போது மட்டும் கருத்துக் கூறுகின்ற அரசியல் தலைமைகளும், பொதுமக்கள் சார்ந்த சமூக அமைப்புகளும் பதவிக்கும் புகழுக்கு மானவேயன்றி அவற்றால் பிரயோசனம் ஒரு போதும் கிடைக்கமாட்டாது.
எனவே ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறினாலும் -நிறைவேறாவிட்டாலும் முதலில் தமிழ் மக்கள் தமக்கான தூய அர சியல் தலைமை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனையில்லையாயின், அமெரிக்கா அல்ல; அந்த ஆண்டவன் நேரில் வந்தாலும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவே முடியாது.
வலம்புரி
வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment