பொலிஸாருக்கு எதுவுமே தெரியாதாம் நெல்லியடிப் போராட்டத்தின் போது புலிக்கொடியுடன் நடமாடியவர்கள் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக இது வரை எங்களுக்கு எந்தவகையான முறைப்பாடும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு முறைப் பாடும் அந்த நபர்கள் தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறுமிடத்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம்.
இது நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுடான வாராந்த சந்திப்பின் போது யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து. நெல்லியடியில் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் கடமைப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெற் றால் அதனைக் கட்டுப்படுத்தவது. அத்தனை பொலி ஸாரும் பார்த்திருக்கவே புலிக்கொடி வீதியில் பறந்து சென்றது.
இந்த நிலையில் புலிக்கொடி பறந்த விடயம் தமக்கு தெரியாது என்றும், அது பற்றி எமக்கு எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியிருப் பது பொலிஸாரின் கடமையுணர்வை வெளிப்படுத்து கின்றது.
விடுதலைப்புலிகள் கடந்த 2009 மே மாதம் 19 இல் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இனி விடுதலைப்புலிகளால் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழமுடியும்'' என்று அறிவித்தது இலங்கை அரசு.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பலருக்கு உழைப்பு, பிழைப்பு அற்றுப் போய்விட்டது. காட்டிக் கொடுப்புக்கள், துரோகத்தனங்கள் என்பவற்றுக்காக விலை மதிக்க முடியாத சம்பளம் பெற்ற சிலர் இன்று கை கடிக்கக் காத்திருக்க வேண்டியவர்களாகி விட்டனர்.
அவர்களுக்கான துணைப்படை, ஒட்டுப்படைக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இவர்கள் பிழைப்பு நடத்து வதற்கு நாட்டில் அமைதியோ சமாதானமோ தொடர்வது பொருத்தமற்றது. அவர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் குழப்பம் நிகழ வேண்டும்.
யாருக்காவது நெருக்கடி கொடுக்க வேண்டும் இதன் மூலம்தான் அவர்களால் தமது வயிற்றை நிரப்ப முடியும். இது இலங்கை அரசும் அவர்களும் சேர்ந்து வகுத்த கோட்பாடு. தொட்டிலில் இருந்து இவர்களுக்கு ஊட்டப்பட்ட துரோகத் தனம், புலிகள் இல்லை என்றால் மட்டும் போய்விடுமா என்ன?
வடக்குகிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவதன் மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாகத் தமது கட்டுமானங்களை வளப்படுத்து வதோடு சமூக ரீதியான சிந்தனைகளிலும் ஆர்வம் கொள்வர். இதனால் விடுதலை பற்றிய, உரிமைகள் பற்றிய எண்ணப் பாங்குகள் இவர்கள் மத்தியில் மீண்டும் துளிர்விட்டு மீண்டும் ஓர் இன விடுதலைப் போராட்டத்துக்குத் தயாராகிவிடுவார்களோ என்ற அச்சமும் கேள்வியும் சிங்களத்தரப்பில் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
இதுவே வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இலங்கை அரசு எல் லாக் கட்டமைப்புகளிலும் உள் நுழைந்து கொள்ளவும் மாற்றம் செய்து கொள்ளவும் நெருக்கடி கொடுக்கவும் காரணமாக அமைகிறது.
புலிக்கொடியை ஏந்துவது புலிகளா?
யாழ். குடாநாட்டில் நடை பெற்று முடிந்த இரண்டு மக்கள் போராட்டங்களில் புலிக்கொடி ஓர் உள்ளீடாக நுழைந்துள்ளது. ஆனால் 2009ற்குப் பின்னர் இதுவரையில் நடந்த எந்தவொரு போராட்டத்திலும் போராட்டக்காரர்கள் தனி ஈழம் கோரியோ, விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்பக் கோரியோ குரல் கொடுக்க வில்லை.
அவர்களுக்கு அந்த ஆசைகள் உள்ளூர இருந்தாலும் பகிரங்கமாக அவர்கள் அதனை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பதிலாக தமது நிலங்களில் அமைதியாகவும் நிம் மதியாகவும் வாழவேண்டும் என்றே தமக்குரிய உரிமைகளைக் கேட்டு தமிழ் மக்கள் போராடுகின்றனர்.
இப்படிப் போராட முயல்ப வர்களையும் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை யும் புலிகள் என்று முத்திரை குத்துவதற்காகவே அண்மைய நாள்களில் யாழ். குடாநாட்டில் புலிக் கொடிகள் பறந்தன.
கடந்த வாரம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி மீண்டும் ஒரு தடவை பறந்தது. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் புலிக் கொடி ஏந்தியவாறு வட்டமிட்டனர். இவர்கள் கறுப்புக் கண்ணாடிகளால் மறைக்கப்பட்ட, கறுப்பு உடைகளைத் தரித்திருந்தனர். அரைக்காற் சட்டையை ஒருவர் அணிந்திருந்தார்.
இவர்களது மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் NP HX-2680 என்ற இலக்கம் பொறிக்கப் பட்டிருந்தது.
இந்த இலக்கம் இலங்கையில் எந்தப் பாகத்திலும் பாவனையில் இருந்தாலும் அதன் உரிமையாளர் யார் என்பதை பதிவுகளில் இருந்து பொலிஸாரால் இலகுவாகக் கண்டறிய முடியும். ஆனால், பொலிஸாரிடம் இவர்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் எண் வழங்கப்பட்டு நான்கு நாள்கள் கடந்த போதும் இதுவரை பொலிஸார் அதன் மீது நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் உரிமை யாளரைக்கூடக் கைது செய்ய வில்லை.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய முன்னணியின் சட்டத் தரணிகளால் பருத்தித்துறை நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்ற விவரம் வெளிவந்தேயாக வேண்டும். ஆனால், அப்போது அது திருடப் பட்ட மோட்டார் சைக்கிள் என்று பொலிஸார் அறிக்கை சமர்ப்பித் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பொலிஸாரின் வேண்டுகை
நெல்லியடியில் மக்கள் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டிருந்த நிலையில் அது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்றும், அசம்பாவிதங்களை உருவாக்கும் என்றும் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டு போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போராட்ட தினத்தன்று நெல்லியடியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களின் வேலை, போராட்டக்காரர்களுக்குப் பாது காப்பளித்து அங்கு யாராவது குழப்பம் விளைவிக்க முற்பட்டால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதே.
ஆனால் எந்தப் பதற்றமும் இன்றி, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், பொலிஸா ருக்கு முன்பாகவே புலிக் கொடியை எடுத்து விரித்து உயர்த்திப் பிடித்தார்கள். மிக லாவகமாக மோட்டார் சைக்கிளில் இரண்டு மூன்று தடவை போராட்டக்காரர்களைச் சுற்றிய மர்ம நபர்கள் புலிக் கொடியை ஏந்தியவாறே அங்கிருந்து ஓடி மறைந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்தவோ கைது செய்யவோ, இல்லை இடைஞ்சல் தானும் செய்யவோ அங்கிருந்த ஒரு பொலிஸார் கூட முயற்சிக்கவில்லை. கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களால் ஏன் இந்த நபர்களைக் கைது செய்யமுடியவில்லை?
கிறிஸ் பூத சம்பவங்கள்
யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பூத சர்ச்சை எழுந்திருந்த போது மக்கள் வீடுகளுக்குள் நுழையும் கிறிஸ் பூதங்களை பிடிக்க முற்பட்ட சமயத்தில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். காரணம் "பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது' என்பதே.
அப்படி இருக்கையில் சட்டத்தை மதிக்காது புலிக்கொடியை ஏந்திய மர்ம நபர்களைப் பிடிக்காது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தது எதற்காக?
போர் முடிந்த பின்னர் யாழ்ப் பாணத்தில் புலிக்கொடி காட்டப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. இதற்கு முன்னர் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய பேரணியின் கடைசிப் பகுதியில் முதல் தடவையாக புலிக்கொடி காட்டப்பட்டது.
அப்போது புலிக் கொடி காட் டியவர்களையும் இன்று வரைக் கும் பொலிஸார் கைது செய்ய வில்லை. அரச சார்பு ஊடகம் ஒன்றைச் சேர்ந்தவர்களே அந்தப் புலிக்கொடியைத் தூக்கிக் காட்டி னார்கள் என்று அப்போது தக வல்கள் வெளியாகி இருந்தன.
இந்த மே தினப் பேரணி ஐக்கிய தேசியக் கட்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் இணைந்து நடத்தப்பட்டது. நெல்லியடி ஆர்ப்பாட்டமோ தமிழ்த் தேசிய முன்னணியால் நடத்தப்பட்டது. வவுனியா சிறைச் சாலையில் இராணுவ சிறப்பு அதிரடிப் படையினராலும் பொலிஸாராலும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்தும், வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதைக் கண்டித்துமே நெல்லியடியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை முன்னரே தடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. தவிர யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வல்லைப் பகுதி யில் இராணுவத்தினரால் மறிக்கப் பட்டு பயணிகள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னரே போராட்டத்தில் புலிக் கொடி காட்டப்பட்டது.
இந்த இரு சந்தர்ப்பங்களின் போதும் புலிகளின் ஆதரவாளர் களால் புலிக்கொடிகள் காட்டப் படவில்லை என்பது உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவுச் சக்திகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆகவே இது தமிழர்களுக்கு எதிரான சக்திகளால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட புலிகள் கொடிகள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அனைவருமே புலிகள் என்று அரச தரப்பும் இராணுவமும் கருதுவதன் வெளிப்பாடே இந்தப் புலிக் கொடிகளின் பறப்பு என்று அடித்துக் கூறலாம்.
நாட்டின் பாதுகாப்புக்கோ இறையாண்மைக்கோ குந்தகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் யாராவது செயற்பட்டால் அவரைக் கைது செய்ய பொலிஸாருக்கு உரிமை உள்ளது. ஆனால் நெல்லியடியில் அது நடைபெறவில்லை. அப்படியானால் புலிக் கொடியால் நாட்டின் இறையாண்மைக்குப் பாதகம் ஏதுமில்லை என்று பொலிஸார் கருதி விட்டார்கள் அல்லது அவர்களுக்கு அப்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.
நாவாந்துறையில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் ஆத்திரமடைந்து இராணுவத்தினரோடு முரண்பட்டபோது அந்த ஊரே ஓர் இரவோடு சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் போராட்டங்களின்போது புலிக்கொடி ஏந்துபவர்களால் மட்டும் எப்படித் தப்பிச் செல்ல முடிந்தது? அவர்கள் மட்டும் எப்படித் தவறவிடப்பட்டார்கள்? அவர்கள் ஏன் நடுவீதியிலே போட்டு நசுக்கப்படவில்லை?
ஏனெனில் அதற்கெனக் காரணம் இருந்தது. உதயனுக்குக் கிடைத்த தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வாளர்களால் தற்போது பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இருவரே நெல்லியடியில் புலிக் கொடியை ஏந்தியவர்கள்.
அவர்களுக்கு இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல், பொலிஸாரால் தடைகள், இடைஞ்சல்கள் வராமல் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வேறு இருவரும் கூடவே அனுப்பப்பட்டிருந்தனர்.
பருத்தித்துறையில் இருந்து இவர்கள் புறப்படுவதற்கு முன்னர், நெல்லியடியில் எது நடந்தாலும் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டாம், மேலிடத்தைக் கேட்டுச் செய்யவும் என்ற உத்தரவு அங்கிருந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.
புலிக் கொடியைக் காட்டிவிட்டுத் திரும்பிவிட வேண்டும் என்பது மட்டுமே முன்னாள் புலிகளுக்கு இடப்பட்டிருந்த முக்கிய கட்டளை. வேறு எந்த அசம்பாவிதங்களிலும் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களுக்கு மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நெல்லியடியில் இருந்து புறப்பட்ட அவர்கள் கொடிகாமம் வீதி வழியாகச் சென்று மறைந்தனர். எது எப்படியானாலும் புலிகள் இன விடுதலைக்காகப் போராடினார்கள். அவர்களது போராட்டம் திட்டமிட்டு துரோகிகளாலும், சர்வதேச வல்லரசுகளாலும் நசுக்கப்பட்ட நிலையில் அவர்களின் சின்னங்கள் ஒரு கருப்பொருளாகவே வெளிவருகின்றன.
புலிக்கொடி ஏந்தினால் பிரச்சினை ஏற்படுத்தலாம் என்பது புலனாய்வாளர்களின் நோக்கமாக இருக்கலாம். அது வீரத்தின் கொடி என்பது தமிழ் மக்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு. அவ்வப்போது அதனைத் தூக்கிக் காட்டுவதால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள் என்பதைப் புலனாய்வாளர்கள் உணரும் வரைக்கும் புலிக்கொடி ஏந்தும் படலம் தொடரும்.
நெல்லியடிப் போராட்டத்தின் போது புலிக் கொடி யுடன் நடமாடியவர்கள் பற்றி எமக்கு எதுவுமே தெரி யாது. அப்படிஒரு சம்பவம் நடைபெற்றதாக இது வரை எங்களுக்கு எந்தவகையான முறைப் பாடும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு முறைப் பாடும் அந்த நபர்கள் தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறுமிடத்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வோம். இது நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களு டான வாராந்த சந்திப்பின்போது யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து.
நெல்லியடியில் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கடமைப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெற் றால் அதனைக் கட்டுப்படுத்தவது. அத்தனை பொலி ஸாரும் பார்த்திருக்கவே புலிக்கொடி வீதியில் பறந்து சென்றது.
இந்த நிலையில் புலிக்கொடி பறந்த விடயம் தமக்கு தெரியாது என்றும், அது பற்றி எமக்கு எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் யாழ்.மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியிருப் பது பொலிஸாரின் கடமையுணர்வை வெளிப்படுத்துகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment