அடுத்து என்ன?


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடுத்து என்ன? என்ற இந்தக் கேள்வி உள்நாட்டிலும் இராஜதந்திரிகள் வெளிநாட்டுத் தூதுவராலயங்களில் இருந்து மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் எழுப்பப்பட்டது. இது குறித்த பல கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டத்தில் உள்ளவர்களின் பல்வேறு தளத்தில் இருந்து எழுந்த எதிர்பார்ப்புகளுடன் பல முனைகளில் இருந்தும் எழுப்பப்பட்டன.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் தொடங்குவதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன் அயல் நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற மாலை சந்திப்பில் கலந்து கொண்ட போது அங்கு வருகை தந்த புதியவர் இன்னும் ஆறு மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று திட்டவட்டமாக ஒரு செய்தியைத் தெரிவித்தார்.

அவர் கூறியது போல் போரும் ஆரம்பித்து மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சி மற்றும் முக்கிய இடங்கள் படைத்தரப்பினரின் கைகளில் வீழ்ந்தன. 

இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய உதவி தூதுவரின் வாசஸ்தலத்தில் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. போரின் முடிவுடன் அடுத்து என்ன என்ற கேள்வியை உதவித் தூதுவர் அரசியல் துறை உயரதிகாரி ஆகிய இருவரிடமும் வினவினேன். 

போரின் முடிவுடன் நடத்தப்படும் தேர்தல் மூலம் வடக்குக் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் புதிய தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தை மூலம் இன விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என்று அவர்கள் இருவரும் பதில் அளித்தனர். போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

உண்மையில் ""அடுத்து என்ன'' என்பது குறித்து தெரிந்து கொள்வதில்; தெளிவு பெறுவதில்; வரையறை செய்து கொள்வதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டிய போதும் அரசாங்கத் தரப்பு அமைதியாக அரசியல் தீர்வு என்ற ஒரு வார்த்தைக்குள் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பை அமர்த்தி விட்டது. உண்மையில் அரசாங்கம் தனது நேச சக்திகளின் உதவியுடன் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே முனைப்புக் காட்டியதேயொழிய எந்தவித அரசியல் தீர்வு குறித்த நோக்கத்தையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை கடந்த மூன்று வருட கால அரசாங்கத்தின் அசைவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த ஒரு பின்னணியில் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ""அடுத்து என்ன'' என்பதற்கான தீர்மானத்தை எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

குறிப்பாக தமிழ்த் தலைமைத்துவங்களைப் பொறுத்து அடுத்து என்ன என்பது பற்றிய தமது உறுதி மொழியை வழங்கியாக வேண்டும்.

வெறுமனே தேர்தல் கோஷங்களில் மாத்திரம் காலங்களை நகர்த்தாமல் அடுத்த நகர்வு குறித்து சிந்திக்க வேண்டும்.
இன்று கிழக்கு மாகõணத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். 

அரசாங்கமோ தமிழ்பேசும்மக்களை முட்டாள்களாக்கும் வகையில் கிழக்குத்தேர்தலை முன் கூட்டியே நடத்துகின்றது. தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல், காணி அபகரிப்புகான தீர்வு போன்ற பல விடயங்களுக்கு தீர்வு எதனையும் காணாது அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு தேர்தல் அறிவிப்பை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கருமலையூற்று முஸ்லிம் கிராமம் போன்று பல தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோய் உள்ளன. இவைகளுக்கெல்லாம் தீர்வு காணாது வாக்களிக்க வருமாறு கோருவதில் என்ன தர்மம் இருக்கின்றதென்று தெரியவில்லை.

ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கு என்று ஒரு"தர்மம்' இருக்கின்றது. பாரிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. குறிப்பாக தமிழ் பேசும் தலைமைகளிடம் இருந்து ஒரு உறுதியான, தெளிவான உறுதிமொழியைப் பெறல் வேண்டும்.

ஏனெனில், தமிழ், முஸ்லிம் இரு இனங்களும் பிரித்தாளப்படுகின்றன. இந்த பிரித்தாளும் தந்திரத்தை அரசாங்கத்தரப்பு மற்றும் தென்னிலங்கைச் க்திகளால் மாத்திரம் அல்ல தமிழ் பேசும் தலைமைகளாலும் மிகக் கச்சிதமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. எனவே, தமிழ் பேசும் மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.
 
குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்து 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு அமைய தேர்தல் ஆணை கோரப்பட்டது. இது போன்று தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கோரி ஆணை வழங்குமாறு தமிழ் தலைமைகள் கோர வேண்டும்.

*அதிகாரப் பரவலாக்களை வலியுறுத்தி,

*உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி,

*தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கோரி,

*சமஷ்டி முறையை அமுல்படுத்துமாறு கோரி,

*வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி,

தமிழ்த் தலைமைகள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 

இதற்கும் அப்பால் முஸ்லிம் மக்களுடனான புரிந்துணர்வு அரசியல் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும்.

பண்டாரநாயக்க செல்வா உடன்படிக்கையில் முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட்டு அம்பாறையை மையமாகக் கொண்ட அலகு முஸ்லிம்களுக்கு என உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் திறந்த மனதுடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைத்துவங்கள் இதய சுத்தியுடனான இணக்கப்பாட்டுக்கு முன் வருவார்களேயானால் மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பது குறித்தும் தமிழர் தரப்பு முஸ்லிம் தரப்புகளுடன் பேச்சவார்த்தை நடத்தலாம்.

தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தை தமிழ்த் தலைமைத்துவங்கள் துரிதப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் தமிழ் மக்களுக்குச் சார்பான பரப்புரையை மிகக் காத்திரமாக முன்னெடுக்க தமிழ் தலைமைத்துவங்கள் முன் வர வேண்டும்.

கிழக்குத் தேர்தலுக்குப் பின் இதுதான் எமது அரசியல் பயணம் என்பதை தமிழ் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களுக்கு உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

கிழக்குத்தேர்தலில் தாம் தொடர்ந்தும் மடையர்களோ, மந்தைகளோ இல்லை என்பதை கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ம்பந்தப்பட்ட தலைமைகளுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழ் பேசும் தலைமைத்துவங்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

அதற்காக "அடுத்து என்ன' (what next) என்பது பற்றித் தமிழ் பேசும் மக்கள் தமிழ் பேசும் தலைமைத்துவங்களிடம் கேட்க வேண்டும்.

வி.தேவராஜ் 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. The so called Tamil Leaders are responsible for the present position of Tamil Speaking People today. They had no policy or plan.

    They always cheated the innocent Tamils and safeguard their position and enjoyed facilities and privileges of the Govt

    They were not keen in solving the problem of the Tamil at any time. During 1977 propaganda for Tamil Eelam I asked the position and status of Muslims if Tamil Eelam achieved was not answered in that public meeting held in Mannar headed by the leader of TULF SJV.

    This Tamil Eelam resolution had been taken even without a consultation with the member parties especially the Thodaman Congress. The name TULF had been used by the Tamil Federal Party for their own benefits.

    They won that 1977 General election and became the main Opposition Party and forget about the Tamil Eelam. If they had changed their policy, they would have resigned the seats and contested in the new policy or get the sanction of the general public.

    This resulted the losses of lives and all other things with untold sufferings for nearly three decades. Even they were not interested in advising the Tigers to put them in the righteous path of achieving a meaningful solution to the Tamils,when they were with them to get seats in the Parliament with their helps and blessings.

    They were in illusion and not willing to realize the realities. Now also they are not sincere to the Tamils but safeguarding their position in Parliament.

    When time permits I will write further on this.

    ReplyDelete