மன்னார் நீதிபதிக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நாட்டின் நீதித்துறைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட் டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, இந்த விடயம் தொடர்பில் அரசு ஏன் இது வரையில் நடவடிக்கை எடுக்காதுள்ளது எனவும் கேள்வி எழுப்பியது.
வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தேவையில்லை என்ற நிலை நாட்டில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்து டன், அமைச்சர்கள் வழக்குகளில் தீர்ப்பு மட்டுமே வழங்காதுள்ளனர் எனத் தெரி வித்த ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மன்னார் சம்பவம் மட்டுமல்லாது, நாட்டில் இடம் பெற்ற அனைத்துக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். அது அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கடந்த வாரத்தில் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மீறும் வகையில் குற்றச்செயல்கள் நடந்துள்ளன. மன்னார் நீதிபதிக்கு அமைச்சரொருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நாட்டின் நீதித்துறைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த அந்த அமைச்சருக்கு எதிராக அரசு ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்காதுள்ளது? இந்த விடயத்தை அது அப்படியே மூடி மறைக்கத் திட்டமிடுகிறது. இதனைத் தவிர்த்து, இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டுமல்லாது, நாட்டில் இடம்பெறும் அனைத்து குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மன்னார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் எனக் கூறியுள்ளார். இதுபோன்ற பல குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நாம் நன்கு அறிந்துள்ளோம்.
கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட ரொஷான் சானகவின் மரணம் குறித்து விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் அச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோலவே நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் அரசு அசமந்தப் போக்குடன் செயற்படாமல் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
கடந்த 5 வருடங்களுக்குள் 15 ஆயிரத்து 158 சிறுவர் துஷ்பிரயோகங்களும், 6 ஆயிரத்து 343 பெண்கள் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. இது நாட்டின் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத நிகழ்வாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இச்சம்பவம் வரலாற்றில் பதியப்படவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கினார். ஆனால், இதுவரையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகமாக நடந்துள்ளன.
அதுமட்டுமல்லாது, நாட்டில் தர்மராஜ்ஜியத்தை அமைப்பதாகக் கூறி 2005 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய அரசுடன் இணைந்தது. தாம் அமைப்போம் எனக் கூறிய தர்மராஜ்ஜியம் இன்று பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களால் நிறைந்துள்ளது. சட்டம் முற்றுமுழுதாக சீர்குலைந்துள்ளது.
ஆரம்ப காலங்களில் குற்றச் செயல்கள் இடம்பெற்றபோது யுத்தம் இடம்பெற்றதாக அரசு கூறியது. யுத்தம் நிறைவுபெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் ஏன் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன? நாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெறாது தடுக்கவேண்டியது அரசின் பொறுப்பு.
அதுமட்டுமல்லாது, நாட்டினுள் சுதந்திரமான சூழலை உருவாக்குவதுடன், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் ஏற்படாத வகையில் நீதித்துறை சுயநினைவாக இயங்குவதற்கும் வழிவகுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.
நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் வெறும் கொள்கையளவில் இருப்பதில் எவ்வித பயனும் இல்லை. அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழமுடியும் என்றார்.

Mr. Secretary/UNP,
ReplyDeleteBefore you criticize the Minister for your political benefits, try to understand the back ground of the problem. You do not talk about the attack and tear gas by the Police and Army on the peaceful demonstration to have their rights in their territory.
Please remember that you are talking against the North Muslims especially Mannar Muslims who were victims during your UNP regime and still they are suffering and present problem is due to the forcible eviction of innocent Muslims from North in 1990 by the terorist Tigers with the connivance of your party.
If you want to attack the Government, find some other ways. Why did not attack the Govt. when A Thero attacked the Dampulla Masjid in the day light in front of the Police Officers and DS of the area and some other officers.
Do not forget the present status of the country is due to your party's misrule and the inefficiency.