சிறிலங்காவுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள், பயங்கரவாத்திற்கு ஊக்குவிப்பதாக உள்ளதென, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா ஒப்பாரிவைத்துள்ளது. நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரில், இலங்கைத்தவீன் போருக்கு முந்திய – பிந்திய காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைச் சபை சிறப்பு வல்லுனர்கள் குழுவினரால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, சிறிலங்கா உரிய பதிலினை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐ.நா சிறப்பு வல்லுனர் குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தின் போது, தன்னுடைய மனித உரிமை மீறல்களை, இனஅழிப்பு மற்றும் போர் குற்றங்களை, பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை எனும், தனது வழமையான பல்லவியூடாக நியாயப்படுத்த, சிறிலங்கா முனைந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகச் சேவையின் ஜெனீவாச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பு, வலையமைப்பு மற்றும் மக்கள் போராட்டங்கள் யாவும், சிறிலங்காவுக்குள் பதட்டத்தினை ஏற்படுத்துவதாக உள்ளதென தெரிவித்துள்ள சிறிலங்காப் பிரதிநிதி, புலம்பெயர் தமிழர்களின் இச்செயற்பாடுகளுக்கு, அந்தந்த நாடுகள் சட்டத்தின்பால் வழங்குகின்ற சமூக அரசியல் வெளியினை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளதோடு, மேற்குலகின் மீதான தனது சீற்றத்தினை மீண்டும் ஒருதடவை சபையில் சிறிலங்கா வெளிப்படுத்தியுள்ளதாக ஜெனீவாச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சபையில் சிறிலங்காவின்பிரதிநிதி வாசித்த அறிக்கையின் சாரதத்தில், அரசுசார்பற்ற செயல்பாட்டாளர்களால், மிகமோசமான மனிதஉரிமைகள் மீறல்கள் நடாத்தப்பட்டதாயும், இவை உள்நாட்டு வெளிநாட்டு பயங்கரவாத வலை அமைப்புக்களின் செயல்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
பயங்கரவாதத்தின்முன், அமைப்புகளின் கொடியமுகங்களை தனக்கு நன்குதெரியுமென்றும், இவர்கள் தமக்கு விருந்து வழங்கி ஆதரிக்கும் நாடுகளிடம் வெளிப்படையாக எல்லா உதவிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
இப்படியாக பொறுத்துக் கொள்வதும் உபசரிப்பதும் பயங்கரவாத்திற்கு புத்துயர்அளிக்கும் என்றும் எச்சரித்திருந்தது.
இதனால்அந்த நாடுகளில் நிதிதிரட்டல், வழங்கல்போன்ற உதவிகளை செய்வதுமட்டும்அல்ல, அரசியல் சமூகவெளிக்காட்டுதல் மூலம், பாதிக்கபட்ட நாடுகளில் பயங்கரவாத நோக்கங்களை முன்னெடுப்பதையும் மிகக்கடுமையாக காத்துக்கொள்ளவேண்டும்என்றும் மேற்குலக நாடுகளை சிறிலங்கா எச்சரித்தது.
இதனால் தமது நாட்டு மக்களின் உரிமைகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது, எல்லா நாடுகளினதும் பொறுப்பு என்றும், மேலும் நாடுகள் தமது நீதிபரிபாலனத்தின் கீழ் அனுமதிக்கும்நடவடிக்கைகள், மற்றைய நாடுகளில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பயமுறுத்தலாகவும் இருக்கக்கூடாது என்றும் சிறிலங்கா தெரிவித்தது.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும்போது அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படலாகாது என்றும் இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்வை மீள்ளமைத்து புதுப்பித்திருக்கிறது என்றும் கூறியது.
சிறிலங்காவுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர் நெருக்கடியாகவே உள்ளதென்பதனையே, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் வாசித்த இந்தஅறிக்கை வெளிக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment