ஜெனீவாவில் நிறைவேறிய தீர்மானத்தினால் அரசு தரப்புக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள்


புத்திசாலித்தனமான செயலைச் செய்வதற்கும் ஒரு காலமுண்டு. சண்டையிடுவதற்கும் ஒரு காலமுண்டு. இலங்கை ஜெனீவாவில் எத்துணையளவுக்கு சண்டையிட்டது என்பதில் சந்தேகமில்லை. அப்போராட்டம் தொடர்பில் தற்போதும் கூட நன்றாக ஆராயப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் ராஜதந்திரத்தில் பன்மடங்கு கற்றுக் கொள்வதற்கு அதிக பாடங்கள் உள்ளன. அவை எதற்கும் சர்வதேச கட்டமைப்பில் குறுகிய அரசியல் கரும மாற்றுவதில்லை. ஆனால் சண்டையிடுவதற்கான காலம் நிறைவுற்றுவிட்டது. சமகாலமானது நேர் முன்தோன்றும் புத்திசாலித்தனமான செயலைச் செய்து நகர்வதற்கேதுவானதாகும். 

அறிக்கை அர்த்தம் 

எந்தளவுக்கு அருசியானதாக இருந்தாலும் பரவாயில்லை. இலங்கை தொடர்பான ஐ.நா. மனித  உரிமைகள் ஆணைக் குழு தீர்மானத்தின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது இலங்கையை ஜெனீவாவுக்கு இழுத்துச் சென்று பலமான அடிவாங்குவதற்கு வழிகாண்பித்த அந்தகாரமான அதே நிலைமைக்கு மீண்டும் நாட்டை அழைத்துச் செல்லும் ஒரு வீண்முயற்சியாகும். சிந்திய கொட்டிய பாலுக்காக அழுவதில் அர்த்தமில்லை. கிட்டாப் பொருளுக்கு ஏங்குவது போன்று சப்த மிடுவதில் எதுவும் கிட்டப் போவதில்லை. சமூகங்களுக்கிடையில் 30 வருடகால யுத்தக் காயங்களை குணப்படுத்தி புரிந்துணர்வுப் பாலத்தை கட்டி எழுப்பும் வகையில் மீளப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பைத் தோற்றுவிக்கும் நோக்கில் ஏற்பட்ட வாய்ப்பாகவே அநேகமாக அமைந்திருக்கலாம் என்றே  ஜெனீவா தீர்மானம் கருதப்பட வேண்டும்.  இதற்குப் பதிலாக தீர்மானத்தை நிராகரித்து மேற்குலக சதியை எண்ணி அதைரியப்பட்டு மக்களைத் தூண்டும் அறிக்கைகளை விடுவதில் எதுவித அர்த்தமும் இராது.

நல்லிணக்கம் வேறுபாடுகள்

யுத்தம் மூன்றாண்டுகளுக்கு முன்பு முற்றுப் பெற்று விட்டது. வன்முறையின்றிய எதிர்காலத்தை உறுதி செய்யும் ஸ்திரமான அமைதியை அடைய தேசம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனைச் செய்வதற்கு யுத்தத்துக்கு இட்டுச் சென்ற வேறுபாடுகளைக் களைதல், கடந்த காலத்தவறுகள் மீள் தோன்றா வண்ணம் அமையக் கூடிய நடவடிக்கைகள் சகலருக்கும் சமத்துவம்/ நீதியை நிச்சயப்படுத்துதல்/ முன்னோக்கி நகரக் கூடிய வகையில் துணை புரியக் கூடிய பொறிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் / இலங்கை நல்லிணக்கம் காண வேண்டும்./ தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும்  முன்னேற்றுவதற்காக முரண்பாடுகளுக்கான  காரணங்களைக் கண்டறிந்து உள்ளூரிலேயே பணிக்கப்படக் கூடிய பரிந்துரைகளுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவான நல்லிணக்க ஆணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எதிர்பார்க்கப்படும் பொறி முறையையும் உறுதிப்பாட்டையும் வழங்குகின்றமை தெரிந்ததே. 

இறைமையும் நிராகரிப்பும்

ஒரு இறைமையுள்ள நாடு எவ்வாறு தனது அலுவல்களை நகர்த்த வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என கூறுவதற்கு வெளிநாட்டுச் சக்திகளுக்கு உரிமையில்லை என்ற ஒரே காரணத்துக்கு ஒரு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அதுவும் குறிப்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் சிபாரிசுகளை அமுலாக்கம் செய்யுமாறு கோரும் ஜெனீவா தீர்மானத்தை நிராகரிப்பது முகத்தை துன்புறுத்துவதற்காக மூக்கை வெட்டுவதற்கு நிகரானதாகும். அதாவது மற்றொருவனும் தீங்கடைந்து கொள்ள வேண்டும் என தன்பொருட்டு தனக்கே தீங்கிழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. மேலும் அரசாங்கமும் குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதில் இருந்து சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்தும் என்று கூறியே பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. 

சண்டையிடும் குணம்

மாயை போன்று காட்சி தரும் சமாதானம் வெற்றி அளிப்பதற்கு மேலெழு பெருமையடிப்பும் பிடிவாதமான போக்கும் பாதியளவாவது நாட்டை முன்னகர்த்திச் செல்வதற்கு போதுமானதல்ல என நோக்கர்கள் கூறுகின்றனர்.  இலங்கை யுத்த வெற்றியின் மகிழ்ச்சியை உண்மையில் அனுபவிக்க வேண்டும். ஆனால் சண்டையிடும் குணம் தேசிய பெருமையை புண்படுத்தல், அவர்களுக்கு என்ன துணிச்சல் போன்ற மனோபாவத்துக்கப்பால் நகர வேண்டிய தேவையுள்ளது. நேர்மையான சுய நம்பிக்கை  மற்றும் தோற்கடிக்கப்பட முடியாது எனக் கருதப்பட்ட யுத்தத்தை நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் தோற்கடித்த வகையிலும் எங்கு எப்போது கொடூரமான பிழை ஒவ்வொன்றும் நடந்துள்ளது என்ற சுய பரிசீலனை போன்றனவே சிறந்த ஆரம்பத்துக்கு எதுவாக அமையலாம். 

அறியாத மக்கள்

எத்தகைய சூழ்நிலையிலும் உயர்விலை மதிப்பீடு செய்வதற்கு நேர்மை என்பது ஒரு சரக்கல்ல. மடத்தனத்தைக் கூட மன்னிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை மீண்டும் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை உற்சாகமான முறையில் வெளிக் கொணர்ந்து உண்மையிலேயே அது என்ன கூறுகிறது என்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பதே சமயோசிதமானதாக அமையலாம். ஏனெனில் இலங்கையில் மேற்குலக தலையீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களில் பெருத்த எண்ணிக்கையிலானோருக்கு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தொடர்பாக எதுவுமே  தெரியாது என்பதே ஒரு வருந்தத்தக்க விடயமாகும். அரசாங்கத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் என்பது மாத்திரம் தெரிந்து கொண்டு எதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பது தெரியாதவர்கள் உள்ளனர். சிலவேளை சர்வதேச சக்திகளுக்கு எதிராக குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறோம் என்பது தெரிந்தாலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அறியாத பல மக்கள் இல்லாமலில்லை.

உந்து சக்தி 

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் உண்மையாக எத்தனை பல்வேறு வகையான விடயங்களையும்  உள்ளடக்கியதான சிபாரிசுகள் காணப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெரியவில்லை. யத்த காலத்தில் புரியப்பட்டதான வன்செயல்கள் தொடர்பிலான மேலும் விசாரணைகளுக்கான தேவை, தகவலறியும் உரிமைச் சட்டவாக்க அறிமுகம், இடம்பெயர்ந்தோருக்கான உதவி, இராணுவ மயமற்றதாக்குதல் மற்றும்  ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைதல், அரசியல் தீர்வுக்கான தேவை போன்ற பல பரிந்துரைகள் உள்ளன என்பதை மக்கள் அறிவரோ ! ஜெனீவா தீர்மானம் சில வேளை உண்மையான  சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய வேலையையும் குறிக்கோளை செயற்பாடாக மாற்றும் நாட்டுக்குத் தேவையான உந்து சக்தியாகவும் அமைந்து விடலாம் என்கின்றனர் நாட்டு நலன் விரும்பிகள். 

செல்ல வேண்டிய முன்னால் இருக்கும் பாதையை நோக்குவதும் நகர்வதும் தற்போதைய தேவை. மாறாக திரும்பி பார்ப்பதும் செய்ய முடியுமானதைச் செய்ய கடுமையாக யோசிப்பதும் நாட்டை நகர விடாமல் தடுத்து வெளியேறி கரைசேர்ந்த  சேறு சகதிக்குள்ளேயே மீண்டும் அழைத்துச் செல்லும் எனில் மிகையாகாது. 

பாராளுமன்றத்தில் நிலைமைகள் இவ்வாறிருக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துக என்ற கோரிக்கை ஜெனீவா தீர்மான மூடாக வெளி வந்துள்ள வேளை நம்மவர்களோ நமது வழக்கமான பாணியை  கடைப்பிடித்து ஜெனீவா தீர்மானத்துக்கும் மேலான தீர்மானங்களை முன்மொழிந்த வண்ணம் உ ள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு வாரங்களாகிக் கொண்டிருக்கின்ற  தருணத்தே பாராளுமன்றத்திலும் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுருக்கக்  கூறின் முகாமைப்படுத்தப்படாத வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாகவும் தீர்மானத்தின் மூலமான எதிர்கால விளைவுகளையும் மனித உரிமை மீறல்களையும் அரசாங்கத் தூதுக் குழுவின் பலயீனங்களையும் எதிரணியினர் மன்றில் கொட்டித் தீர்ப்பர்.

ஆனால் அரச தரப்போ சிறந்த வெளிநாட்டுக் கொள்கை, ஐ.தே.க. காலத்துக்கு மனித உ ரிமை மீறல்கள் , தீர்மானம் தொடர்பான வாய்ச் சவடால்கள் எத்தகைய சூழ்நிலையிலும் அடிபணியோம், எத்தகைய அழுத்தத்துக்கும் முகங் கொடுக்கத் தயார் என்ற தோரணையில் வீர வசனங்களை பேசித் தள்ளுவர். யோசிக்காமல் பேசுவதும் பேசி விட்டு யோசிப்பதும் ஜனநாயகத்தில் ஒரு வகை அத்துப்படி. அதற்கு இலங்கையின் ஆர்ப்பாட்டம் மேடைகள், பாராளுமன்றம், தேசப்பற்று போன்றன விதிவிலக்காக அமைவதில்லை. எது எவ்வாறாயினும் தமது நாட்டிலுள்ள பல்வேறு பிரிவினரிடம் இருந்து  பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் விமர்சனக் குறிப்புகளை ஜெனீவா தீர்மானம் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதேவேளை நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் பற்றி முன்னணி அரசியல் வாதிகள் உட்பட அரசாங்க அமைச்சர்கள், ஆளும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களிடம் இருந்து முரண்பாடான கருத்துகள் வெளிவந்து  உள்ளன. 

மக்களோ நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நகர்வை அறிந்து கொள்வதில் ஆவலாக உள்ளனர். ஆனால்   உறுதியான கருத்துகள் வர வேண்டிய உயர் மட்டத்தில் இருந்து ஒன்றுக் கொன்று முரண்பாடான சமிக்ஞைகள் சந்திக்கு வருவதால் சங்கடப்பட்டுக் கொள்கின்றனர். 

அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துகளும் 

ஜெனீவா தூதுக் குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமர சிங்க பரிந்துரைகளை அமுலாக்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டதாகவும் முழுமையாக அமுலாக்கம் நடைபெறும் என்றும் கூறினார். எவ்வாறாயினும் தூதுக்குழுவில் இடம்பெற்ற அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா ஆணைக் குழு அறிக்கை தம்ம பதம் அல்லது புனிதபைபிள் போன்ற புனித ஆவணம் அன்று.  அவசியமானதை பரிந்துரைகளை மாத்திரம் அரசாங்கம் அமுலாக்குமே  ஒழிய ஆணைக் குழுவின் அனைத்து சிபாரிசுகளையும் அமுலாக்க வேண்டிய கடமைப் பாடில்லை என்றார்.  இலங்கையை சட்ட முறையாக ஜெனீவா தீர்மானம் கட்டுப்படுத்தாது என்ற வகையில் கவலை இல்லை என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை பதில் ஊடக அமைச்சர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் சம்பந்தமாக இதுவரையில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என்றார்.  இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவர் கருத்துரைக்கையில் ; இலங்கை அரசாங்க ஜெனீவா  தீர்மானத்தை இலேசானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எதிர்காலத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி நாடுகள் நகர்த்துகை செய்யுமாதலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் செய்தார். 

கட்டுரையாளர் சட்டத்தரணியும்
சுயாதீன தேசிய முன்னணியின் 
தலைவருமாவார்.

தினக்குரல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment