இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நாளை கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணம் முன்னெப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் பிரதான ஆங்கில ஊடகங்களிலும் பலநாட்களாக இதுவே பேச்சாக இருந்து வருகிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான செய்திகள் வருவது இயல்பு தான். ஆனால் போர் முடிந்த பின்னர் இந்தியத் தரப்பில் இருந்து, இவ்வாறான ஒருவரின் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது. சிவ்சங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி ஏற்க முன்னர், கொழும்பில் இந்தியத் தூதுவராக பணியாற்றியிருந்தார். அந்தவகையில் இலங்கை அரசுடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர். அவரையே புதுடெல்லி ஒரு சிறப்புத் தூதுவராக கொழும்புக்கு அனுப்பவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை அவர் கொழும்பில் நடத்தப் போகும் இரண்டு சந்திப்புகள் மிக முக்கியமானவை என்று கூறப்படுகிறது.
முதலாவது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப் போகும் சந்திப்பு.
இரண்டாவது - பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நடத்தவுள்ள சந்திப்பு.
இந்த இரண்டு சந்திப்புகளுமே தனித்தனியான சந்திப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் போர் முடிவுக்கு வந்த பின்னர்- கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவையோ, கோட்டாபய ராஜபக்ஷவையோ தனியாக சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா அனுப்பும் முதல் தூதுவர் இவர் தான் என்று தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் அதிகாரம் மிக்கவர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபய ராஜபக்ஷ
இந்த முதலிரு இடங்களை வகிப்போருடன் சிவ்சங்கர் மேனன் தனியாகச் சந்திக்கவுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.வெளிநாட்டு உறவுகளில், தனியான சந்திப்புகள் என்பது பொதுவாக இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்வதுண்டு. ஒன்று- அதிகம் நெருக்கமான சூழலில். இரண்டு- மிகவும் சிக்கலான நேரத்தில்.
சிக்கலான நேரத்தில் நடக்கின்ற இத்தகைய சந்திப்புகள்- வெளிப்படையாக பேச முடியாத விடயங்களைப் பேசுவதற்கு, மறைமுகமாகவோ நேரடியாகவோ எச்சரிக்கை விடுப்பதற்கு உதவும்.
அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் கூட விவகாரங்கள் கசிந்து போகாதபடி இருப்பதற்காக நடத்தப்படுவதுண்டு.
இந்தியாவும் இலங்கையும் இப்போது அதிகம் நெருக்கமான சூழலில் இல்லை என்பதால், இந்தத் தனியான சந்திப்பை வேறு விதமாகவே அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது. அண்மையில் பிரேஸிலில் நடந்த றியோ+ 20 மாநாட்டுக்கு சென்றிருந்த போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தார். இதன்போது கூட முதலில் சிறிது நேரம் இருவரும் தனியாகவே சந்தித்துப் பேசினர். அதையடுத்தே இருநாட்டுக் குழுவினரும் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பிலும் கூட சிவ்சங்கர் மேனன் உடனிருந்தார். மன்மோகன்சிங் தனியான சந்திப்பை நடத்திய பின்னர் தான் சிவ்சங்கர் மேனன் தனியான சந்திப்புக்காக கொழும்புக்கு அனுப்பப்படுகிறார். ஆக, புதுடெல்லி ஒரு இறுக்கமான போக்கில்தான், இருக்கிறது என்பதும், எச்சரிக்கை செய்யும் செய்தியுடன் தான் சிவ்சங்கர் மேனனை புதுடெல்லி அனுப்புகிறது என்பதுமே ஊடகங்களின் பொதுவான எதிர்வு கூறலாக இருக்கிறது.
இதற்குக் காரணம், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒருவித இடைவெளி தான். இதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுப் பிளவு அல்லது விரிசல் என்று சொல்வது பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த உறவுகளில் சுமுகநிலை இல்லை என்பதும், நெருடலான ஒரு நிலையே உள்ளதும் உண்மை.
இந்த நெருடல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைவதையும் அவதானிக்க முடிகிறது.
இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் போட்டு வரும் முட்டுக்கட்டைகளில் ஆகப் பிந்தியதாக, பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இருந்து இந்தியா கழற்றி விடப்பட்டதை குறிப்பிடலாம். ஏற்கனவே, சம்பூரில் கூட்டு முயற்சியாக அனல் மின்நிலையத் திட்டத்தை அமைக்கும் பணி இன்னமும் தொடங்கப்படாமல் இழுபறியில் உள்ளது. நீண்டகாலமாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இந்தத் திட்டத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வரப் போகிறார் என்றதும் அவசரஅவசரமாக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. திருகோணமலையில் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீளப்பெறும் முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இப்போது பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளையும் இந்தியாவிடம் இருந்து பிடுங்கிக் கொண்டுள்ளது அரசாங்கம். இதற்கான உடன்பாடு கையெழுத்திடப்படாது போனாலும், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இந்தியா உதவும் என்று புதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஷவும் மன்மோகன்சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது, பலாலி விமான நிலைய ஓடுபாதையைப் புனரமைக்க இந்தியா உதவியிருந்தது. ஆனால், போர் முடிந்த பின்னர் இந்தியாவை அரசாங்கம் மெல்ல மெல்ல வெட்டி விட்டு வருகிறது. பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகாத போதும் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதைவிட, அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கருத்தை இலங்கை மதிக்காதது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் உதாசீனம் செய்து வருவது போன்ற எல்லாமே இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெறுப்புக் கொள்வதற்கான காரணங்களாக காட்டப்படுகின்றன. இவைபற்றி கொழும்புடன் கண்டிப்பாகப் பேசுவதே, சிவசங்கர் மேனனின் பயண நோக்கம் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் சிவ்சங்கர் மேனனின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது.
உண்மையில் சிவசங்கர் மேனனின் பயணம் குறித்து இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஊடகங்கள் முதலில் செய்திகளை வெளியிட்ட போது, இலங்கை வெளிவிவகார அமைச்சோ அதுபற்றித் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தது. எவ்வாறாயினும் மேனனின் கொழும்பு வருகை என்பது சுமுகமானதொரு சூழலில் இடம்பெறவில்லை. அதுபோலவே அவரது சந்திப்புகளும் சுமுகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
விரைவில் இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குள் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் காங்கிரசுக்கு முக்கியமானவை. அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு உள்ளது. இந்திய அரச, போரை நிறுத்தத் தவறியதுடன், தமிழ்மக்களின் அழிவுகளை வேடிக்கை பார்த்தது என்ற கருத்து தமிழ்நாட்டில் ஆழமாக பதிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை மீண்டும் பெறுவதற்கு இழந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. இலங்கை அரசுடன் கடும் போக்கை வெளிப்படுத்தினால் தான் அதனால் காரியம் சாதிக்க முடியும். இந்தநிலையில் மேனனின் கொழும்பு வருகை இலங்கை மீதான இந்தியாவின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.
கட்டுரையாளர் கே. சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்
Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .
ReplyDeleteஎங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்
விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய
www.tamilpanel.com
நன்றி
இலங்கை நீதீத்துறை தமிழருக்கு நீதி செய்யாது என்பதற்கு அண்மைய யாழ்ப்பாண நீதவானின் அண்மைய தீர்ப்பு நல்ல ஊதாரணம்..சில தமிழ் நீதிபதிகள் தமது தனிபட்ட நன்மைக்காக இப்படி செய்வது எங்களின் சாபகேடு....யாழ்ப்பாணம் இது தொடர்பில் நிறைய அனுபவங்களை கொண்டிருகிறது ...விக்க்னராஜா எனும் ஒருவர் ..தனது காலத்தில் EPDP இடம் காசு வாங்கி பல கொலைகளை மறைத்தவர் .....நிமலராஜன் கொலை உட்பட பல கொலையாளிகளை தப்ப வைத்தவர்.....இப்போ கனேசரஜாஹ்......பாலியல்.கொலை போன்றவற்றுக்கு வாதாடும் EPDP ரங்கன் , TNA ரெமடியாஸ் போன்றவர்களை வைத்துகொண்டு ஊடககங்கள், மக்களின் அரசியல் விருப்பங்களை ,அவர்களும் உரிமைகளை இராணுவதிக்கு சார்பாக தடுக்க முனைகின்றனர் ...யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அநியாயங்களை தடுக்க முடியாத நீதிமன்றம் மக்கள் விருப்பங்களை அடவடியாக தடுக்க முனைவது வேடிக்கை ....அப்படியாயின் ராணுவ அடாவடியை தடுக்க ,காணி அபகரிப்பை தடுக்க என்ன வழி என இந்த நீதவான் கருதுகிறார்
ReplyDeleteஇந்த மற்றைய பட்டப்படிப்புகள் போல சட்ட படிப்பும் இலங்கையில் தகுதிகுறைந்தது என புரிகிறது (அண்மையில் தன நானும் என் பல்கலை படிப்பை இலங்கைல் பூர்த்தி செய்தேன் )..இந்த அடிப்படை அறிவு அற்ற நீதவான் தீர்ப்பு உறுதிபடிதிருகிறது...உண்மையில் நீதீத்துறை மக்கள் நலன்குக்காக செயர்ற்படவேனும் ...ஆனால் இங்கு தன் எஜமானுக்கு வால் ஆட்டுகிறது ....மக்கள் காணி அபகரிப்பு விடயத்தில் பொது நலன் அடிப்பையில் தலையிடாத நீதித்துறை மக்கள் போராட்டதிர்ர்க்கு தேச நலன் என்னும் விடயம் பேசுகிறது .....அமைச்சர் சம்பிக்கவின் கடந்த கிழமை அறிக்கையின் மறு வாசிப்பு இது ...பொதுமக்கள் இராணுவத்தாலும் அதன் துணை படைகளாலும் கொல்லப்பட்ட போதும் காணமல் போன போதும எங்கே போனது எந்த நீதித்துறை..கடந்த வருடம் கிரீஸ் பூதம் என பொது மக்கள் ராணுவத்தால் தாக்கபட்ட போது இந்த நீதவான் எங்கு இர்ருந்தார் ....இன்று வரை நடவடிக்கை இல்லை ...ஊடக நிறுவனங்கள் தாக்கபட்டபோது இவர் என்ன செய்துகொண்டிருந்தார் ..சட்ட விரோதமாக விகாரைகள் கட்டபட்டுகொண்டிருக்கும் இந்த சூழலில் நீத்துரை பொது நல அடிபடியில் நீதி வழங்கவில்லை.....இன்று யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் இவருக்கு தெரியாத ....அவற்றை வெள்ளிகொனரும் பத்திரிகைகள் ஆயுத போராட்டம் தூண்டுகின்றன என சொன்னால் அதன் அர்த்தம் என்ன ..ஒப்பிட்டு ரீதியில் தமிழ் ஊடகங்கள் சின்ஹல ஆங்கில ஊடகங்களை விட உண்மைத்தன்மையை நடப்பவை ..ஊடக தர்மம் போதிப்பவை ...கடந்த 17 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் நடந்த அரசியல் கொலைகள் எதையாவது இந்த நீதிமன்று கண்டுபிடித்திருக்கிறத ...காணமல் போதல் எதையாவது அறிந்திருகிரத ......பாவம் எங்கள் அப்பாவி மக்கள் ....உண்மையில் கவலையாக இருக்கிறது ....யாழ்ப்பாணத்தில் தங்கள் உயிருக்கு மேலாக இருந்து பணியாற்றும் எங்கள் புத்தியீவிகள் எங்கே ..இந்த அடிப்படை அறிவற்ற நீதவான் எங்கே ....இதுவரை மணல் கொள்ளை ,கர்ற்பல்லிப்பு போன்ற விடயங்களுக்கு என்ன தீர்வு கண்டிர்ருக்கு ....கபில்னத் கொலை தொடக்கம் இதுவரை எத்தனை கொலையாளிகளை தப்ப விடிருகிறது இந்த நீதித்துறை ...
இலங்கை நீதித்துறை பற்றி பேசினால் வெட்கம் ....HEDGING CONTRACT CASE,SF CASE,HELPING AMPANTHODDA CASE,JEYASUNDRA CORRUPTION CASE எல்லாம் இலங்கையில் நீதித்துறை செத்துவிடாது என்பதற்கு உதாரணம் .....
அந்த நீதித்துறையில் எங்கள் மக்கள் குரங்கின் கையில் பூமாலை போல அவஸ்தை படுகிறார்கள் ....அண்மையில் டாக்டர் வீடு தாக்கப்பட்டது ....இதுவரை நட்டவடிக்கை இல்லை ..பொதுமக்கள் அண்மையில் அளவெட்டியில் தாக்கப்பட்டார்கள் ..எதுவரை நடவடிக்கை இல்லை
கடவுள் தன் எங்கள் மக்களை கப்பரவேனும் ..இருந்த கடவுளும் போய் விட்டார் ....பார்போம் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் ஆட்டம் என்று
இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை; தமிழர்களிடையே கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் தமிழின உணர்வை அழித்தொழிப்பதற்கு ராஜபக்சேவுக்கு உதவாமல் இருந்தாலே போதும்
ReplyDelete