தமிழ் வாலிபன் சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்படும் வீடியோ
கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் வாலிபனொருவன் மூன்று சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்பட்ட காணொளி(வீடியோ) வெளிவந்துள்ளது. சிங்கள பொதுமக்கள் இருவரும் சிங்கள பொலீஸ்காரர் ஒருவரும் கடலில் இறங்கி அவரை தாக்கியுள்ளனர். கடலலைகளிற்கு மத்தியில் தத்தளித்த தமிழ் வாலிபன் தம்மைத்தாக்க வேண்டாமென கும்பிட்டுக கேட்டுக்கொண்டபோதும் அவரை கரைக்கு வரவிடாமல் தடிகளால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலைச் சமாளிக்முடியாத இளைஞர் கடலலைகளிற்கு மத்தியில் பின்னோக்கிச் சென்ற போது அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு,மூழ்கி இறந்துள்ளார்.
கொழும்பு மாநகரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஐந்து நிமிட நேர நடை தூரத்தில் பம்பலப்பிட்டி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. பல சிங்களப் பொதுமக்களும் சில சிங்களப்பொலிசாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவே இத்தமிழ் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
கண்கண்ட சாட்சியின்படி குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி கரையோர பிரதான வீதியில் நின்று வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.
இதன் போது வீதியில் சென்ற இராணுவ வாகனத்திற்கும் அவர் கல்லெறிந்துள்ளார். இந்தநிலையில் இராணுவ வாகனம் நிறுத்தப்படவே, அவர்,அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.
இதன்போது, புகையிரதம் ஒன்று வரவே, அதற்கும் அவர் கல்லெறிந்துள்ளார்.உடனடியாக புகையிரம் நிறுத்தப்பட்டபோது இளைஞர் கடலில் குதித்துள்ளார்
இந்த இளைஞரைத் தாக்கிய பொலீஸ் உத்தியோகத்தரை விசேட பொலீஸ் குழு கைது செய்து விசாரிக்கின்றது. இலங்கைச்சட்டதிட்டத்திற்கமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைத்தீவில் வாழும் பிரஜைகளைப் பாதுகாப்பதில் சட்டமும் பொலீசும் சரியாக செயற்படும் என்றெல்லாம் கூறும் சிங்களத்தின் வழமையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர் ஒரு மனநோயாளி என சொல்லப்படுகின்றது. நீதித்தறையும் சட்டமும் உள்ள ஐனநாயக நாட்டில் வாகனத்திற்கும் புகையிரதத்திற்கும் கல்லெறிந்த ஒருவரை கைதுசெய்யாமல் காவல்துறையானது பொதுமக்களின் உதவியுடன் அடித்துக்கொன்றுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் கும்பிட்டு மன்றாட மன்றாட தடியால் அடித்து தாக்கப்பட்டு , கடலலை இழுத்துச்செல்லக்கூடிய ஆழ்கடல்பக்கம் விரட்ட்பட்டுள்ளார். சம்பவத்தை தலைமையேற்று நடத்திய பொலீஸ்காரனுக்கு தெரியாதா கடலலை உள் இழுக்கும் என்று?. நோயாளிக்குக் கூட இலங்கைத்தீவின் சட்டம் பாதுகாப்புக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
இப்படிப்பட்ட பல சம்பவங்களை உதாரணமாகக் கூறமுடியும். செம்மணியில் 600க்கு மேற்பட்டவர்களை கொன்று புதைத்துவிட்டு சுயாதீன விசாரணைக் குழுக்களை அமைத்து நீதியான விசாரணை என்ற பெயரில் நடந்த விசாரணை என்னவாயிற்று. பிந்துனுவேவ நலன்புரிநிலையத்தில் பொலீசாரின் பாதுக்காப்பில் இருந்த தமிழ் இளைஞர்களை பொலீசாரின் ஆசிகளுடன் கொன்றொழித்த சம்பவத்திற்கான விசாரணைக்கு என்ன நடந்தது. மூதூரில் கொல்லப்பட்ட 'அக்சன் பாம்' தொண்டு நிறுவன தமிழ் ஊழியர்களிற்கான விசாரணைக்கு என்ன நடந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காணொளி(வீடியோ) ஆவணம் வெளிவந்து மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கான சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் கோரமுகம் மீண்டும் புலப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண பொலீஸ் உத்தியோகத்தரால், சிங்களப்பொதுமக்களின் உதவிகொண்டு, சக பொலீஸ் உத்தியோகத்தர்களுடன் சிங்களபொதுமக்களும் வேடிக்கைபார்க்க தமிழ் பொதுமகனை அடித்துக்கொல்லலாம் என்பதானது, இலங்கைச்சட்டம் தமிழ் மக்களிற்கு எத்தைகைய பாதுகாப்பை வழங்குகின்றது என்பதையே உணர்த்தி நிற்கின்றது.
சிங்கள சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல 1958 ம் ஆண்டிலிருந்து 1977,1981, 1983 கலவரங்கள் உட்பட பல தசாப்தங்களாக தமிழ்மக்களைக் கொலைசெய்வதும் அதற்கு சட்டம் தனது பாதுகாப்பை வழங்குவதும் சாதாரணவிடயமே.
அகதிமுகாம்களில் இருந்த மக்கள் சமைப்பதற்கு விறகு எடுக்கச்சென்ற போது சுட்டுக்கொலைசெய்ய அனுமதிக்கப்பட்ட இராணுவம் போல கொழும்பின் ஆட்சிஅதிகார மையத்தில் நடந்த இச்சம்பவமானது சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனமான முகத்தை மீள வெளிப்படுத்தியுள்ளதுடன் தமிழனுக்கு இலங்கைத்தீவில் எங்கும் பாதுகாப்பில்லை என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது.
அதேவேளை தமிழ் மக்களிற்கு சுதந்திரவிடுதலை ஒன்றே இலங்கைத்தீவில் பாதுகாப்பானது அல்லாவிடின் நாய்போல் அடித்துக்கொல்லப்படுவாய் தமிழா! என்ற முக்கிய செய்தி ஒன்றையும் இச்சம்பம் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
இது பிழை. அந்த மனநிலை பிறழ்ந்த தமிழ் வாலிபர் பாதையில் போகும் வரும் வாகனங்களுக்கு கல் எறிந்துள்ளார். இதன்பின்னே இச்சம்பவம் நடந்துள்ளது. இதை தமிழர் மீதான தாக்குதலாக கொள்ளமுடியாது..
ReplyDelete//இது பிழை. அந்த மனநிலை பிறழ்ந்த தமிழ் வாலிபர் பாதையில் போகும் வரும் வாகனங்களுக்கு கல் எறிந்துள்ளார். இதன்பின்னே இச்சம்பவம் நடந்துள்ளது. இதை தமிழர் மீதான தாக்குதலாக கொள்ளமுடியாது..//
ReplyDeleteஅப்படியானால் மனநிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் அவரை அடித்து கொல்லலாம். அப்படித்தனே சொல்ல வருகிறீர்கள். இதுவா சுதந்திரம்.???
வணக்கம் ரகீப்
ReplyDeleteமனநிலை குன்றியவனோ இல்லையோ
கல்லெறிந்தற்காக தமிழனை தாக்கி கொல்லப்படுவது என்பது
சாதாரண சட்டதிட்டத்திற்குற்பட்டதா?
மனநிலைகுன்றியவனை கையாழும்முறை இதுதானா?
மனநிலை குன்றியவன் கும்பிட்டு மன்றாடுமளவிற்கு சம்பவம் தெளிவாக பதிவாகியிருக்கின்றது
சிங்களவானாயிருந்தால் இப்படிச்செய்திருப்பார்களா?
இதுதானா நோயாளியைக் கையாழும் நடைமுறை
நன்றி கருத்துக்கும் வருகைககும்
அதுகாட்டுமிராண்டித்தனமான செயல். உங்கள் பதிவில் தமிழர் என்பதால் தான் கொல்லப்பட்டார் என்ற தொனொயை மாத்திரமே பிழை என்கிறேன்..
ReplyDeleteநிச்சயமாக ரகீப் தமிழன் என்பதால் தான் தமிழ் மொழி பேசியவன் என்பதால் தான் தாக்கப்பட்டிருக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு உயிருக்கு மன்றாடும் போது 'மகே அம்மே' என்றா கத்தியிருப்பான்
ReplyDeleteநிச்சயமாக மனநோய் குன்றியவனோ இல்லையோ, 'தமிழில் அம்மா என்னை காப்பாற்ற யாருமில்லையா என்றுதானே' கத்தியிருப்பான்
சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக உள்ள நாட்டில் பொலிஸ்காரனுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லைத்தானே
இப்படிப்பட்ட மொழி புரியாத காரணத்தினால் எத்தனை தமிழன் பாதிக்கப்பட்டான் என்பத வெளிப்படை
ஆனால் மகே அம்மேக்கும் அம்மாவிற்கும் வித்தியாசம் தெரியாதா அந்த காக்கிச்சட்டைக்காரனுக்கென்றா சொல்லவருகிறீர்கள்
தலை நகரிலே இந்த கொடுமை என்றால் அங்கு வதை முகாமுக்குள் என்னவென்ன எல்லாம் செய்வாங்க காட்டுமிராண்டிகள் ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete