அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வசமாக மாட்டியுள்ள மகிந்த



தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை இழுத்துச் செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. கடந்த ஆண்டில், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக பிளேக் வெளியிட்ட கருத்தால் சினமடைந்த மகிந்த ராஜபக்ஸ அவர் கொழும்பு வந்த போது சந்திக்கவில்லை. அதுமட்டுமன்றி, ஒருமுறை பிளேக் இங்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி அது தட்டிக்கழிக்கப்பட்டது. ஆனால் இந்தமுறை பிளேக் வந்தபோது பாகிஸ்தான் பயணத்தையும் சிங்கப்பூர் பயணத்தையும் மாற்றியமைத்து, நாட்டில் தங்கிருக்க வேண்டிய நிலையில் இருந்தார் மகிந்த. அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சர் பிரீசும் இதற்காகவே கொழும்பு வரவேண்டியிருந்தது. இப்போது அமெரிக்காவின் தாளத்துக்கு இலங்கை ஆடியே ஆக வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மூன்று முக்கிய இராஜதந்திரிகள் அரசாங்கத்தைப் பெரிதும் கலக்கமடையச் செய்து விட்டனர். இந்த மூவரினதும் பயணங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணித்துக் கொள்ளவோ முடியவில்லை. அதேநேரம், அவர்களின் பயணங்களை தடுக்கின்ற திராணியும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. இவர்களின் பயணங்களும், அதற்கான காரணங்களும் அரசாங்கத்தைப் பெரிதும் ஏமாற்றமடையவும் அதிர்ச்சியடையவும் செய்து விட்டன. இந்த மூவரும் ஹிலாரி கிளின்ரனின் இராஜாங்க திணைக்களத்தின் மிகமுக்கியமான பொறுப்பில் உள்ள அதிகாரிகள். அதைவிட இவர்கள் மூவரும் அரசியல் விவகாரம், மனிதஉரிமைகள், ஜனநாயகம், போர்க்குற்ற விவகாரங்கள் சார்பில் கருத்து வெளியிடவும் முடிவுகளை எடுக்கவும் அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது, அதுவும் கிட்டத்தட்ட சமநேரத்தில் வந்து போனது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிர்ச்சி தரக் கூடியது தான். பொதுவாக அமெரிக்கா ஒரு விடயத்தை கையாள அல்லது நிறைவேற்ற முனைகிறது என்றால், தமது தரப்பில் யாராவது ஒரு அதிகாரியை அனுப்பி விட்டு இருக்கும். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா அப்படி நடந்து கொள்ளவில்லை. அத்தகைய வழிமுறைகளை அமெரிக்கா கையாண்ட காலம் கடந்து போய்விட்டது. இப்போது மேற்கொள்ளும் நகர்வுகள் இலங்கைக்கு இறுதியான எச்சரிக்கை கொடுக்கும் வகையிலானது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இப்போது பல்வேறு வகையான இராஜதந்திர அழுத்தங்களை கொடுத்து வருகிறது. தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை இழுத்துச் செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

இனி, 

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வசமாக மாட்டியுள்ள அரசாங்கம்


அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் மூன்று முக்கிய இராஜதந்திரிகள் அரசாங்கத்தைப் பெரிதும் கலக்கமடையச் செய்து விட்டனர். இந்த மூவரினதும் பயணங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணித்துக் கொள்ளவோ முடியவில்லை. அதேநேரம், அவர்களின் பயணங்களை தடுக்கின்ற திராணியும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. இவர்களின் பயணங்களும், அதற்கான காரணங்களும் அரசாங்கத்தைப் பெரிதும் ஏமாற்றமடையவும் அதிர்ச்சியடையவும் செய்து விட்டன. 

இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட முதலாமவர் ஸ்டீபன் ராப். இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான பிரிவில் சிறப்பு தூதுவராக இருப்பவர். சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவர். இரண்டாமவர், இலங்கைக்கு அடிக்கடி வந்து போகின்ற - நன்கு பரிச்சயமான ஒருவர். அவர் தான், இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக். மூன்றாமவர் மரியா ஒரேரா என்ற பெண் இராஜதந்திரி. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மற்றும் மனிதஉரிமைகள் தொடர்பான கீழ்நிலைச் செயலராக இருப்பவர். 

இந்த மூவருமே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரிகள். 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரக் கட்டமைப்பு ஆறு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஆறு கீழ்நிலைச் செயலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்றான அரசியல் விவகாரச் செயலரின் கீழ் தனித்தனியாக ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு உதவிச் செயலர் உள்ளார். அத்தகையதொரு பிராந்திய உதவிச்செயலர் தான் றொபேட் ஓ பிளேக். அதுபோலவே பிரதானமான ஆறு கீழ்நிலைச் செயலர்களில் ஒருவர் தான் மரியா ஒரேரோ. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் தொடர்பான கீழ்நிலைச் செயலராக இவர் பணியாற்றுகிறார்.

2005ம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த கொலின் பவல் இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் கொழும்புக்கு வந்த மிக உயர்மட்ட இராஜதந்திரி மரியா ஒரேரோ தான். 

அடுத்து இராஜாங்கச் செயலரின் கீழ் - அவரது நேரடிக் கண்காணிப்பில் 14 பணியகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகம். இதன் நிறைவேற்று அதிகாரியாக- சிறப்புத் தூதுவர் நிலையில் இருப்பவர் தான் ஸ்டீபன் ராப். இந்த மூவரும் ஹிலாரி கிளின்ரனின் இராஜாங்க திணைக்களத்தின் மிகமுக்கியமான பொறுப்பில் உள்ள அதிகாரிகள். அதைவிட இவர்கள் மூவரும் அரசியல் விவகாரம், மனிதஉரிமைகள், ஜனநாயகம், போர்க்குற்ற விவகாரங்கள் சார்பில் கருத்து வெளியிடவும் முடிவுகளை எடுக்கவும் அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது, அதுவும் கிட்டத்தட்ட சமநேரத்தில் வந்து போனது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிர்ச்சி தரக் கூடியது தான். பொதுவாக அமெரிக்கா ஒரு விடயத்தை கையாள அல்லது நிறைவேற்ற முனைகிறது என்றால், தமது தரப்பில் யாராவது ஒரு அதிகாரியை அனுப்பி விட்டு இருக்கும். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா அப்படி நடந்து கொள்ளவில்லை. அத்தகைய வழிமுறைகளை அமெரிக்கா கையாண்ட காலம் கடந்து போய்விட்டது. இப்போது மேற்கொள்ளும் நகர்வுகள் இலங்கைக்கு இறுதியான எச்சரிக்கை கொடுக்கும் வகையிலானது. 

இந்த மூன்று இராஜதந்திரிகளும் இலங்கை வந்து இரண்டு முக்கிய தரப்புகளை சந்தித்திருந்தனர். 

முதலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 

இரண்டாவது அரசாங்கம். 

இதில் கூட்டமைப்பை முதலில் கூறவேண்டியதற்கு காரணம் உள்ளது. முதலில் இவர்கள் கூட்டமைப்பை சந்தித்த பின்னரே, அரசதரப்பைச் சந்தித்தனர். 

போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ராப் கொழும்பில் சந்திப்புகளை முடித்து விட்டுப் போய் விடவில்லை. வடக்கிற்கு பயணம் செய்ய விரும்புவதாக அரசிடம் கூறினார். அதற்கு பாதுகாப்பு அமைச்சே ஏற்பாடு செய்து கொடுத்தது. யாழ்ப்பாணம் சென்ற அவர் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். மறுநாள் கிளிநொச்சிக்கு அவரை கூட்டிச் செல்ல பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருக்க, அவர்களைச் சுழித்துக் கொண்டு முல்லைத்தீவுக்குச் சென்றார் ராப். செல்வபுரம் கிராமத்தில் பொதுமக்களை அழைத்து போரின் இறுதியில் என்ன நடந்தது என்ற விபரங்களை விசாரித்து அறிந்து கொண்டார். இதை அரசாங்கம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அவர் திரட்டிக் கொண்டு போனார். ஏனென்றால் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை இவர் அடுத்தமாதம் 7ம் திகதிக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த அறிக்கை தான் மிகவும் முக்கியமானது. 

அதை வைத்துத் தான் அடுத்த கட்ட நகர்வுகள் ஜெனிவாவில் தொடங்கவுள்ளன. இவரையடுத்து கொழும்புக்கு வந்த றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும், ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டுப் போயுள்ளனர். அதுமட்டுமன்றி, செய்தியாளர்களைக் கூட்டி அமெரிக்கா முடிவு செய்து விட்டது, இனிமேல் இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறினர். ஜெனவா களத்தில் அரசின் கழுத்தில் சுருக்குப் போடப் போகிறோம் என்று அமெரிக்கா கொழும்பில் வைத்து அறிவித்துள்ளது. இது இலங்கை அரசுக்கான உச்சகட்டமான எச்சரிக்கை என்றால் மிகையாகாது.

பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பு வருவதைத் தடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. 

கடந்த ஆண்டில், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக பிளேக் வெளியிட்ட கருத்தால் சினமடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர் கொழும்பு வந்த போது சந்திக்கவில்லை. அதுமட்டுமன்றி, ஒருமுறை பிளேக் இங்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி அது தட்டிக்கழிக்கப்பட்டது. ஆனால் இந்தமுறை பிளேக் வந்தபோது பாகிஸ்தான் பயணத்தையும் சிங்கப்பூர் பயணத்தையும் மாற்றியமைத்து, நாட்டில் தங்கிருக்க வேண்டிய நிலையில் இருந்தார் மகிந்த. அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சர் பிரீசும் இதற்காகவே கொழும்பு வரவேண்டியிருந்தது. இப்போது அமெரிக்காவின் தாளத்துக்கு இலங்கை ஆடியே ஆக வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.  இந்தமுறை பிளேக், மரியா ஒரேரோ, ஸ்டீபன் ராப் ஆகியோரை அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கவோ முகத்தைத் திருப்பிக் கொள்ளவோ முடியவில்லை. அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சர் பிரீசை ஜெனிவா செல்லும் அரசகுழுவுக்குத் தலைமை தாங்க முடியாமலும் அமெரிக்கா குழப்பி வருகிறது. கடந்தமுறை கூட்டத்தொடர் ஆரம்பமான போது, பிளேக் கொழும்பு வந்தார். இதனால் ஜெனிவா சென்றிருந்த பிரீஸ், அவசரமாகத் திரும்பி வர நேர்ந்தது. இப்போதும் அப்படித் தான், ஜெனிவாவில் கூட்டம் நடக்கும் போது தான் – மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வருமாறு பீரிசை அழைத்துள்ளார் ஹிலாரி கிளின்ரன். 

கடந்தமாதம் இந்தக் கடிதம் கிடைத்த பின்னர் அமைச்சரவையில் இதுபற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் வொசிங்டன் சென்று ஹிலாரியை சந்திக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை பீரிஸ் வொசிங்டனுக்குச் செல்வதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அமெரிக்காவின் அனுமதி கிடைத்தால் தான் பீரிசினால் இப்போது அங்கு செல்ல முடியும். அடுத்த மாதத் தொடக்கத்தில் தான் வெளிவிவகார அமைச்சர் பீரிசை, ஹிலாரி கிளின்ரன் சந்திப்பார் என்று தெரிகிறது. முன்னர் பிளேக்கிற்கு நடந்தது இப்போது பீரிசுக்கு நடக்கிறது. இதுவும் ஒரு இராஜதந்திரம் தான்- இதனை அலைக்கழிப்பு இராஜதந்திரம் எனலாம். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இப்போது பல்வேறு வகையான இராஜதந்திர அழுத்தங்களை கொடுத்து வருகிறது. தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை இழுத்துச் செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. 

இவற்றையெல்லாம் அமெரிக்கா செய்வதற்கு காரணங்கள் பல உள்ளன. 

இவற்றில் வெளிப்படையாகக் கூறப்படுவது தான், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல். வெளிப்படையாக சொல்லாத காரணங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் முடிவுகள் அமைந்திருக்கும்.

நன்றி இன்போதமிழ் 

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment