ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும்


நாட்டின் அரசியல் பொருளாதார தலைமைகளைப் பொறுத்த வரையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்ன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைக் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன்  நான் அதனை அழித்துவிட்டேன் சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றன வாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆதரவுண்டு என்று அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றதாகிய ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 என்ற வர்த்தக கண்காட்சி திறப்புவிழா வைபவத்தின் போது ஜனாதிபதித ராஜபக்ஷ சூழுரைத்தார். படுகேவலமான 30 ஆண்டு கால பயங்கரவாதத்தைத் தோற்கடித்து உலகில் எந்தவொரு நாடும் புரியாத சாதனையைச் செய்விட்டோம் என்று ராஜபக்ஷ மேலும் கூறி வைத்தார்.

தொடரும் புலிப்பூச்சாண்டி

அதேநேரத்தில் (மீனவர்கள் என்ற போர்வையில் 150 விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழ் நாட்டு முகாம்களில் பயிற்சி பெற்றுவிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும்  அவர்கள் குழப்பநிலைமையை ஏற்படுத்துவற்கு தயாரகவுள்ளதாகவும் இலங்கை புலனாய்வு துறையினர் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனை இலங்கையிலுள்ள இந்திய தூதரம் மறுத்துள்ள அதேவேளை சென்னையில் வெளியாகும் இந்து பத்திரிகை மீண்டும் இலங்கை புலிப்பூச்சாண்டியைக் கீழப்புகிறதா என்று எள்ளி நகையாடும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஈ.பி.டீ.பி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 புலி உறுப்பினர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இலங்கை புலனாய்வுத் துறையினர் தமது கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒப்புதல் வாக்கு மூலமானது எவ்வாறு பெற்றக் கொள்ளப்படுகிறது என்ன மொழியில் பதியப்படுகிறது என்பதெல்லாம் பகிரங்க இரகசியமாகும். எனவே அரச தரப்பினர் தமது கையாகாத்தனத்தை பூச்சாண்டிகள் கொண்டு முடிமறைத்து விடலாமென்று எண்ணுவதை விடுத்து துணிச்சலாக பயனுறுதியான செயற்பாடுகளில் இறங்க வேண்டும். அதாவது பிரதானமாக நீண்டகால தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான அதிகாரப் பகிர்வு உடன்கூடிய அரசியல் தீர்வு காண்பதற்குத் தலைப்பட வேண்டும். அதனை விடுத்து சர்வதேச சதி என்ற போர்வையின் கீழ் ஆவேசமடைந்து தான்தோன்றித்தனமாக கருத்துகள் வெளிப்படுத்தி வருவது நாட்டுக்குப் பெரும் தீமை விளைவளிக்குமே யொழிய ஒரு துளி நன்மையும் கொண்டு வரப்போவதில்லை.

ஜெனீவா தீர்மானத்திற்கெதிரான போராட்டத்தில் நேரடியாக ஜனாதிபதி

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது அமர்வுகள் 27.02.2012 ஆம் திகதி ஆரம்பமாகிய போது இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படவிருந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர்கள் பாட்டலி ரம்பிக்க ரவணக்க மற்றும் வீமல் வீரவன்ச இருவரையும் அலரிமாளிகைக்கு அழைத்து அறிவுறுத்தினாலல்லவா? அதனைத் தொடர்ந்து அரசாங்க தரப்பினர் உலகின் பல பாகங்களுக்கு ஆலாய்ப்பறந்து பகீரதப்பிரயத்தனம் செய்திருந்த போதும் 22.032012 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடத்தப்பட்ட  வாக்கொடுப்பில்  இலங்கைக்கு தோல்வி கிட்டியதை அரசாங்கத்தினால் இஞ்சித்து சகித்துக் கொள்ள முடியாமலுள்ளது. கண்கூடு.

தற்போது குறித்த ஜெனீவா தீர்மானத்துக்கெதிராக நேரடியாகவே ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக அறியக்கிடக்கிறது. உண்மையில் 31.03.2013 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட தெடர் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. மற்றும் 02.04.2012 ஆம் திகதி அலரிமாளிகையில் அரச அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்களின்  போது ஜெனீவா நியூயோர்க் வாசிங்டன் ஆகிய இடங்களில் உள்ள சத்திகளின் அழுத்தங்களை இலங்கை அரசினால் எதிர்கொள்ள முடியுமென்ற ஜனாதிபதி கூறிவைத்தார்.

மற்றும் ஒரு விநோதாம் என்னவென்றால் நல்லாட்சி என்பதற்கு அரசியல் வழிவாயத்தால் அவசியமென்பதைப் புறந்தள்ளும் வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கருத்து றுஜஹிப்படுத்தியதாகும். அதாவது நாட்டின் பிரதிமையை மேம்படுத்துவதற்கு அவசியமான நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரந்தான்உழைக்க வேண்டும்  சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மறீøக்ஷீங்களை உணர்ந்து மக்களின் புதிய எதிர்பார்ப்புகளை கவனத்திற்கொண்டு அதிகாரிகள் பொறுப்புணர்ச்சியுடன் உழைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதிவிடுத்த அறைகூவலாகும். மற்றும் அரச வளங்கள் வீண் விரயம் செய்வதையும் சீரற்றவாறான முகாமைத்துவம் செய்வதையும் தடுத்தாள வேண்டும் என்னும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். உண்மையில் வீண் விரயம் மற்றும் ஊழல்கள் தடுத்து நிறுத்தமுடியாத வகையில் அதிவேகமாக இடம்பெற்று வரும் சூழ்நிலை தான் இன்று காணப்படுகிறது. உதாரணமாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்டதாக தென்பகுதி அதிவேக நெஞ்சாலை தொடர்பாக குறுஞ்செய்தி  மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம் 53.5% மானோர் அந்த நெடுஞ்சாலையை பணவிரயம் நிறைந்ததும் உதவற்றதுமெனவும் 12.3% மானோர் அதுஇன்று அவசியமற்றது எனவும் அதனை பிறிதொரு கட்டத்தில்  நிர்மாணித்திருக்கலாம் எனவும் தமது கருத்தை வெளிப்படுத்தியதாக பெறுபேறுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதாவது 2/3 தொகையான மக்களுக்கு அது ஏற்புடையதல்ல என்பது தெளிவு.ஏன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டதாகிய மாகம்புர மகிந்த ராஜபக்ஷ துறைமுகம் மகின் எயர் விமான சேவை வீரவல சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கிரிக்கெட் விளையாட்டு ஆடுகளம் போன்ற வீண் விரய செயற்பாடுகள் நாட்டின்பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ முன்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினராகயிருந்த போது பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக்  குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் அப்போது அவர் 40 க்கு மேற்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் கீழ் இடம் பெற்று வந்த வீண் விரயங்களையும் ஊழல்களையும் ஆவணப்படுத்திச் சமர்ப்பித்த அறிக்கை புறந்தள்ளப்பட்டது என்பதை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

சட்டத்தரணிகள் சங்கத்தின்புதிய தலைவர் விஜேசாச ராஜபக்ஷ கவலை

அண்மையில் விஜேதாச ராஜபக்ஷ இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து 02.04.2012 ஆம் திகதி இடம்பெற்ற  பதவியேற்பு வைபவத்தின் போது  அவர் தெரிவித்த சில கவலைகள் பெரிதும் கவனத்திற்குரியதாகும். நீண்ட காலமாக பாராளுமன்றம் மீது நம்பிக்கையையும் வீசுவாசத்தயும் மக்கள் இழந்துள்ளனர். அதிகளவில்  வெளிப்படுத்தப்படுவதும் அபிப்பிராயம் யாதெனில் அங்கே ஊழல் திறமையின்மை தள்ளாமை போன்ற  பிரதிகடல் அம்சங்கள் மலிந்திருப்பதோடு மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளி உயர்மட்ட ஆதிக்க நிலையிலுள்ளவர்களின் நலன்களே காப்பாற்றப்படுகின்றன என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம நிதியரசர் கலாநிதி சிராணி பண்டாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சிறிஸ்கந்தராஜா, சட்டமா அதிர்  ஈவா வனகந்தா இன்னும் பலர் முன்னிலையில்   விஜேதாச ராஜபக்ஷ தனது உள்ளடக் கிடக்கையைப் பகிர்ந்துள்ளார். அவர் அத்தோடு நின்றுவிடாமல் நிதித்துறையானது இன்றுள்ள நிலையையும் சிந்தரித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு மக்களும் பல்வேறு காரணங்களின் நிமித்தம் நீதி நிர்வாகத்தின்மீது ஜீரணிக்க முடியாதளவுக்க நம்பிகி“கையிழந்துள்ளனர். நீதிபதிகள்  சட்டத்தரணிகள் நிறைவேற்று அதிகாரப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டத்தை அமுல்நடத்தும் அதிகாரிகள் ஆகிய பங்குதாரர்கள்  யாவரும் தத்தம் வேறுபாடுகளை மறந்து பற்றுறுதிடன் உழைத்தால் ஒழிய எந்தவொரு நாட்டில் என்றாலும் சரிசட்டத்தின் ஆட்சியைநிலைநாட்டி சிறப்பறீú ஏற்புடையதாகன நீதிநிர்வாகத்தைச் காணமுடியாது என்பது மிகப்பெரிய உண்மையாகும். என்று அவர் கூறிவைத்துள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும்.

மீண்டும் ஜெனீவா தீர்மானத்திற்கு வருவோமாயின் இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா மீது வெஞ்சிமை கொண்டு காய்கள் நகர்த்தி வருவதைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்தாகிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே குறித்த தீர்மானத்தின் பிரதான உள்ளடக்கை ஆகும். அதற்கு எமக்கு யாரும் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என்கிறார் ஜனாதிபதி ராஜபக்ஷ நடைமுறைப்படுத்த வேண்டுமென்றில்லை  ஆனால் நடைமுறைப்படுத்தாமல் இருக்கப்போவதுமில்லை. என்கிறார், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்து ஆணைக்குழுவின் அநேகமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது. ஏனைய பரிந்துரைகளும் காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இலங்கை மீது வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கூறப்படவில்லையாயினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக  கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு என்று லங்கா சமசமாஜக் கட்சித்தவைர் சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண எச்சரித்துள்ளார்.

இதனிடையில் புத்தி ஜிவிகள் குழு ஒன்றின் (ஊணூடிஞீச்தூ ஊணிணூதட்) முக்கியஸ்தர்களாகிய முன்னாள் ஐ.நா. பிரதச் செயலாளரும் இலங்கை அரசாங்க சமாதான செயலகத்தின்  முன்னாள் செயலாளர் நாயகமுமான ஜயந்த தனபால மற்றும் கொழும்பு பல்லைக்கழக முன்னாள் உபவேந்தர் சாவித்திரி குணசேகர அம்மையார் ஆகியோர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறத்தேவையில்லை.நல்லிணக்க ஆணைக்குழுவானது (ஃஃகீஇ) ராஜபக்ஷ அரசாங்கத்தாலேயே நாட்டப்பட்ட பயிர் ஆகும். எப்போது தான் எமதுதெரிவு என்று பறை சாற்றி வந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏன் இப்போது காலைப் பின் வைக்கிறது என்பது கூட ஆச்சரியத்திற்கரியதல்ல. பாணையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

வ.திருநாவுக்கரசு
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment