ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும்போது இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள், இந்தியா, இலங்கை என்ற எல்லைகள் கடந்து வேறுபல நாடுகளிலும் அதுபற்றி ஆராயப்படும் அளவிற்கு நிலைமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதத்திற்கு மேல் கடிதம் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இதனிடையே ஒட்டுமொத்த தமிழகமும் ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. நிலைமை இப்படியாக இருக்கையில், இந்திய மத்திய அரசு என்ன முடிபை எடுக்கும் என் பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமாக இருந்தால் அது ஆளும் கட்சிக்காரர்களுக்கு தீராப் பழியைத் தரும்.
எட்டுக்கோடி தமிழ் மக்களினதும் விருப்பத்தை ஆளும் காங்கிரஸ் உதாசீனம் செய்துவிட்டது என்ற கோசம் ஒலிக்கும். இது காங்கிரஸ் கட்சி வட இந்தியாவில் சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளை இந்தியா முழுவதற்கும் விஸ்தரிக்க வழியமைத்துவிடும். அதேசமயம் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். ஆகஇ இலங்கைத் தமிழர்களின் மிகத் துன்பகரமான சூழ்நிலையில் இந்தியா இப்படி நடந்து கொண்டது என்ற பழிச்சொல்லை எந்தக் காலத் திலும் நீக்க முடியாமல் போகும்.
மாறாக இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமாயின் இலங்கை - இந்திய உறவு கெடும். அத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவை இலங்கை வேகமாக வளர்த்துக் கொள்ளவும் செய்யும். இந்நிலைமையானது தமிழ் மக்களுக்கு சாதகத் தன்மையையே ஏற்படுத்தும். எதுவாயினும், இந்தியா நடுநிலை வகித்தல் என்ற முடிபை எடுக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறிக் கொள்கின்றனர்.
இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் நிலையில், இந்திய -அமெரிக்க உறவு பலப்படுவதற்கும், அதன் மூலம் இலங்கையை அதட்டி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வைப்பதற்குமான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அத்துடன் இலங்கையை அதட்டும்போது அந்த அதட்டல் சீனாஇ பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இலங்கை உறவை வெட்டுவதாகவும் அமையலாம். நிலைமை எப்படியாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment