போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர்பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவெடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.
1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப் பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதிகுழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்தகாலத்தில் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’ என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன் இணைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளிற்காகவும் விடுiலைக்காகவும் இடைவிடாது சலிப்பின்றி போராடக்கூடிய புதியபோராளிக் குழுவை உருவாக்கமுடியும் எனநம்பினார். ஆனால் தானே ஊருக்குள் சென்று கலாபதியையோ அல்லது வேறு யாரையுமோ சந்திப்பது தன்னைப்பற்றித் தெரிந்த ஏனையவர்களிற்கு தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொண்டார்;. இதனால 1973இல் கெருடாவில் புதுவீட்டுச்சந்தியில் குட்டிமணியின் நண்பன இராசா எனஅழைக்கப்பட்ட பரமேஸ்வரனின் வீட்டில் தான் தலைமறைவாக இருந்தகாலத்தில் தன்னுடன் நட்புடன் பழகிய நாதனை கலாபதியுடன் தொடர்பு ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திஇருந்தார்.
கச்சதீவு உற்ச்சவநாளில் புனிதஅந்தோனியார்
ஆனால் முன்பின் அறிமுகமற்ற நிலையில் கலாபதியை அடையாளம் தெரியாமல் வேறு யாரையும் நாதன் அணுகி விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கையாக கலாபதி மற்றும் நண்பனுடைய பெயர்களை எழுதிச்செல்லுமாறு கூறியிருந்தார் கலாபதிகுழுவினரை பெறுத்தவரையில் கலாபதியின்தந்தை வெடிபொருட்களை கையாள்வதிலும் கைக்குண்டு களத்தயாரிப்பதிலும் நிபுணத்துவம் வாயந்;த ‘மில்கார பாலசுப்பிரமணியமா கும்’. இதன்மூலம் தந்தையிடமிருந்து சிறுவயதிலேயே அவ்வித்தைகளை கலாபதியும் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருமுறை இவர்களால் விளையாட்டாக தயாரிக்கப்பட்டு வீட்டுஅலுமாரியின்கீழ் குண்டொன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த இவர்களது தாயாரின் துடைப்பத்தில் தட்டுப்பட்டு அதுவெடித்ததனால் தாயார்தனது வலதுகையில் நான்கு விரல்களினை இழந்திருந்தார். இவ்வாறு வெடிமருந்துகளை கையாள்வதில் நன்கு பரிச்சயமுள்ளவராகவே கலாபதி எப்பொழுதும் காணப்பட்டார். இவரிடம் காணப்பட்ட இத்தகைய தொழில் நுட்பஇரகசியமும் இவைகளின் மீதான இவருடைய தீராதகாதலும் பொதுவாகவே அன்றைய வல்வெட்டித்துறை இளைஞர்களிடையே ஏற்படும் சிங்களப்படையினரை தாக்கவேண்டும் என்ற உணர்விற்கு வடிகாலாய் அமைந்தது.
கலாபதியும் அவருடைய பாடசாலைத்தோழர்கள் சிலரும் குறிப்பாக இவருடையவீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்தவர்களான 1986இல் கடற்படையி னருடனான மோதலில் வீரமரணமடைந்த ‘ரகீம்’ என அழைக்கப்பட்ட வா.த. கிருஸ்ணமூர்த்தியும் மற்றைய பெயர்குறிப்பிடாத நண்பனும் சின்னச்சோதி நடேசுதாஸன்குழுவினரால் மோகனிடம் ஒப்படைத்துசெல்லப்பட்ட கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டதுடன் அதற்கான குண்டுகளை தாமே தயாரித்து ஊறணி பொலிகண்டிக்கு இடைப்பட்ட கடற்கரையோரம் நடமாடும் இராணுவத்தி னரைத்தாக்கும் முயற்சியில் ஒருநாள்முழுக்க காத்திருந்து அன்று இராணுவம் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இதுபோலவே அந்நாட்களில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வாழ்ந்திருந்த சிவநேசன் என்ற சிதம்பராக் கல்லூரி அதிபர் கல்விஅமைச்சின் செயலாளர் ‘துடாவை’i யை அழைத்து தேனீர்விருந்து வைக்கமுயன்றார். இதன்காரணமாக அவரது வீட்டிற்கு குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்திலும் இக்குழுவினரின் பெயரே அன்றுபிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுபோலவே தியாகி பொன். சிவகுமா ரனும் தனது ஆயுதத்தேவையைமுன்னிட்டு தனதுநண்பன் பட்டுமூலம் இவர்களை ஒருமுறை அணுகியிருநதார்.
இந்தநிலையிலேயே குலம் மூலம் இவர்களின் செயல்களையும் இவர்களின் எதிர்காலஎண்ணங்களையும் புரிந்துகொண்ட தம்பி எனும் பிரபாகரனும் தொடர்ந்து சலிப்பின்றி போராடக்கூடிய குழுவைப்பற்றி சிந்தித்தபோதே இவர்களை உள்வாங்கி ஈழத்தமிழருக்கான ஆயுதப் போராட்டக்குழுவை உருவாக்கமுடியும் என நம்பியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே கலாபதியும் நண்பனும் பிரபாகரனின் தலைமையில் இணைந்து செயலாற்றமுன்வந்தனர். அக்கணத்திலேயே அதாவது 1975 சித்திரை மாதம் பிரபாகரனின் தலைமையில் முதன்முதலாக ‘புதிய தமிழ்ப்புலிகள்’ இயக்கம் தனது வரலாற்றுப்பிறப்பை எடுத்தது. அதுவரை ‘தம்பி’ என அழைக்கப்பட்டுவந்த பிரபாகரனும் ‘தலைவர்’ பிரபாகரனாக அன்று முதல் மாற்றமடைந்தார். கருத்துநிலையில் இருந்த தமிழ்ஈழத்தை களத்தில் காணும் முனைப்புடனும் பெருநம்பிக்கையுடனும் இவர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினைத் தொடங்கினர். இவ்வாறு தலைவர் பிரபாகரனினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட முதலாவது போராளியாக கலாபதி தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிக்கப்படுகின்றார்.
1975 ஏப்ரலில் கலாபதியையும் நண்பனையும் தன்னுடன் இணைத்து புதியபுலிகள் இயக்கத்தை உருவாக்கிய தலைவர்பிரபாகரன் அன்றுமுதல் ஈழத் தமிழர்களின் ஆயதப்போராட்டத்தை தலைமையேற்றுக்கொண்டார். பத்துவருடத்தில்; 1985 ஏப்ரலில்; தளபதி கிட்;டு நடத்;திய யாழ் பொலிஸ் நிலைய தாக்குதல் மற்றும் மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பொலிஸ்நிலைய முற்றுகை என்பவற்றுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பெரும்பகுதிகளையும் வன்னிப்பெரு நிலத்தின் பலபகுதிகளையும் தமது இறமையுள்ள தளப்பிரதேசமாக பிரபாகரன்; தலைமையிலான விடுதலைப்புலிகள் மீட்டெடுத்துக்கொண்டமை ஈழத்தமிழரின் வரலாற்றில் பெரும்சாதனையாக என்றும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஒருபோராட்டக்குழுவானது வளர்ச்சிகண்டு பல்கிப்பெருமளவிலான போராளி களை உள்வாங்கும்பொழுது தலைமையின் அல்லது தளபதியினுடைய கட்டளை க்கு கீழ்படியும் இராணுவமனநிலையுள்ள போராளிகளை பயிற்;சியின் மூலம் உருவாக்கமுடியும். ஆனால் புனிதஇலட்சியத்தை வரித்துக்கொண்டு சகல வளங்களும் நிரம்பிய ஒருஅரசிற்கெதிராக போராடமுற்படும் ஒரு தனியான முதன் நிலைப்போராளி தன்போன்ற அல்லது தன்னுடன் மனமிசைந்து இயங்கக்கூடிய இரண்டாவதுநபரை தேடிக்கொள்வது மிகமிக கடினமானதாகும். முன்அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து இது எப்பொழுதும் சாத்தியமாவதில்லை. தன்னைச்சூழ இருக்கும் நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினரிடமிருந்தே இவ்வரியசெயலை செய்ய முடியும். ஏனெனில் தான் சொல்வதை செய்யக்கூடியவராகவும் இன்னும் கூறினால் தன்மனதின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இசைந்து செயலாற்றக்கூடியவராகவும் இரண்டாம்நபர் அமையவேண்டும்.
இவ்வாறுசரியாக அமைந்தாலே செயல்ரீதியாக போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியும். இவ்வகையில் தலைவர் பிரபாகரனது தெரிவானதுமிகச்சரியானதாகவேஅமைந்தது வரலாறுகண்டஉண்மையாகும்’
இதன்பின் தொடர்ந்துவந்த சிலவாரங்கள் இவ்வாறான பலசந்திப்புகள் வல்வெட்டித்துறை சிவன்கோவில் தெற்குவீதியிலும் தீருவில் வயலோ ரங்களிலும் நெற்கொழுமைதானத்திலும் இவைகளின் அயலிலும் தொடர்ந்தன. இவ்வாறு சந்திக்கும்நேரங்களில் புதிய போராளிக்குழுவை அமைப்பதிலும் அதன் எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதிலும் தனது பேரவாவை வெளிப்படுத்தியதுடன் அதற்கான பெயரையும் பெயருக்கான காரணத்தையும் இவர்களிற்கு தலைவர் விளக்கமாக கூறிவரலானார்.
கலாபதி குழுவினரிடமிருந்த கைத்துப்பாக்கி போலவே தலைவர்பிரபாகரன் தனது தற்பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியும் அதிஸ்டவசமாக 4.05இலக்க வகையைச் சேர்ந்திருந்தது. இதனால் கலாபதியால் கட்டப்பெற்ற துப்பாக்கிக் குண்டுகளை அதற்கும் பாவிக்கக்கூடியதாகவிருந்தது. அத்துப்பாக்கி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டின் பின்புறம் மக்கள் நடமாட்டமற்றிருந்த இடத்திலிருந்த பனையொன்றில் சந்தர்பம் கிடைக்கும் நேரங்களில் துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் இவர்கள் மேற்கொண்டனர். தனது முதலாவது குறி பலரால் குறிவைக்கப்பட்டும் சிங்களஅரசின் ஆதரவா ளராகவும் அமைப்பாளராகவும் தொடர்ந்து செயற்படும் ‘அல்பிரட்துரையப்பா’ என்பதனையும் இக்காலங்களில் அடிக்கடி பிரபாகரன் வலியுறுத்தினார்.
1987இல் முதன்முறையாக சுதுமலை பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மக்கள்முன் தோன்றிய மண்ணின் மைந்தர்களான தேசியதலைவர் பிரபாகரன் பிரதித்தலைவர் மாத்தையா தானைத்தளபதிகளான கிட்டு ரகு குமரப்பா திலீபன் போன்றோர்
அத்துடன் தான் அறிந்த காலம் முதல் எதையாவது செய்து கொண்டிருக்கும் செட்டியையும் இணைத்து தமது கட்டதாக்குதல் நகர்வினை விரைவில் முன்னெடுப்பதாகவும் கூறினார்.
அவர்கூறியது போலவே தலைவரும் கலாபதியும் ஏப்ரல்மாதஇறுதியில் சுதுமலைக்கு சென்று செட்டியின்நண்பனான’பற்றிக்’உடையவீட்டில் தலைமறைவாக இருந்த செட்டியுடன் தமதுஅடுத்தகட்ட நகர்வினைப்பற்றி விவாதித்தனர். அன்று அவர்களிலிருந்த சூழ்நிலையில் நிதிஎன்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை புரிந்துகொண்டனர். ஏனெனில் நிதி இருந்தாலே தமது எதிர்காலத் தேவைக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதை பர்pபூரணமாக உணர்ந்துகொண்டனர். இதனால் தமது முதலாவது செயல்முறையாக நிதித் தேவையினை பூர்த்திசெய்யும் வழிவகைகளைப்பற்றி ஆராயமுற்பட்டனர். இறுதியில் உடனடி நிதித்தேவைக்காக அளவெட்டி பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தின் நிதியைப்பறித்தெடுக்கலாம் என முடிவாயிற்று. எனினும் தலைவர் பிரபாகரனின் முதன்நிலைக்குறியான துரையப்பாவை தொடர்ந்து கண்காணிக்கவும் முயன்றனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment