இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது.
உலகில் நாகரிகங்கள் உருக்கொள்ளத் தொடங்கிய காலத்தில் ஸ்பாட்டகஸ் தேசத்தில் சுபார்டா எனும் பிராந்தியத்தை லியோனடஸ் மன்னன் ஆட்சி செய்தான். அந்த தேசத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப் பால் மறக்கும் தருணத்திற்கு முதலே போர் பயிற்சி சாகசக்காரர்களாய் இருந்தனர்.
ஊரின் எல்லையில் இருக்கும் பெருங்காட்டுக்குள் மாதக் கணக்கில் அந்தக் குழந்தைகள் தனித்து விடப்படுவர். கையில் தற்காப்புக்காக இருக்கும் ஒரே ஒரு விஷம் ஏற்றப்பட்ட ஈட்டியைத் தவிர அவர்களிடம் வேறு ஏதும் இருக்காது. தாக்க வரும் கொடிய விலங்கை கொன்றால்தான் அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை மிச்சம் இருக்கும். ஆகவே விலங்குடனான போரில் வெற்றியீட்டும் குழந்தை மட்டும் ஸ்பாட்டனாக வீடு திரும்பும்.
இப்படித்தான் தாய்ப் பால் மறக்காத குழந்தைகள் ஸ்பாட்டன்களாக உருவாகினர்.மன்னன் லியோனடஸ்ஸும் அவரின் இரண்டு புதல்வர்களும் இப்படித்தான் உருவாகினர். இந்த மன்னனின் காலத்தில் ஸ்பாட்டா பொன்னாலும் செல்வத்தாலும் செழித்தோங்கியது. அந்தச் செல்வத்தில் கண் வைத்த பாரசீக மன்னன் ஸக்ஸீஸ் பெரும் போர் ஒன்றை ஸ்பாட்டாவுக்கு எதிராகத் தொடுத்தான்.
வலிந்து திணிக்கப்பட்ட போரில் ஸ்பாட்டா மன்னன் லியோனடஸ் வலிமையோடு போராடினான். 300 வீரர்களை வைத்துக் கொண்டு பல நூறு தேசங்களில் இருந்தும் வரும் இலட் சக்கணக்கான படைகளை ஸ்பாட்டாவின் கடற்கரை போர்க்கள மொன்றில் சந்தித்தான் லியோனடஸ். அவன் தலைமையிலான 300 படை வீரர்கள் மூர்க்கத்தனமாகப் போரிட்டனர். ஒரு கட்டத்தில் காட்டிக் கொடுப்பால் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
எந்த மனச் சோர்வையும் பிரதிபலிக்காத மன்னன் லியோனடஸ் எஞ்சிய சிறு படையோடு ஸக்ஸீன் கொடிய படைகளை எதிர்கொண்டான். எதிரியின் பிணங்களை அரணாக வைத்து இடம்பெற்ற சண்டையில் 30 ஆயிரம் பாரசீக படைகளை கொன்று குவித்தான் லியோனடஸ்.
போர் உலகின் அனைத்து விதமான தந்திரங்களோடும் போர் தர்ம விதிமுறை மீறல்களோடும் நடைபெற்ற சண்டையின் இறுதியில் காட்டிக் கொடுப்புகளால் லியோனடஸ் சரணடையும் நிலைக்கு வந்தான். பல தேசங்களும் அவனை சரணடையும்படி கட்டளையிட்டன.
ஆனால் அவனோ சாவேன் என்று தெரிந்தபோதும், தான் முன்பே ஸக்ஸீஸுக்குச் சூளுரைத்த "இந்தப் போர் முடிவதற்குள் உன்னை இரத்தம் சிந்த வைப்பேன்'' என்ற சபதத்தை நிறைவேற்றி மறைந்தான்.
இந்தக் கதையைத் தாங்கி வெளியாகிய "300'' எனும் ஆங்கிலத் திரைப்படம் வன்னியின் பட்டிதொட்டியெங்கும் 2007, 2008 காலப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது.விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இந்தப் படத்தை வன்னியில் இருக்கும் அனைத்து மக்களும் பார்க்க வேண்டும் என்பதை விரும்பினார்.
அதன் பிறகு புலிகளின் அரசியல் துறையினர் ஒவ்வொரு தெருத்தெருவாகப் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டினர். ஆனால் அந்தப் படம் வெளியாகிய காலத்தில் அதன் அர்த்தம் யாருக்கும் புரியாமல் இருந்தது. 2009 மே வரைக்கும் அப்படித்தான் இருந்தது.
0 கருத்துரைகள் :
Post a Comment