ஜனாதிபதி கோபிப்பார் ; இந்தியப் பிரதமர் விரும்பமாட்டார் இப்படி நினைப்பது மடத்தனம்

ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகி ரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரி வித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற வாராந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங்கி, பணிந்து வந்து இரண்டாந்தர குடிமக்களாகத்தான் வாழ வேண்டும் என சிலர் இங்கே எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் இனக்கலவரம் வரும் எனவும் பயமுறுத்துகிறார்கள். இத்தகைய இனவாத சிந்தனைக்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை இலங் கையிலே தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் துணை புரிய வேண்டும். உலகளாவிய மனித உரிமை அமைப்புகளின் அழுத்தம் காரணமாகஇ அரசாங்கத்தை இன்று நன்கு புரிந்து கொண்டுள்ள உலக நாடுகள் எமக்கு துணைவந்தேயாக வேண்டும் என்ற நிலைமை இன்று உருவாகி விட்டது.

அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை முற்போக்கு சக்திக ளும் எம்முடன் கரம் கோர்க்கின்ற சூழல் இன்று நிலவுகின்றது. அவ்வாறு உருவாகிவரும் சாதகமான சூழ்நிலை உணர் ந்து செயல்படுவதுதான் ஜெனிவா மாநாட்டிற்கு அடுத்த கட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை யில் மனித உரிமைகளுக்காக பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் குரல் கொடுத்துப் போராடுகின்ற மனித உரிமைப் போராளிகளையும், மதத் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் விடுதலைப் புலிகளிடம் கையூட்டு வாங்கிய வர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பர வலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கூறுகின்ற அரசியல் செயற்பாட்டாளர்களை விடுதலைப்புலிகள் என்று இந்த அரசின் வால் கள் சொல்கின்றன.

அதேபோல் எமது உள்நாட்டு பிரச்சினையை ஏன் சர்வதேசத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி கேட்டு இவர் கள் எம்மை துளைத்து எடுக்கிறார்கள். எமது தேசிய இனப்பிரச்சினைக்கு உள் நாட்டில் தீர்வை தயாராக வைத்துக் கொண்டு இருப்பதைப்போல இது இருக்கிறது. ஆனால் எந்த ஒரு தீர்வுத்திட்டமும் இல்லை என்பதும், அப்படி எந்த ஒரு தீர்விற்கும் இவர்கள் தயாராக இல்லை என்பதும்தான் உண்மை. அதேபோல் உண்மையில் உள்நாட்டில் தீர்வு இருந்தால் தமிழர்கள் வெளிநாட்டை தேடி போயிருக்க மாட்டார்கள். உள்நாட்டில் தீர்வு இருந்தால் வெளிநாட்டை தேடி தமிழர்கள் ஏன் போகவேண்டும்?

இது ஏதோ செய்யக்கூடாத பாவம் என்பதைப் போல் காட்டுகிறார்கள். 1989இல் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்­ ஜெனிவா போனார். அவருடன் கூட இருந்தது வாசுதேவ நாணயக்காரவும்இஎமது இன்றைய ஜெனிவாவுக்கான பிரதிநிதி தமரா குணநாயகமும்தான். இன்று இவர்களு க்கு தமது கடந்த காலம் மறந்துவிட்டது. இந்த நாட்டிலே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லைஇ மனித உரிமை பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்பதுதான் உண்மை. இதை அரசாங்கத்தின் தமிழ் வால்கள் உணர்ந்து தமது எஜமானவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். இன்று உருவாகி இருப்பது ஒரு பொற் காலம். இதை பெறுவதற் காக நாம் கொடுத்த விலை அளப்பரியது. எனவே இதை நம் கவனமாக பயன்படுத்த வேண்டும். அவருக்கு ஒளிந்து, இவருக்கு பயந்து, செய்ய வேண்டிய விடயங்களை, செய்ய வேண்டிய வேளைகளில் செய்ய மறுத்தால் அல்லது மறந் தால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் நினை வில் வைத்து கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தனதுரையில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment