அமெரிக்காவின் முன்நகர்வும் தமிழர்களின் நிலைப்பாடும்


ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வுகள், தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு எத்தகைய காத்திரமான பங்கினை வகிக்க போகின்றது என்பது, முக்கியமான கேள்வியாக உள்ளது. நலன்களை மையப்படுத்தி நகரும் இன்றை உலக நாடுகளின் அரசியல் சூழலில், தமிழர்களின் நலனை பொருத்திப் பார்ப்பதும், அதன் வழி இலக்கை வென்றெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது. சமீபத்திய நாட்களில் சிறிலங்காவைக் நோக்கி, அமெரிக்க அரச தரப்பு பிரதிநிதிகளின் தொடர் பயணங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இவர்களது பயண அறிக்கைகளே, தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற, காத்திரமான பங்கினை வகிக்க முடியும் என தமிழர் தரப்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா அரச உயர்மட்டம், இரட்டை நிலைப்பாட்டுடன் தற்போது உள்ளதாகவே அறியமுடிகின்றது.
1) நல்லிணக்க ஆணைக்குழு பரிந்தரைகள் நடைமுறைப்படுத்துவதற்கான சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலான தீர்மானம்.
2) சுயாதீன அனைத்துலக விசாரணை பொறிமுறை
இவ்விரு விடயங்களும் அமெரிக்க இராஜதந்திர மட்டங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், முதலாவது விடயமே அமெரிக்க இராஜதந்திர மட்டத்தின் தற்போதைய பெருன்பான்மை நிலைப்பாடாக உள்ளதென அறியமுடிகின்றது. சுயாதீன அனைத்துலக விசாரணைக்கான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு முன்னர், குறித்த நாட்டுக்கு குறிப்பிட்டளவான காலக்கெடு கொடுக்க வேண்டும் என்பது சர்வதேச சட்டவிதியாக உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு அமையவே, சுயாதீன அனைத்துலக விசாரணை பொறிமுறைக்கு முன்னரான ஒரு காலக்கெடு வழங்கலாக, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்கும் தீர்மானத்தை, சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது.
அடுத்த யூன் மாதத்தின் 20வது ஐ.நா மனித உரிமைச் சபையில், இதற்கு அடுத்த படியான நகர்வினை மேற்கொள்வதற்கே அமெரிக்கா யோசிக்கின்றது. அமெரிக்க இராஜாங்க செயலர் ஹில்லரி கிளிண்டனால், கடந்த சனவரி 27ம் திகதி சிறிலங்கா அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் இது தெரிவிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில், ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்தவாறு, தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலை தொடர்பில், சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும், கோரிக்கைக்கும் ஏற்ப காத்திரமான பங்கினை, தற்போதைய அமெரிக்காவின் நகர்வுகள் அமையாது என்பதே தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாட்டளர்களின் கருத்தாக உள்ளது.
இத்தகைய சூழிலில், சிறிலங்காவுக்கு பயணம் செய்யவுள்ள மரியா ஒடேரோ , ஸ்டீவன் ராப் ஆகிய அமெரிக்க பிரதிநிதிகளின் பயண அறிக்கைகளே, தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு காத்திரமான பங்கினை வகிக்க முடியும் என எதிர்பார்கப்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமெரிக்க அரச பிரதிநிதிகளின் ஒருவரான, மத்திய – தென்னாசிய விவகாரங்களுக்கான துணை செயலர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் 11ம் திகதி சிறிலங்காவுக்கு செல்லவுள்ள செய்திகள் வெளிவந்திருந்தாலும், இம்முறை மரியா ஒடேரோ  உயர்பிரதிநிதியின் தலைமையிலேயே றொபேட் ஓ பிளேகின் பயணம் அமைகின்றது. தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்படாத அவர்கள், சிறிலங்காவின் தற்போதைய நிலைவரம் தொடர்பான களஅறிக்கையினை, நேரடியாகவே இராஜங்க செயலர் ஹில்லரி கிளிண்டன் அம்மையாரிடம் கையளிக்கவுள்ளார்.
இதில்கவனிக்கப்படவேண்டியது றொபேட் ஓ பிளேக் அறிக்கை அல்ல. மரியா ஒடேரோ அவர்கள் Under Secretary for Civilian Security, Democracy and Human Rights  ஆகிய விடயங்களை கையாள்பவர். இரண்டாவது முக்கியமான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவன் ராப் (போர் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்க விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சர்வதேச பிரதிநிதி).
திங்கட்கிழமை (06-02-2012) சிறிலங்காவுக்கு செல்கின்ற ஸ்டீவன் ராப், சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையை மறுநாள் 7ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்றார். இவரது களஅறிக்கை, போர்குற்றங்கள் – மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களை      மையப்படுத்திய அமையவுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு பிரதிநிதிகளின் சிறிலங்கா தொடர்பிலான களஅறிக்கைகளே, தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு அல்லது எதிர்பார்புக்கு காத்திரமான பங்கினை ஆற்றமுடியும். அதாவது சுயாதீன அனைத்துலக விசாரணை பொறிமுறை. சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா நகர்வுகளில், காத்திரமான மாற்றத்தை ஆகிய ஸ்டீவன் ராப்இருவரது சிறிலங்காவுக்கான பயணங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே தமிழர்களின் இன்றைய எதிர்பார்பாக உள்ளது.
நன்றி நாதம் 



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment