சிறிலங்கா அரசின் 'கடத்தல் செயற்பாடுகள்' அம்பலம் - ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு


ஏப்ரல் 06,2012 அன்று கடத்தப்பட்ட ரத்நாயக்க முதியான்சலாகே தயாலால் என அழைக்கப்படும் பிறேமகுமார் குணரட்ணத்தை ஏப்ரல் 09 அன்று நாடுகடத்தியமையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் 'கடத்தல் செயற்பாடுகள்' தொடர்பான பல இரகசியங்கள் வெளிவரக் காரணமாக அமைந்துள்ளது. 

குணரட்ணத்தின் கடத்தல் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முற்போக்கு சோசலிசக் கட்சி, மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். 

திரு.குணரட்ணம் மற்றும் திருமதி.திமுது அற்றிகல ஆகிய இருவரையும் கைது செய்வதற்கான எந்தவொரு காரணமும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பொது இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல பிபிசி செய்தி நிறுவனத்திடம் முன்னர் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் குணரட்ணம் நாடு கடத்தப்படுவதற்கு சற்று முன்னர், குணரத்னம் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். 

திரு.குணரட்ணம் இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டு தெமற்றகொடவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது சிறிலங்கா காவற்துறைப் பேச்சாளர் அஜித் றொகன்னா தெரிவித்துள்ளார். 

இவ்வாறான தொடர் சம்பவங்கள் சிறிலங்கா அரசாங்கம் ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகின்றது. இதற்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கப்ரன் தர அதிகாரிகள் இருவரும் இதனை விட வேறு இரு அதிகாரிகளும் Kolonowara என்ற இடத்தின் மேஜரை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.
 
இந்நான்கு இராணுவ வீரர்களினதும் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் அறியத் தருமாறு முன்னர் கோரப்பட்டிருந்தது. இதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் இது தவறுதலாக நடந்த சம்பவம் என்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறிப்பிட்ட மேஜரை தவறுதலாக கைது செய்ய முற்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. 

திரு.குணரட்ணம் மற்றும் அற்றிகல ஆகியோரின் ஆட்கடத்தல் சம்பவம் சிறிலங்கா அரசாங்கத்தின் கடத்தல் நாடகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. அண்மைய மாதங்களில் சிறிலங்காவில் 60 வரையானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற காலத்தில், சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

திரு.குணரட்ணம் மற்றும் அற்றிகல ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பாகவும், அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்வதற்கேற்ப உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. 

கெடுவிளைவாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரனும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச உயர் மட்ட அதிகார பீடத்தில் உள்ளதால் இவர் போன்றவர்களின் தலைமையில் இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் இவை வெற்றியளிப்பதில்லை என்பதை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறான ஆட்கடத்தல்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டை சிறிலங்கா எதிர்க்கட்சி கொண்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெறும் ஆட்கடத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சி மற்றும் ஏனைய அரசியற் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. 

இவ்வாறான ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும், உயர் மட்ட விசாரணை பீடத்தில் உள்ளவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் எடுப்பதை உறுதிப்படுத்தி சுயாதீன விசாரணைகள் நடைபெறுவதற்கான அழுத்தத்தை பொது அமைப்புக்கள் வழங்க வேண்டும். இது அவர்களின் கடமையாகும். 

அண்மைய மாதங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்குமாறு மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் நாம் கோரி நிற்கின்றோம்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment