தளபதி பால்ராஐ் அவர்களைப் பற்றி.....!

ஈழத்தமிழ்மக்களின் வீரம் செறிந்த ஆயுதவழி விடுதலைப்போராட்ட வரலாறு ’பிரபாகரன்’ என்னும் தனிமனித ஆளுமையைச் சுற்றித்தான் பதியப்படுகின்றது. தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடைய ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர், தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக, தியாகமும் தேசப்பற்றுறுதியும் கொண்ட இளைஞர்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டி வளர்த்தார். தமிழினத்தை ஒரு இரங்குதலுக்குரிய இனமாக அல்லாமல் வலுமிக்க இனமாக மாற்றினார். புதிய வகையான கெரில்லா இராணுவ அத்தியாயத்தை உருவாக்கினார்.

உலகத்தின் பலநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும், நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களையும் கொண்டு நவீனமயப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை மட்டுமன்றி, உலகின் நான்காவது வல்லரசான இந்திய இராணுவத்தையும் இலகு, கனரக ஆயுதங்களுடனும் பீரங்கிகளின் துணையுடனும் எதிர்கொண்டு பலவெற்றிகளைப் ஏன் உலகத்தின் ஆதரவின்றி, பல்வேறு தடைகளையும் அழுத்தங்களையும் மீறி தனித்து நின்று, தமது மக்களின் ஆதரவுடன் நீண்டகால ஆயுதவழிப் போராட்டத்தை கொண்டு நடாத்தியதானது தலைவரின் தன்நம்பிக்கையான தலைமைத்துவத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடாகும்.

தலைவர் தமிழ்மக்களின் சுதந்திரம் என்ற ஒரே சிந்தனைப்பாதையில் தடம்புரளாது, விடுதலைப்பாதையில் இருந்த தடைக்கற்களை தகர்த்தெறிந்து, சுபீட்சமான அரசியல் விடுதலை என்ற ஒரே இலக்கை மட்டும் நோக்கி நடந்தார். விடுதலைக்காக தேர்ந்தெடுத்த பாதையின் நியாயத்தன்மையில், தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பல்லாயிரக்காணக்கான தமிழ் இளைஞர்கள் அவர் வழி பின்தொடர்ந்தார்கள். சுதந்திர வேட்கையுடன் இணைந்த அத்தனை இளைஞர்களையும் சிறந்த போராளிகளாக்கினார். அதிலிருந்து பல தளபதிகளையும் போர்வீரர்களையும் பல்துறை ஆற்றலுள்ளவர்களையும் உருவாக்கி, மாபெரும் விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பினார்.

விடுதலைப்புலிகள் ஈட்டிய இராணுவ வெற்றிகளானது விடுதலைப்போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றது. 2002 ம் ஆண்டு  சர்வதேசத்தாலும  இலங்கை அரசாலும இராணுவச்சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இநதப பினனனியிலேயே இலங்கை அரசும் சமாதான உடன்பாட்டிற்கு வந்தது. இது விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளின்  மிகமுக்கியமான அடைவாகும். 

தமிழீழ விடுதலைப்புலிகளின்  இராணுவ வெற்றிகள் என்பது புதிய மூலோபாயத் தாக்குதல்கள், தற்துணிவான தாகக்குதல்கள், கடுமையான உழைப்புகள, அற்பணிப்புகள், தியாகங்கள் என்பவற்றின் அடித்தளத்திலிருந்தே உருவாகியது. விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகள் என்பது சாதாரணமானவையல்ல.

பல சந்தர்ப்பங்களின் எதிரியிடம் இருந்து இராணுவ உபகரணங்கள் கைப்பற்றி அவற்றை வைத்தே சண்டைகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எற்பட்டபோது அதை ஒரு தந்திரோபயாமாக கைக்கொண்டு வெற்றி பெற்றனர். இவ்வாறு பலவகையான இடர்பாடுகளுக்கிடையில் வளர்த்தெடுக்கப்பட்டது தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கமும் அதன் இராணுவ வெற்றிகளும். எனவே விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளும் தந்திரோபாயங்களும் விடுதலைக்காக ஆயுதவழி போராடும் இனங்களிற்கான ‘போரியல் இலக்கணம்’ என்றும் கூறமுடியும்.

உலகவரலாற்றுகளில் பலர் தம்முடைய தனித்துவமான செயற்பாட்டால் தமக்கான தனிமுத்திரையை பதித்துவிடுவார்கள்.  அவர்கள் அந்த வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் பாரிய பங்கையும் வகிப்பார்கள். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றையோ அன்றி முத்தாய்ப்பான சமர்க்களங்களைப் பற்றி எழுதவேண்டுமாயின் “சமர்க்களங்களின் நாயகன்” ”போர்க்கலை வல்லுனர்” ”போரியலின் குறியீடு” போன்ற சொற்தொடர்களால் விழிக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பெயரின்றி சாத்தியமாகாது. வியக்கத்தக்க இராணுவ வெற்றிகளையும் புதிய மூலோபாயத் தாக்குதல்களையும் மேற்கொண்டு, விடுதலைப்புலிகளின் இராணுவத்தை மரபுவழி இராணுவமாக மாற்றியதுடன் முன்னுதாரணமான தளபதியாக விளங்கிய, 21 ம் நூற்றாண்டின் தன்னிகரில்லாப் போர் வீரனும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ‘என்னையும் விஞ்சிய போராளி’ என வியந்த, நம்பிக்கைக்குரிய போர்த்தளபதிகளில் ஒருவருமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப்பற்றி ஒரு பதிவு செய்வது சாலச்சிறந்தது மட்டுமன்றி தமிழினம் பெருமைப்படவேண்டியதொன்றாகும்.

இந்த இடத்தில் தளபதி பால்ராஜ் அவர்கள் ஏன் சிறப்புப் பெறுகின்றார் என்ற கேள்வி எழுவது நியாயமானது. பால்ராஜ் அவர்கள் கெரில்லா அமைப்பு என்ற நிலையிலிருந்து மரபுவழி இராணுவாக மாற்றமடைந்ததன் நாயகனாக வாழ்ந்தவர். அவர் அறிமுகப்படுத்திய  தாக்குதல் முறைகளினால், மாறுபட்டதாக்குதல் உத்திகளால், போர்க்களத்தின் மத்தியில் நிற்று வழிநடாத்தும் வீரத்தலைமைத்துவத்தால், தற்துணிவாக செயற்பாட்டால், போரிட்டுக் கொண்டே கட்டளையிடும் பண்பால், ஆக்கிரமிப்பாளர்களிற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியதுடன் விடுதலைப்புலிகளின் இராணுவ வரலாற்றில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட பல வெற்றித்தாக்குதல்களின் தலைமைத் தளபதியாய் செயற்பட்டமை என்று  பலவற்றை சொல்லமுடியும். இவையே அவரை சிறப்புக்குரிய தளபதியாக முன்னிறுத்திக்காட்டியது.

விடுதலைப்புலிகளின் இராணுவத்தாக்குதலில்களில் முதலாவதாக நடைபெற்ற பல தாக்குதல்களை வழிநடாத்திய வீரத்தளபதியாய் பயணித்த தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றிய  பதிவை முடிந்தளவிற்கு  பதியலாம் என நினைக்கின்றேன்.

தொடரும்.............!

வாணன்


குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment