முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் 16.01.1985 அன்று தைத்திருநாளின் மறுதினமான மாட்டுப்பொங்கல் தினத்தன்று அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.
அதிகாலையில் எழுந்தமக்களிற்கு தமது பிரதேசம் இராணுவத்தின் சுற்றிவளைப்பிற்கு உட்பட்டிருப்படை உணர்ந்தார்கள். சுற்றி வளைத்த இராணுவத்தினர் முள்ளியவளைக் குடியிருப்புப் பகுதிக்குள் வந்து ஏழுமாதக் கர்ப்பிணிப் பெண், மூன்று பிள்ளைகளின் தாயார்கள் ஆகிய இரண்டு பெண்கள் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன்,அவர்களின் வாழ்விடங்களையும் தீக்கிரையாக்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் (அரை மணித்தியாலம்) சரமாரியாக சூட்டுச் சத்தங்கள் கேட்டதை உறவினர்கள் அவதானித்தனர். பிடித்துச் செல்லப்பட்ட பதினேழு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பரவத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் இராணுவ வாகனங்கள் முல்லைத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்களில் பிடித்துச் செல்லப்பட்ட தமது உறவினர்கள் இருக்கின்றனரா! என ஒவ்வொரு வாகனங்களாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் மட்டும் சைக்கிள்களையும், ஏனைய பொருட்களையும் ஏற்றிச சென்றதை கண்டனர்.
அன்றைய பொழுது மறைந்து மறுநாளும் தமது உறவினர்கள் வீடு திரும்பாத நிலையில் ஊரிலிருந்த சமாதான நீதவான் திரு.தியாகராசாவுடன் முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குச் சென்றிருந்த போது அங்கு இறந்தவர்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன. அங்கே வீசப்பட்டிருந்த உடல்களின் உடைகள் அகற்றப்பட்டு, கைகள் கால்கள் மற்றும் தலைகள் துண்டிக்கப்பட்டும் இருந்தது. உடலில்களில இருந்த காயங்களை வைத்து பார்க்கும் போது சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டதை புலப்படுத்தியது. அதில் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்ணின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு, வயிற்றுப்பகுதியில் தீமூட்டப்பட்டதால் சிசுவும் வெளியில் வந்து கிடந்ததைக் காணமுடிந்தது.
மற்றைய பெண்ணின் உடல் சிகரட் சூட்டுக்காயங்களுடன் அடையாளம் தெரியாத வகையில் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததையும் கண்ணுற்று அனைவரும் அதிர்ச்சிக்கள்ளானார்கள். உறவினர்கள் அவ்வுடல்களை தமக்குத் தருமாறு இராணுவத்தினரிடம் கேட்டவேளை, கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளென கையொப்பமிட்டுத் தந்தால் மட்டுமே உடல்களைத் தருவோம் எனக்கூறி இராணுவம் மிரட்டிய போது மக்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால் இராணுவத்தினர் உடல்களை மக்களிடம் ஒப்படைக்காது தாமே அவ் உடல்களுக்குத் தீயிட்டனர்.
இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றிக் கூறியதாவமு
' அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், பலரது வீடுகளை எரித்து சொத்துக்களையும் சூறையாடினர். கைது செய்தவர்களை அருகிலிருந்த காடு நோக்கிக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பல சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் ஏற்றி அதன்மேல் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர். அடுத்தநாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்த்த போது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒரு துணியும் இல்லாமல் சடலங்கள் கிடந்தன. அவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கேட்டபோது அவர்களைக் கொட்டி(புலிகள்) என்று கையெழுத்திட்டாலே கொண்டு போகமுடியும் என்றனர். நாங்கள் எல்லோரும் பொதுமக்களின் உடல்களை தவறாக கையெழுத்திட்டு பெற விரும்பாததால் உடல்களை விட்டு விட்டு வந்தோம்'
கொல்லப்பட்டவர்களில் கிடைக்கப் பெற்ற விபரம்
1. நாகரட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா
2. குமபரசாமி விஜயகுமாரி
3. பிலிப்பையா அன்ரன் யோகராசா
4. தம்பையா விவோகானந்தம்
5. மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி
6. செல்லத்துரை நவரட்ணம
7. செல்லத்துரை குமாரசாமி
8. சுப்பன் சின்னன்
9. சின்னன் அன்னலட்சுமி

இந்தப் படுகொலைக்கு பலியான எம் உறவுகளுக்கு அஞ்சலிகள்...
ReplyDelete