லதாரூபன் ஷாலினி (வயது 20)
கே.தங்கமணி (வயது 23)
தர்மலிங்கம் தமயந்தி (வயது 16)
கடந்த மூன்று நாட்களுக்குள் யாழ்பாணத்தில் உடலங்களாக கண்டெக்கப்பட்ட இளம் பெண்களின்பெயர் விபரங்கள் இவை.
இச்சம்பவங்கள் தற்கொலைகளா அல்லது கொலைகளா என்பது பற்றிய விளக்கங்களுக்கு அப்பால் 2009 போர் ஓய்வுக்கு பின்னரான யாழ்பாணத்தின் சூழல் மிக மோகசமான நிலையாகவே உள்ளதென யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இவ்வாறாக தொடர்சியாக இளம் பெண்களின் சாவுகள் யாழிலின உள்ளக சமூகச் சூழிலும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினது கோரப்பிடியின் வடுக்களாவே அமைவாக உள்ளதென சமூக ஆர்வலர்களின் கவலையாகவுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவங்களின் செய்தித் தொகுப்பினைத் தருகின்றோம்
சம்பவம் 1 :
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் உடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உடலமாக மீட்கப்பட்டவர் ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதான லதாரூபன் ஷாலினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் 2 :
யாழ். அச்சேழுப் பகுதியில்இளம் பெண் ஒருவருடைய உடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என உறவினர்களால் கூறப்படும் கே.தங்கமணி (வயது 23) என்ற இளம்பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் 3 :
யாழ். இணுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணுவிலை சேர்ந்த தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே உடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி தனது பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment