வீர இளைஞர்களுக்கு!...இப்படித்தான் சுவாமி விவேகானந்தர் தனது போதனையை ஆரம்பிக்கின்றார். கிரேக்க நாட்டு தத்துவஞானி சோக்கிரட்டீஸ், இளைஞர்களே! நான் சோக்கிரட்டீஸ் அழைக்கின்றேன்... என்று அறை கூவினார். தத்து வத்தையும் அறிவியலையும் தந்த உலக மேதைகள் இளைஞர்களை வழிப்படுத்துவதன் மூலமே இந்த உலகை நெறிப் படுத்த முடியும் என்று நம்பினர். அதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். இளைஞர்கள் விழித்தெழுந் தால் இந்த மண்ணில் எதைத்தான் சாதிக்க முடியாது. எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்தேறும். அத்துணை சக்தி இளைஞர்களுக்கு உண்டு. எனினும் எங்கள் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை.அதை ஏற்படுத் தவும் ஆளில்லை.
இளைஞர்களுக்கான விழிப்புணர்வு என்பது நாலாபக்கமும் எழவேண்டும். அறிவியல், சமூகவியல், பொருளியல், அர சியல் எனப் பல்வகைமை நோக்கில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வை முன்னெடுப்பதன் மூலமே எங்கள் தொடர் பில் நாம் கொண்டுள்ள கவலைகளுக்கும் ஆறாத வேதனைக்கும் பரிகாரம் தேட முடியும். இலங்கை முழுவதையும் நோக்குமிடத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்க்கைச் செலவென் பது அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சான்று படுத்துகின்றன. அதிலும் தொலைபேசி, மதுபானம், சிகரெட் ஆகியவற்றுக்கான செலவிலும் நாங்கள் முன்னணியில் நிற்பது வேதனையிலும் வேதனை.
இவற்றுக்கெல்லாம் முடிபுகட்டத் தவறும் பட்சத்தில் எங்கள் மண்ணில் களவும் கொள்ளையும் வழிப்பறிப்பும் அடாவ டித்தனங்களும் மிக மோசமாக மலிந்துபோகும். எனவே அன்புக்குரிய இளைஞர்களே! தொலைபேசி உரையாடலில் ஏகப்பட்ட பணத்தை விரயம் செய்கிறோம். இதுபோல மது,சிகரெட் ஆகியவற்றுக்கான உங்கள் செலவை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கூடவே உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கான உணவுக்காகவும் ஏனைய செலவுக்காகவும் விடிகாலைப் பொழுது முதல் தங்கள் உடல் உழைப் பைத் தருவதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு க்காக தங்கள் வியர்வை யைச் சிந்தும் பெற்றோரிடம் இருக்கக்கூடிய பிரதியுபகாரம் கருதாத தியாகத்தை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் .
நீங்கள் மோட்டார் சைக்கிளில் ஓடித்திரிய கையடக்கத் தொலைபேசியில் காதல் லீலை புரிய, அவர்கள் வயதான நேர த்தில், வெயில் காய வேண்டியது ஏன்? எனதருமை இளைஞர்களே! உங்களில் எத்தனையோ தியாகிகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. அதேவேளை, நீங்கள் அத்தனைபேரும் உங்கள் குடும்பத்திற்காக உங்கள் ஊருக்காக, நாட்டிற் காக உங்கள் வீண் செலவுகளை தியாகம் செய்வதோடு உங்கள் குடும்பத்தின் உயர்வுக்காக, உங்கள் சகோதரர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பாடுபடுங்கள். அதுபோதும் எங்கள் மண்ணின் புகழ் வானுயர்ந்து நிற்கும்.
வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment