ஜெனீவாவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ற தலைப்பில் (2012 ஏப்ரல் 7) சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப் பத்திரிகையில் நிருபமா சுப்பிரமணியம் எழுதியிருந்தகட்டுரைக்கு இலங்கை பிரஜை மற்றும் பத்திரிகையாளர் என்ற ரீதியில் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த விபர தகவல் பணிப்பாளர் லூசியன்ராஜகருணாநாயக்க பதில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இலங்கைக்கு இந்தியாவால் திணிக்கப்பட்ட திருத்தமானது (13 ஆவது திருத்தம்) தீர்வை தரவில்லை என்ற தலைப்பில் தனிப்பட்ட முறையில் லுசியன்ராஜகருணாநாயக்க தனது கருத்துகளை குறிப்பிட்டிருந்தார் . அதற்கு நிருபமா சுப்பிரமணியன் பதில் அளித்திருக்கிறார்.
லூசியன் கருணாநாயக்கவின் கருத்தும் அதற்கான நிருபமா சுப்பிரமணியத்தின் பதிலும் இங்கு தரப்படுகிறது.
நிருபமா சுப்பிரமணியன்
1987 இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பான நெருக்கடிகளை லூசியன் ராஜ கருணா நாயக்க சரியான முறையில் சுட்டிக்காட்டியுள்ளார். இடம் , காலம் தொடர்பான நெருக்குவாரங்கள் அவரை தடுத்திருக்கின்றது என்பது சந்தேகமில்லை. இந்திய தலையீட்டுக்கு இட்டுச் சென்ற துன்பகரமான நிகழ்வுகளை மீள அசைப் போடுவதற்கு எனக்கும் அத்தகைய நெருக்கு வாரங்கள் இருக்கின்றன.
13 ஆவது திருத்தத்தை சகல கட்சிகளும் முன்னர் எதிர்த்து இருந்தன இன்றைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளும் உட்பட சகல கட்சிகளும் எதிர்த்திருந்தன. ஆயினும் ஜே.வி.பி உட்பட இக் கட்சிகள் இந்தத் திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களில் ஆர்வத்துடன் பங்குப்பற்றின. இன்று கிழக்கு மாகாணம் உட்பட சகல மாகாண சபைகளையும் ஐ.தே.சு.மு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. 1990 இல் வட,கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக 2008 இல் கிழக்கில் இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.தே.சு. மு அதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இது வரை வட மாகாணசபைக்கு தேர்தல்கள் இடம்பெறவில்லை. 1999 இல் முதற் தடவையாக மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி, போட்டியிட்டது. அக் காலம் தொட்டு முன்னைய காலத்தை அது திரும்பி பார்க்கவில்லை. 13 ஆவது திருத்தத்திற்கான தேசிய ரீதியான வெறுப்பு இருக்கின்றது என்பதை கண்டு கொள்வதை இது கடினமாக்கி உள்ளது. அதாவது ராஜ கருணாநாயக்க கூறுவது பற்றியதை கண்டுப்பிடிப்பது கடினமான விடயமாக உள்ளது.
இந்த குறிப்பிட்ட ஏற்பாடானது பரந்தளவில் வெறுக்கப்பட்டதாக இருப்பது உண்மையானதாக இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஜே.வி.பியும் 1987 இல் போன்று இப்போதும் அதனை எதிர்ப்பதாக இருந்தால் அதனை இல்லாமலே செய்வதற்கு தற்போது உள்ள தருணத்தைப் போன்ற சிறப்பான வேளை இருக்க முடியாது. 1987 இற்கு பின்னர் இலங்கையில் முதற் தடவையாக ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆதலால் தான் விரும்புவது போன்று அரசியல் அமைப்பில் மாற்றத்தை மேற்கொள்வதற்குரிய தனித்துவமான வாய்ப்பு இருக்கின்றது. யாவற்றுக்கும் மேலாக அரசியல் அமைப்பை திருத்துவதற்கான தனது ஆற்றலை அரசாங்கம் ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளது. 2010 இல் அதனைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் இரு தடவை பதவிக் கால ஏற்பாட்டை அகற்றியிருந்தது. அந்த நடவடிக்கைக்கும் ஜனநாயக ரீதியற்றது என்று எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. ஐ.தே.க. ,ஜே.வி.பி ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் 18 ஆவது திருத்தமானது அரசியல் அமைப்பில் ஓர் அங்கமாக இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இணக்கப்பாடு காண்பதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அலகாக மட்டுமே 13 ஆவது திருத்தம் இருப்பதாக சகலரும் கூறியுள்ளனர். தனது முதலாவது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க, அரசியல் அமைப்பு மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சித்திருந்தார் அந்த மறுசீரமைப்புகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் பட்டவையாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில் 13 ஆவது திருத்தத்திற்கும் வெகு தொலைதூரத்திற்கு சென்றவையாக அவை அமைந்திருந்தன. மேலும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவூடாக அந்த மிகவும் ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்வுப் பொதிக்கு புலிகள் கடைசி நேரத்தில் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். மறுபக்கத்தில் எதிர்க்கட்சியும் அரசாங்கத்தின் உறுப்பினர்களும் கூட எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதற்குப் பிறகு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் அதிகாரப் பகிர்வு திட்டத்திற்கான ஒரேயொரு முற்சியைமட்டுமே இலங்கை அரசியல் சமுதாயம் மேற்கொண்டது. அது சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை ஒரு போதுமே பகிரங்கப்படுத்தப்படவில்லை. கிடப்பில் சத்தமின்றி போடப்பட்டதாக தோன்றுகின்றது. 13 ஆவது திருத்தமானது பிரகாசமானதாக இல்லா விடினும் குறைந்தளவு சட்டமாகவாவது இருந்து வருகிறது. புலிகளைத் தவிர சகல தமிழ்க் குழுக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த திருத்தமானது எழுத்தில் நேர்மையான முறையில் நிதி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி உரிமைகளை கொண்டதாக இருக்கின்றது. அவை அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான நீண்ட தூரத்திற்கு அது சென்றிருக்கும். அத்தகைய முன் நகர்வானது வடக்கு, கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் ஏனைய 7 மாகாணங்களிலும் வரவேற்பை ஏற்படுத்தக் கூடிய முன்நகர்வாக அமைந்திருக்கும்.
லுசியன்ராஜகருணாநாயக்க
2009 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமானது 11 பெரும் பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 29 வாக்குகளும் 12 எதிரான வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அந்த தீர்மானம் கேள்விகளை எழுப்புகின்றது. "இராஜதந்திர ரீதியாக தோல்வியடைவதிலிருந்தும் வெற்றியை இலங்கை சமாளித்து தட்டிப் பறித்துக் கொண்டது' என்று ஜெனீவாவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ( 7 ஏப்ரல், 2012) என்ற தனது கட்டுரையில் நிருபமா சுப்பிரமணியன் நினைவு கூர்ந்துள்ளார்
.
அத்துடன் 2009 தீர்மானத்தின் முன்னுரையில் இடம்பெற்றிருந்த வரியொன்றையும் அவர் நினைவு கூருகிறார். அந்த வரியானது "இலங்கையில் இறுதிச் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பான இலங்கையின் உறுதிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தது. 13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தக் குறிப்பைப் பார்க்கும் போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு புதுடில்லி ஆதரவளிப்பதென மேற்கொண்ட தீர்மானமானது கொழும்பு செலுத்திய விலையென்ற சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.
அத்துடன் 2009 தீர்மானத்தின் முன்னுரையில் இடம்பெற்றிருந்த வரியொன்றையும் அவர் நினைவு கூருகிறார். அந்த வரியானது "இலங்கையில் இறுதிச் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பான இலங்கையின் உறுதிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தது. 13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தக் குறிப்பைப் பார்க்கும் போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு புதுடில்லி ஆதரவளிப்பதென மேற்கொண்ட தீர்மானமானது கொழும்பு செலுத்திய விலையென்ற சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.
"இந்தியாவின் கண்ணோட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கையானது மீண்டும் கவனத்தைச் செலுத்துவதற்கு இது உதவியிருக்கின்றது என்ற வாதத்தை நிரூபமா முன்வைத்திருக்கிறார்‘. இந்தச் சரத்து தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக ஞாபகமூட்டுவது இலங்கைக்கு எரிச்சலூட்டுவது முடிவில்லாமல் தொடர்வதாகவும் இந்தியா ஏன் இதனை திரும்பத்திரும்ப நச்சரிக்கிறது? மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விதத்தில் மிகவும் அதிகளவுக்கு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையிலிருந்தும் நகர்ந்து செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பு ரீதியாக மேற்கொண்ட ஒரேயொரு ஏற்பாடாக 13 ஆவது திருத்தம் இருப்பதைத் தவிர வேறு காரணம் இல்லை என்றும் நிரூபமா மேலும் கூறியுள்ளார்.
இந்தச் சரத்து தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக நினைவூட்டுவதானது இலங்கைக்கு எரிச்சலூட்டுவது முடிவின்றி தொடர்வதென்றால் அந்த மாதிரியான உணர்வுகளுக்கு சிறப்பான காரணம் இருக்கிறது. 1987 இலங்கை இந்திய உடன்படிக்கையின் ஓரங்கமாக இத்திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன், இலங்கையின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டதொன்றாகும். வட இலங்கை மீது இந்தியா வான்வழி ஊடுருவலை மேற்கொண்டு “உணவுப் பொதியை போட்டதைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க அல்லது இறுதியான நிலைக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தும் நிலைமையில் இலங்கையின் ஆயுதப்படைகள் இருந்த தருணத்தில் இது இடம்பெற்றிருந்தது. இது 2009 இற்கு அதிக காலத்துக்கு முற்பட்டதாகும்
.
இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை நான் ஆதரிப்பவள். ஆனால் 13 ஆவது திருத்தத்தின் நிபந்தனைகள் ஜனநாயக ரீதியான தன்மையைக் கொண்டவை அல்ல. இந்நாட்டின் பெரும்பான்மை, சிறுபான்மை உறவுகள் தொடர்பான பிரச்சினைக்கு உண்மையான தீர்வை கொண்டவையென ஜனநாயக ரீதியில் கருதப்பட முடியாதவையாகும். இது திணிக்கப்பட்ட திருத்தமாகும். இலங்கை மக்கள் மீது மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவால் திணிக்கப்பட்டதொன்றாகும். அந்தத் தருணத்தில் பாராளுமன்றத்திலிருந்த 5/6 பெரும்பான்மையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கார் செய்திருந்தது போன்று உரிய முறையில் பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாக இது இருக்கவில்லை.
இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை நான் ஆதரிப்பவள். ஆனால் 13 ஆவது திருத்தத்தின் நிபந்தனைகள் ஜனநாயக ரீதியான தன்மையைக் கொண்டவை அல்ல. இந்நாட்டின் பெரும்பான்மை, சிறுபான்மை உறவுகள் தொடர்பான பிரச்சினைக்கு உண்மையான தீர்வை கொண்டவையென ஜனநாயக ரீதியில் கருதப்பட முடியாதவையாகும். இது திணிக்கப்பட்ட திருத்தமாகும். இலங்கை மக்கள் மீது மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவால் திணிக்கப்பட்டதொன்றாகும். அந்தத் தருணத்தில் பாராளுமன்றத்திலிருந்த 5/6 பெரும்பான்மையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கார் செய்திருந்தது போன்று உரிய முறையில் பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாக இது இருக்கவில்லை.
இந்திய இலங்கை உடன்படிக்கையினூடாக 13 ஆவது திருத்தம் திணிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக வாக்களித்த அச்சமயம் ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க. உறுப்பினர்கள் கூட பாதுகாப்புடனேயே பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்த அவ்வாறு கொண்டுவரப்பட்டிருந்தனர். அண்மைய தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களிப்பதற்கான இந்தியாவின் தீர்மானத்தில் கூட்டணி நெருக்குவாரத்தின் வகிபாகம். பற்றி அவர் (நிரூபமா) குறிப்பிடுகிறார். இலங்கையிலும் அத்தகைய நிர்ப்பந்தங்கள் இருப்பதை புரிந்துகொள்வது அவசியமானதாகும். இன்றைய கூட்டணி அரசில் அரசியல் கட்சிகள் பல அங்கம் வகிக்கின்றன. அவை இலங்கை இந்திய உடன்படிக்கையையும் 13 ஆவது திருத்தத்தையும் முழுமையாக எதிர்த்தவையாகும். இதற்கு அச்சமயம் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலேயே எதிரணி எதிர்ப்பை தெரிவித்திருந்தது. தற்போதைய கூட்டணி அரசிலும் சுதந்திரக் கட்சியே பெரிய கட்சியாகும்.
ஏனைய மாகாணங்களில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டு உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அதிகார வலுவூட்டியிருப்பதாக ஆனால் இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமான வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களில் இது இல்லையெனவும் நிரூபமா குறிப்பிட்டுள்ளார். ஆனால் 13 ஆவது திருத்தமானது "மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வாகவே நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் "செழிப்பாக' இருப்பதாக பார்ப்பதை இந்த மாகாணங்களிலுள்ள மக்களுக்கு வலுவூட்டியிருக்கின்றதா என்பதை ஆராய்வது பிரயோசனமானதாக இருக்கும்.
அதேவேளை தற்போதைய நிலையில் தமிழ்த் தலைமைத்துவமானது புலம்பெயர்ந்தோரின் தீவிரவாத மனப் பிரதிமையை அதிகளவுக்கு பற்றிப்பிடித்திருப்பதாக அவரின் (நிரூபமா) அச்சத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். 2012 தீர்மானத்தை முன்தள்ளுவதற்கு புலம்பெயர்ந்த சமுகத்தின் பங்களிப்பு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். கடும்போக்கான அரசியல், சமூக வலியுறுத்தல்களை தமிழ்த் தலைமைத்துவம் விடுப்பதில் இது முடிவடையக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். அந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசியல் சமுதாயம் நிராகரிப்பதற்கு இவை சாட்டாக அமைந்துவிடக் கூடாததாக இருப்பினும் மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாடொன்றை அரசியல் சமுதாயம் உருவாக்குவதற்கு மிகவும் கடினமான நிலைமையை இது நிச்சயமாக ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு அல்லாமல் மக்களுக்கு அதிகார வலுவூட்டும் பொருத்தமான அதிகாரப் பகிர்வின் தேவை தொடர்பாக நான் கேள்வி எழுப்பவில்லை. அந்தப் பகிர்வானது நாட்டின் மீதோ மக்கள் மீதோ திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது அல்லது நல்ல அயலவராலோ அல்லது விரக்தியடைந்த அரசியல் தலைமைத்துவத்தாலோ திணிக்கப்பட்டதாகவும் இருக்கக்கூடாது. அதாவது 1987 இல் இடம்பெற்றது போன்று இருக்கக்கூடாது.
சிறப்பான பகிர்வுக்கான நல்ல சந்தர்ப்பத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அத்துடன் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கு வலுவூட்டும் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அரிய வாய்ப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கான கணிசமான பணிகள் ஊடாக இவற்றுக்கு வலுவூட்ட முடியும். இந்த முயற்சிகளுக்கு வலுவூட்டுவதே ஜெனீவாவிலிருந்தான சிறப்பான பாடமாகும். இந்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதல்ல.
தினககுரல்
0 கருத்துரைகள் :
Post a Comment