அரசுத்தரப்பைக் கோபமுறச் செய்துள்ளது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான பிரமுகர்களதும் பொதுவான பிரசார விடயமாக முதலில் காணப்பட்டது ராணுவ ரீதியில் புலிகள் அமைப்பைத் தோல்வியடையச் செய்தமைதான். போர் வெற்றியை அடுத்து இருவருமே தேசியமட்டத்தில் புகழின் உயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் வெற்றியின் பின் எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த இரு தலைவர்களும் மோசமான எதிரிகளாக மாறிவிட்டார்கள். ஆரம்பத்திலிருந்த நிலைமாறி விட்டது. பிரதான பிரச்சினைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. ராஜபக்ஷவின் பிரசாரபிரிவினர் இப்போது ஒருகாலத்தில் பிரதான போர் வெற்றி வீரராகக் கருதப்பட்டவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல்களையும், வசைப்பாடு தலையும் ஆரம்பித்துள்ளார்கள்.

உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவர் என்று புகழ் பாடியவர்கள் இப்போது ஜெனரல் பொன்சேகாவை துரோகி என்று பட்டம் சூட்டி வசைபாடுகின்றார்கள். ராஜபக்ஷ நிர்வாகம் துரோகி என்ற பட்டத்தையே பலருக்கு வழங்கி பெருமைப்பட்டுக்கொண்டுள்ளது. போரை நடத்திய வேளையில் அவர் மில்லியன் கணக்கில் பணத்தை ஒதுக்கி கொண்டு விட்டார் என்று அரசுத்தலைவர்கள் இப்போது குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செயலாற்றுவதற்கான ஓர் உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டவுடனேயே, துரோகம் புரிகிறார், நாட்டை விற்க முனைகின்றார் என்றவாறெல்லாம் அவர்கள் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டடைப்புடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி விட்ட நிலையில் அவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதற்கு அரசுத்தரப்பினால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

எதிர்த்தரப்பு வேட்பாளர் பொன்சேகாவையும் இதர எதிர்க்கட்சித் தலைவர்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள் என்ற தகவல் வந்ததன் பிறகு தான் அவர்களை தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்கான இறுதிநேர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஐ.தே. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டடைப்பினர் பேச்சுக்கள் நடத்த முற்பட்ட வேளையில்.த. தே. கூட்டமைப்பு பொன்சேகாவுடன் செய்த உடன்பாடு தமிழர் தேசிய கூட்டமைப்பு மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு விட்ட நிலையில் தான் த.தே கூட்டமைப்புக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் உடன்பாடு ஒன்று ஏற்படலாயிற்று கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பிரிந்து விட்டார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று விரும்பினார். அத்துடன் இங்கே எல்லாம் முடியும் வரை ஒதுங்கியிருப்பதற்காக லண்டனுக்குப் போய்விட்டார். ராஜவரோதயம் சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டதையடுத்து த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 18 உறுப்பினர்களில் 13 பேர் கலந்து கொண்டனர். காரசாரமான விவாதம் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த போது செல்வராஜா கஜேந்திரன், கே.சிவாஜிலிங்கம், என். சிறிகாந்தா, எஸ்.வினோத நோதராதலிங்கம் மற்றும் எஸ். கிஷோர் ஆகிய வர்களைத்தவிர ஏனையவர்கள் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு முடிவு செய்தனர்.

கூட்டமைப்பின் மூன்று எம்பிக்கள் தொடர்ந்தும் வெளிநாட்டில் இருந்து வந்தார்கள். ஜெனரல் பொன்சேகாவுடன் உடன்பாடு கண்டதையடுத்து இரண்டு பக்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டிருந்த சில கருத்துக்கள் வருமாறு:

மேலும் ஒரு தவணை தம்மை ஆட்சியில் அமர்த்துவதற்கு தீர்ப்பு வழங்கும் படி தேர்தல் அறிவிப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவோ ஆதரிக்கவோ முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை காண்பதில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் பின்னோக்கி செல்பவையாகவே உள்ளன. மனித உரிமைகள், மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகவே இருந்துள்ளன. சட்டவிரோத கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் தமிழ் மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆட்சி அமைப்புக்கான நிறுவனங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. சட்ட மற்றும் ஒழுங்கு நடைமுறைகள் சீர் குலைந்துள்ளன. ஊழல்கள் மலிந்து விட்டன. இதன் விளைவாக சட்ட நடைமுறையும் நல்லாட்சியும் அவைகளின் மிக மோசமான எல்லைக்குச் சென்று விட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாடு கண்டுள்ளமை தொடர்பில் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து பெற்றிராதவரான லக்ஷ்மன் யாப்பா கருத்து வெளியிடுகையில் இந்த இருதரப்பினரும் கள்ளத்தனமாக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார். இது புலிகளை ராணுவத்தினர் தோற்கடித்து வரலாறு படைத்தசாதனையை சீரழிப்பதாக விருக்கப்போகின்றது என்றும் குற்றஞ் சாட்டியிருந்தார்.

இலங்கைத் தலைவர்களை சர்வதேச போர் குற்ற விசாரணைக் குழுவின் முன் நிறுத்துவதற்கு லண்டனிலுள்ள புலிகள் சார்பு குழுக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படு கிறார்கள் என்று அவர் மேலும் குற்றஞ்சாட்டினார். அவர் இடைக்கால தமிழ் ஈழ அரசொன்றை நிறுவுவதற்கான பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்கள் என்றார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் இந்தக் குற்றச் சாட்டுக்களை வன்மையாக மறுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன் வைத்த கோரிக்கைகள் சிலவற்றுக்கு இணக்கம் தெரிவித்து ஜெனரல் பொன்சேகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் கையெழுத் திட்டிருக்கிறார்களென்று அறியப்படுகின்றது. அவைகளில் சில கடந்த வாரம் ஜெனரல் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது ஒப்புக் கொண்டவையாகும். உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் .வடக்கில் மக்கள் சுதந் திரமாக நடமாட அனுமதித்தல், சிவில் நிர்வாகத்தை ஆரம்பித்தல், தனியார் சொத்துக்களை, கட்டடங்கள் உட்பட உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் விரைவாக சிவில் நிர்வாகத்தை உருவாக்க குழுக்களை நிறுவுதல் போன்றவையாகும்.

வடக்கில் தமிழ் தேசிய கூட்ட மைப்பு மற்றும் மலையகத்தில் இ.தொ.கா வின் மிக முக்கிய தலைவர்களும் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொண்டுள்ள அதே வேளை மட்டக்களப்பில் மேயர் சிவகீதா பிரபாகரனும் பொன்சேகாவின் பக்கம் சாய்ந்திருக்கிறார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் "டிக்கட்டில்" வெற்றியீட்டியிருந்த திருமதி பிரபாகரன், பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்தார். இப்போது ஐ.தே.கவில் அவர் சேர்ந்து விட்டார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஓர் அதிகாரியுடனான 20 பேர் கொண்ட கொமாண்டோ பாதுகாப்புப் படையணி உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்கு இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடராக அவர் ஜெனரல் பொன்சேகாவிடம் புகார் கூறியுள்ளார்.

பொன்சேகாவின் உறவினர்கள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு பெரும் பொருள் தேடிக் கொண்டார்கள் என்ற வகையில் ராஜபக்ஷ தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். கொழும்பில் நிறுவப்பட்டுள்ள சில விளம்பரப் போஸ்டர்களில் ""புள்ளட் திருடன்"" என்ற வகையில் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இம் மாதிரிக் குற்றச் சாட்டுகள் வழக்கமே

இலங்கை அரசியலில் இம் மாதிரி குற்றச்சாட்டுக்கள் புதியவையல்ல ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே அனுசரணையுடன் உடன்பாடு செய்துகொண்டபொழுது காட்டி கொடுத்து விட்டார் என்று குற்றஞ் சாட்டப்பட்டார். போர்க்குற்ற விசாரணை ஆல்ஸ்ரன் அறிக்கை எதுவானாலும் எதிர்க்கட்சியினருக்கும் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டமைப்பினருக்கும் கவலை தருவதான சில செய்திகள் வெளிநாட்டிலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன. சட்ட விரோத மற்றும் விசாரணையற்ற கொலைகள் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளர் பிலிப் ஆல்ஸ்ரன் நியுயோர்க்கில் கடந்த வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இலங்கையில் இடம் பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குற்றங்கள் என்பனவற்றுக்கு சுதந்திரமான விசாரணைகள் நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளர். இவை வன்னியில் எங்கோ ஓர் இடத்தில் கைகள், கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ படங்களின் உண்மைத் தன்மை குறித்து தீர்மானிக்க தாம் நியமித்த விசாரணைகளை அடிப்படையாக வைத்து நடைபெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடியோ படங்கள் மிக உயர் தகைமையுடைய தொழில் நுட்ப நிபுணர்கள் மூவரிடம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் இந்த நிபுணர்கள் ஒவ்வொருவரும் இவ் வீடியோப் படங்கள் பொய்யானவை என்று காட்டுவதற்கு எந்தவித தடயமும் இல்லையென்று தெரிவித்துள்ளனர் என்றார். அவர்கள் குறிப்பாக இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள சாட்சி யங்களை மறுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இந்த படங்கள் குறித்து புலனாய்வுகளை தானே நடத்தி அவை ஆதாரமற்றவை என்று கண்டு பிடித்திருப்பதாக அறிவித்திருந்தது என்று ஆல்ஸ்ரன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த முடிவுகளின் அடிப் படையிலும் போரின் இறுதிக் கட்டத்தில் இருதரப்பினாலும் இடம் பெற்றதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாலும் சுதந்திரமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றுநான் கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையில் நடை பெற்றுள்ள போர் குற்றங்கள் மற்றும் மிகமோசமான சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதற்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் தெரித்துள்ளார்.

10 .01.2010 திகதி "சண்டே ரைம்ஸ்" எழுதியிருந்த அரசியல் கண்ணோட்டத்திலிருந்து ஒருபகுதி
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment