இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் இலங்கை விஜயத்தின் பின்னணியில்.....!

பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் திடுதிப்பென மேற்கொள்ளப்பட்ட இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயம் பெரும் பரபரப்புகளுடனேயே இங்கு முன்நகர்கின்றது.
இந்திய அரசின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றே இலங்கைக்கு வரும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசும், அதன் முதல்வர் கலைஞர் கருணாநிதியும், மத் திய அரசின் ஆளும் தலைமையுடன் சேர்ந்து இதனைத் தங்களது கூட்டணியின் உள்விடயமாக விஜயமாக மாற்றிக்கொண்டமை ஒரு முக்கிய திருப்பம்தான்.
இதனால் தமிழகத்திலும் மற்றும் புதுடில்லியிலும் மட் டுமல்லாமல், புலம் பெயர்ந்த தமிழர் வாழும் தேசங் களில் எல்லாம் கூட பெரும் அதிருப்தி அலைகள் உரு வாகியிருக்கின்றன. பல தரப்பினரும் "கருணாநிதி அன்கோ' வின் இந்தத் தனி வீட்டு முயற்சிக்கு எதிராகக் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கைத் தமிழர் விடயத்தில் குறிப்பாக இலங்கை அரசினால் வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப் பின் னால் முகாம்களில் முடக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட் டிருக்கும் சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகள் விடயத் தில் ஒட்டுமொத்த இந்திய அரசின் இந்திய தேசத்தின் ஆக்கபூர்வ நடவடிக்கையாக எடுக்கப்படக்கூடிய ஒரு நன்முயற்சியை, வாய்ப்பை, அருமையான சந்தர்ப்பத்தை, கலைஞர் சோனியா கூட்டு தமது கூட்ட ணியின் சுயலாபம் கருதி தங்களுக்கு வசதியாகப் பயன் படுத்தி தங்கள் வீட்டுக் கல்யாணமாக்கி வீணடித்து விட்டது என்ற அதிருப்திக் குரல் பல திக்குகளிலிருந்தும் எழுந்து வருகின்றது. இத்தகைய அதிருப்திக் குரலில் கண்டனத்தில் நியாயம் இருப்பதாகவே நமக்குத் தோற் றுகின்றது.
இலங்கை அரசு கூட, இந்தியாவிலிருந்து மத்திய அரசிடமிருந்து அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதி களைக் கொண்ட ஒரு நாடாளுமன்றக் குழுவே இலங்கை வரும் வருகிறது என்றே கடைசிவரை எதிர்பார்த்தது.
இந்தியத் தரப்பை இலங்கைக்கு விஜயம்செய்து நேரடி யாக விடயங்களைப் பார்க்கும்படியான அழைப்பை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஊடாகத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பிவைத்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட, அப்படி இந்தியத் தேசிய மட்டத்திலான ஒரு நாடா ளுமன்றக் குழுவையே எதிர்பார்த்தார்.
ஆனால், அது, காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியின் உள் நாட்டு அரசியல் விவகாரமாக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சில கட்சிகளின் எம்.பிக்கள் குழுவாக அதுசுருங் கும் என்பதை இலங்கை ஜனாதிபதியும் எதிர்பார்த்திருக்க வில்லை என்றே விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
"இப்படித் தமிழகத்தின் மூன்று கட்சிகளின் எம்.பிக்களை மட்டுமே கொண்ட குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ எதிர்பார்க்கவில்லை. அதனால் அக்குழுவினரைச் சந்திப்பதிலும் ஜனாதிபதி அதிக ஈடுபாடு காட்டவில்லை. சந்திக்காமல் ஒதுக்கி விடவே ஜனாதிபதி எண்ணியிருந் தார். ஆனால் புதுடில்லியும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயர்மட்டமும் எப்படியாவது இந்தக் குழு வினரைச் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுக் கும்படி ஜனா திபதி செயலகத்தை வற்புறுத்தி, வலியு றுத்தி நின்றதால் இறுதியாக நேற்றுமாலை இக்குழுவைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி இணங்கினார்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்திய எம்.பிக்கள் குழு, கிழக்கு மாகா ணத்துக்கு விஜயம் செய்யாமைக்கு அக்குழுவின் கிழக்கு விஜயம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு குழுவி னரின் விஜய நிகழ்ச்சி நிரல் மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளில் இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)ஒதுக்கப்பட் டமையே காரணம் என்று வெளியில் செய்திகள் கசிய விடப் பட்டாலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று உள்வீட்டு வட்டாரங்கள் உண்மையைப் போட்டுடைத் திருக்கின்றன.
இக்குழுவினரின் வடக்கு யாழ். விஜயத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் டக் ளஸ் தேவானந்தாவிடம் விடப்பட்ட மாதிரி, கிழக்கு மாகாண உத்தேச விஜயத்தைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்ச ரும் ஆளும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவருமான முரளி தரனிடம் (கருணாவிடம்) ஒப்படைக்கப்பட்டதாம். ஆனால் கருணாவைச் சந்திக்கவோ, உரையாடவோ தற்போதைய இந்திய எம்.பிக்களின் குழுவில் இடம்பெற்றிருந்த வர்கள் மறுத்துவிட்டனர் என்று கூறப்பட்டது. தமது அர சின் அமைச்சரும், ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சியின் உபதலைவருமான ஒருவரைச் சந்திக்க இந்திய எம்.பிக்களுக்கு விருப்பமில்லாவிட்டால், அவர்களுக் குக் கிழக்கு மாகாண விஜயமே தேவையில்லை என்று சீற்றத்துடன் குறிப்பிட்டு இலங்கை அரசின் உயர்பீடமே இக்குழுவினரின் கிழக்கு விஜயத்தை அடியோடு ரத்துச் செய்தது என்றும் கூறப்படுகின்றது.
சரி. தமது கிழக்கு விஜயத்தைப் பலி கொடுத்ததன் மூலம் கருணாவைச் சந்திப்பதில்லை என்ற தங்களின் விருப் பத்தை இந்திய எம்.பிக்கள் குழு நிலைநாட்டிவிட்டது என்று அக்குழுவைச் சார்ந்தோர் பெருமை கொள்ள முடியும்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எப்படி யும் சந்தித்தாக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து,அவ ரைச் சந்திக்கச் செல்லும் இக்குழுவினரை, தமது அரசின் அமைச்சரும், தாம் தலைவராக இருக்கும் தமது கட்சியின் உபதலைவருமான கருணா சகிதம், இந்திய எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி தமது அலரி மாளிகை இல்லத்தில் வரவேற்றால், இந்த எம்.பிக்கள் என்ன செய்வார்கள்?
நேற்றுமாலை இந்தப் பத்தி எழுதப்பட்டபோது இக் கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்பட்டிருந்தது. இப்பத்தி இன்று வாசிக்கப்படும் போது பெரும்பாலும் இந்தக் கேள்விக் கும் விடை கிடைத்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

3 கருத்துரைகள் :

  1. இழியவர்க்கும் பொன் ஆடை போர்த்திடுவார்
    இவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா
    அன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்
    என்று சொல்லி நாம் அழுவதா...

    தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா????...

    இதைவிட அந்த மூன்று லட்சம் மக்களுக்கும் விசத்தை கொடுத்து வந்திருக்கலாம் இந்த 'தேவ' தூதுவர்கள்...

    இனத்தையே அழித்தவனோடு இளித்து கொண்டிருக்கும் இந்த இழிவானவர்கள் அழிய கடவது...

    --
    -- பாக்கியராசன் சே..
    நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...

    ReplyDelete
  2. திமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..
    .
    இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.

    சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

    அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

    5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு
    முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்

    ReplyDelete
  3. இதைக் காணவா நாம் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம்? இதை காணும் பொழுது அந்த மே பதினேழாம் தேதி கொல்லப்பட்டவர்களில் ஒருவராக நாம் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது. அடப்பாவிகளா.. எப்படியடா உங்களுக்கு மனது வந்தது? நம் இனத்தை கொன்று ஒழித்தவனை பொன்னாடை அணிவித்து, அதனை பார்த்து மகிழ வேண்டும் என்று? எதற்கு இந்த பரிசு? எதற்கு இந்த மரியாதை? எம் இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்வதர்க்காகவா??

    நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த காட்சியினை காணும் பொழுது....

    கொஞ்ச நாட்கள் முன்பு கூட இந்த சிறுத்தை உருமியதே, நம் நாட்டில்... அந்த சிறுத்தை சொன்ன ஒரு வரி... ஆயுதம் ஏந்திய விடுதலை புலிகள் வரும் வரை, இந்த தமிழ் நாட்டு சிறுத்தைகள், ஆயுதம் ஏந்தாத புலிகளாக எம் இன மக்களை பாதுகாப்போம் என்று.. இன்று இலங்கையில் அதே சிறுத்தை ஒரு சிறு எலி போல் அமர்ந்து இருப்பதன் பொருள் என்ன? எந்த ராஜபக்க்ஷேவை கொடுங்கோலன், ஹிட்லர் என்று இந்த சிறுத்தை சொன்னதோ, அதே ராஜபக்க்ஷேவுடன் சிரித்து, கை கட்டி அமர்ந்து இருப்பதன் நோக்கம் என்ன?

    எங்கு சென்றது அதன் வீரம்? அதன் வேகம்? அங்கு சென்ற பத்து தலையாட்டிகளில் ஒன்று உண்மையை சொல்லும் என்று அல்லவா நாங்கள் நினைத்து கொண்டு இருந்தோம். அதுவும் இப்படி ஆகி விட்டதே... எம் இனத்தில் ஒரே ஒரு மானமுள்ள, வீரமுள்ள தலைவன் அண்ணன் பிரபாகரன் மட்டும்தானா??

    வேதனை மற்றும் கோபத்துடன்,
    சதீஷ்மூர்த்தி

    ReplyDelete