இலங்கையில் அரசியல் ரீதியான தமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டு பெரும்பாலான இலங்கையர்கள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியளிக்கும் மன்னிப்பிற்காகவும் அதனால் அவர் சிறைத் தண்டனையிலிருந்து சுதந்திரம் அடையப் போவதனையும் பற்றிய செய்தியின் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார்கள். முன்னாள் இராணுவத் தளபதி இராணுவத்திற்கு தலைமைதாங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றமைக்காக அரசாங்கம் அவரை கதாநாயகனாகப் போற்றி பாராட்டிவிட்டு உடனே பின்னர் அவரை வில்லனாகச் சித்திரித்து சிறையிலடைத்தமையினை நம்புவது பெரிதும் கடினமாகவே இருந்தது. ஆனால், யுத்தத்தில் வெற்றியடைந்த ஆறு மாதங்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுவதற்காக பிரசாரங்களில் ஈடுபடுவதனை எதுவும் தடை செய்யவில்லை. இராணுவ தளபதி தேர்தலில் வெற்றியடைவதற்கு மிக அண்மித்த நிலையை அடைந்த நிலையில் அவர் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் அச்சுறுத்தல் என்ற எண்ணத்தை உருவாக்கி, அதற்காக அந்நிலைவரத்தை மாற்றியமைத்து விட வேண்டும் என்ற நிலைவரத்தையும் தோற்றுவித்துவிட்டது.
ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதால் அரசாங்கத்தின் அதிகாரம் மீண்டும் ஒருங்கு திரட்டப்பட்டுவிட்டதோடு முன்னாள் இராணுவத் தளபதியின் எதிர்கால வாய்ப்புகளும் பெருமளவில் குறைந்துவிட்டது. அவருக்குக் கீழ் இராணுவத்தில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் பின்னர் அவர் வகித்த சிரேஷ்ட பதவி பெற்றிருந்த வீர பதக்கங்கள், ஓய்வூதியம் என்பன யாவையும் பறிமுதல் செய்ததுடன் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவற்றோடு மாத்திரமன்றி ஊழல்கள், இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை சட்டவிரோதமாக பாதுகாத்தமை என்பன தொடர்பாகவும் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதவியிலிருந்து வெளியேற்ற சதி செய்ததாகவும் அவற்றோடு இணைந்த வேறு பல குற்றங்களுக்காகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இதுவரை வழங்கப்பட்ட தண்டனைகளை விட கடுமையான தண்டனைகளுக்கும் கூட அவர் உட்படுத்தப்படலாம் என்ற அச்சமும் நிலவியது.
தளபதிக்கு எதிராக செய்த வழக்கு விசாரணைகள் நீதியை உறுதிப்படுத்தவே என அரசாங்கம் கூறிய விளக்கங்களை எவராலும் நம்பக்கூடியதாக இருக்க வில்லை. அரசாங்கத் தலைவர்கள் எவ்வாறு மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்பது தொடர்பில் தாமாக வெளிப்படையாக செய்துள்ள அறிக்கைகளிலிருந்து தெரிய வந்துள்ள போதிலும் அவர்களுக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளமை காரணமாக சட்டத்தின் வாயிலான ஆட்சி அதலபாதாளத்திற்கு சென்று விட்டமை நன்கு புலனாகின்றது. இவற்றிலிருந்து ஆட்கடத்தல், ஆட்கள் காணாமல் போகின்றமை என்பன காரணமாக குற்றம் செய்தவர்களை தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுகின்ற கலாசாரத்தினையும் அச்சத்தினையும் தொடர்ந்தும் பேணி வருகின்றமையும் புலனாகின்றது. தளபதி பொன்சேகா அரசாங்க தலைமைத்துவத்துடன் ஒத்துப் போகாத குற்றத்தினைப் புரிந்த காரணம் நிமித்தமாகவே அவருக்கு இத்தகைய கதி ஏற்பட்டுள்ளதாகவே அவரை ஆதரிக்கும் பிரிவினர் நம்புகின்றனர்.
ஏற்றுக்கொள்ளக் கூடியதாயுள்ள காரணங்கள்
தளபதி பொன்சேகாவை சிறையிலடைப்பதற்குக் காரணமாக அரசியல் நோக்கம் இருந்தமையினை மனதிற் வைத்துப் பார்க்கும் போது அவரை இப்போது விடுதலை செய்யத்தூண்டிய காரணம் யாது என்பது வினாவாகிறது. சர்வதேச அழுத்தம், தளபதியினுடைய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள், எதிரணியினரை இன்னும் பிரித்து பலவீனமடையச் செய்தல், நீதித்துறையின் முடிவாக வரக்கூடிய விடுதலையை கவனத்திற்கொண்டு அதற்கு முன்னரே தானே விடுவித்ததாக கூறிக “ கொள்வதற்கான எண்ணம், ஜனாதிபதியின் இரக்கப் பண்பு என்பன காரணங்களாக இருக்கலாம் எனக் கூறிக்கொள்ளப்படுகின்றது. ஜனாதிபதி மன்னிப்புக் கடிதத்தை வழங்கும்போது அரசாங்க அங்கத்தினர்கள் முன்பெல்லாம் கூறி வந்ததனைப் போன்று தளபதியின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முன் நிபந்தனைகளை விதிக்க வில்லை என்பது மிக முக்கியமான நிலைவரமாகும். அத்துடன் ஜனாதிபதியிடம் அவ்வாறான முறையீடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்ற தகவல்களே கிடைக்கக் கூடியதாகவும் உள்ளன.
கடந்த சில வாரங்களாக தளபதி பொன்சேகாவின் ஆரோக்கியம் படிப்படியாக குறைந்து கொண்டே சென்றுள்ளது. இதனை காரணமாக வைத்தே அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்குவதற்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தளபதியை தனியார் மருத்துவமனைகள் (நவலோக) யில் சிகிச்சைக்காக அனுமதிப்பதனை தவிர்த்து அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முனைந்திருக்கின்றன. இவற்றிற்கு மத்தியிலும் அவரை முன்னர் நிர்ணயித்த சிறைவாச காலத்திற்கு முன்னரே விடுதலையளிப்பதற்கு மனிதாபிமான காரணங்களும் பொறுப்பாக இருந்தமையும்முற்றாக நிராகரிப்பதற்கில்லை. முன்னாள் யுத்தகள கதாநாயகனது பௌதீக/உடல் நிலை நலிவடைவதற்கோ அல்லது அவரது ஆரோக்கிய நிலை மோசமடைவதற்கோ பொறுப்பாயிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுவதனை அது விரும்பியிருக்காது.
தளபதி பொன்சேகா உயர் நீதமன்றத்துக்கு செய்திருந்த மேன்முறையீடு இன்னும் விசாரிக்கப்படாது தேங்கியிருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம். அவர் இராணுவ நீதிமன்றத்தினால் சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பாக இவ்வாறான மேல் முறையீடுகளைச் செய்திருந்தார். ஏனைய அரச நிறுவனங்கள் அளவுக்கு மீறிய வகையில் அரசியல் மயமாக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இலங்கையில் நீதித்துறையின் மீது பொதுமக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் சுதந்திரம் நிலவுகின்றமையினை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காணக்கூடியதாயிருந்திருக்கின்றது. அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையிலான பல தீர்ப்புகளை நீதித்துறை அண்மையில் வழங்கியுள்ளது. எனவே அரசாங்க தளபதி செய்துள்ள பிணையில் செல்வதற்கு அனுமதி தருமாறு கோரிய வேண்டுதலை நீதிமன்றம் ஏற்று பிணையில் செல்ல அனுமதி வழங்குவதற்கு முன்பு தானாக விடுதலை செய்து தனது உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு செய்துகொண்ட தந்திர உபாயமாகவும் இருக்கலாம்.
தளபதி பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியினை கவனத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் மீறப்படுவதாக கருதப்படுவதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக அரசாங்கம் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் எண்ணுவதற்கு தோன்றுகிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெளிவிவகார அமைச்சர் மே மாதம் 18 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளரை வாஷிங்டன் (டி.சி.) யில் சந்திக்கவிருந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் கடிதத்தில் கையெழுத்திட்டதனை தற்சம்பவமாக கருதுவதற்கில்லை. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கும் மற்றும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையேயான சந்திப்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒன்றும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கெனவே வருடத்தின் ஆரம்ப பகுதியில் இவ்வாறான சந்திப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட போது சந்திப்பு நிராகரிக்கப்பட்டிருந்தது.
அப்போது இலங்கை அரசாங்கம் அது தனது சிநேகநாடுகள் என நம்பிய ரஷ்யா, சீனா மற்றும் சில மூன்றாம் உலக நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்காவையும் அதன் ஆதரவு நாடுகளையும் வென்று விடலாம் என்ற நம்பிகையுடன் இருந்தது. இலங்கை அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் ஐ.அ.தலைமையிலான பெரும்பாலான நாடுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாத கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமை இப்போது வரலாற்று தகவலாகி விட்டது. வாஷிங்டன் சந்திப்பின்போது ஐக்கிய அமெரிக்கா தான் ஜெனீவா தீர்மானத்தில் வற்புறுத்தியவற்றினையே மீண்டும் உறுதி செய்திருந்தது. ஜெனீவா தீர்மானத்தின் படி (2012) இலங்கை அரசாங்கம் அதன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் குறிப்பாக பொறுப்புக் கூறுதல், யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளுதல் என்பனவற்றில் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் வற்புறுத்தியிருந்தது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரிடையேயும் சம்பிரதாயமான இராஜதந்திர வழிமுறைகளின் படியே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற போராட்ட உணர்விலான வகையிலானதாக அமையவில்லை என்பதனை இப்போது கிடைக்கக்கூடியதான தகவல்களிலிருந்த தெரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.
வாஷிங்டனில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் இலங்கை வெளி விவகார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஐ.அ. இராஜாங்க செயலாளர் இலங்கை அமைச்சரை கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் ஒரு பகிரங்க செயற்திட்டத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் வட மாகாண பகுதிகளில் தற்போது நிலவும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலைமையினை நீக்கி விடுமாறும், அங்கே மாகாண சபை தேர்தலை நடத்தும்படியும் அவற்றின் மூலம் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் இல்லாது சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் ஐக்கிய அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்கம் தனது மக்கள் அல்லது பாராளுமன்றத்திடம் கூட தான் எவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பதனை தெரிவித்த கருத்து பரிமாற்றம் இன்றி செயற்திட்டத்தினைத் தயாரித்தமை என்பது அரசாங்கம் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தமையினைக் காட்டுவதாகவுள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் மீறல்கள், யுத்த குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டபோது அது தேசிய இறைமை தொடர்பான தத்துவங்களை மிகவும் வலிமையான முறையில் பயன்படுத்தி செயற்பட்டு வந்துள்ளது.
தளபதி பொன்சேகாவை விடுதலை செய்ததன் மூலம், இலங்கை அரசாங்கம்தான் ஏற்றுக்கொண்ட (நல்லாட்சி தொடர்பான) பொறுப்புகளில் ஒன்றில் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. தளபதி பொன்சேகாவை விடுதலை செய்தலிலும் க.பா.நெ.ஆ. அறிக்கை கூறிய சிபாரிசுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றோம் என்பதற்கான செயற்திட்டம் தயாரித்தலிலும் எவ்வாறு அரசாங்கம் செயற்பட்டுள்ளதோ அதனை ஒத்த வகையில் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தலிலும் செயற்படுவதன் மூலம் அரசாங்கத்தினை நல்லதோர் நிலைமைக்கு கொண்டு செல்ல முடியும். பொன்சேகாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை மற்றும் க.பா.ந.ஆ. அறிக்கை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தினைத் தயாரித்தமை போன்ற மாற்றங்களுக்கான பின்னணியின் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அவை யாவும் அரசாங்கம் புதிய திசையில் செல்வதற்கு தயாராக உள்ளமைக்கான நம்பிக்கையினையும் எதிர்மறையற்ற சிந்தனை நோக்கிய போக்கினையும் காட்டுவதாக உள்ளது என்பது கவனிக்க வேண்டியதாகும். இதேவேளையில் குறிப்பாக அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைக்களுக்கும் விரைவாகவும் திறமையுடனும் செய்து முடிக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் குறைந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

0 கருத்துரைகள் :
Post a Comment