யாழ்மாவட்டம் வலிகாமம் உடுவில் தெற்கு பிரதேச எல்லைக்குள் சுன்னாகம் அமைந்துள்ளது. யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் வழியில் உள்ள சுன்னாக்சந்தியிலிருந்து 250 மீற்றர் தெற்குப்புறமாக சுன்னாகம் பொலீஸ் நிலையம அமைந்தள்ளது.
1984 ம் ஆண்டு தை மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கிழ் காரணமின்றிக் கைது செய்யப்பட்ட சுன்னாகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுன்னாகக் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
1984 ம் ஆண்டு தை மாதம் போராளிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக எட்டாம் திகதியன்று சுன்னாகக் காவல்துறையில் இளைஞர்களை தடுத்துவைத்திருந்த அறையில் நேரக்கணிப்புக் குண்டினை பொருத்திவிட்டு காவல்துறையினர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர். சிறிலங்கா காவல்துறை பொருத்திய குண்டு வெடித்ததில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உட்பட, தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்களைக் காப்பாற்றச் சென்ற சஞ்சீவன் உட்பட பத்தொன்பது இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் கிடைக்கப்பெற்ற விபரம்
செல்லர் சிவலிங்கம் 22
வைத்திலிங்கம் நிகோதனன் 21
கந்தையா பாலன் 25
அப்பையா நாகராசா 38
ஆசீர்வாதம விஜிற் விமலராஜா 20
0 கருத்துரைகள் :
Post a Comment