பார் தமிழா பார்
சுட்டுக்கொன்ற காணொளி காட்சியின்
இரத்தம் காய்வதற்கு முன்பே!
அதிகாரமையமாம் கொழும்பில்
சிங்களன் குழுமியிருந்து
கிரிக்கெற் மட்டையடிப்பை
வேடிக்கைபார்த்து மகிழ்வதைப்போல் மகிழ
கும்பிடக்கும்பிட நாய்போல் - தமிழனை
கட்டையால் அடித்துக் கொல்கின்றான் - சிங்களன்
பார் தமிழா பார்.
பார் தமிழா பார்
அடித்துக்கொன்றவன்
சட்டத்தைக் காப்பாற்றும்
காக்கிச்சட்டைக்காரன்,
உதவிக்கு!
சாத்வீகத்தை போதித்த
புத்தரின் வாரிசுகளான
சிங்களப் பொதுமக்கள்
உனது உயிரின் மதிப்பைபாத்தாயா?
விலையைப்பார்த்தாயா?
சிங்களனின் விளையாட்டுப்பொருளாகி
விட்டதா? ஈழத்தமிழனின் உயிர்
பார்தமிழா பார்.
பார் தமிழா பார்
தீர்வைப்பற்றி பேசிய சர்வதேசம்
நகரமுடியாமல் வாய்பொத்தி நிற்கின்றது
பக்கத்திலிருக்கும் இந்தியாவோ
தனது பிராந்திய அரசியல் நலனுக்காக
தமிழனை பகடைக்காயாக்கிவிட்டது.
துரோகித்தமிழன் வாழ்வரசியல் அடிமையாக
சிங்களனிடம் நக்கி! தமிழனை
தென்சிங்களத்திற்கு அரசியல் அடிமையாக்க முனைகின்றான்
உனக்கிருக்கும் வழிதான் என்ன
இனி வெள்ளையரும் வரமாட்டார்
பக்கத்துவீட்டுக்காரனும்
வாய்பொத்தி மௌனிப்பான்
உனது வழியை நீ தான் பார்க்கவேண்டும்
பார் தமிழா பார் நடப்பதை காணொளியிலும்பார்
உனக்கு நடப்பது நாளை
உன்சந்ததிக்கும் நடக்குமென சொல்லி
உன்சந்ததிக்கும் காணொளியை போட்டுக் காட்டி
பார் தமிழா பார்
இம்மியளவும் ரோசமில்லை
-
[image: உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால்
தாக்குதல் - பத்திரிகைகளும் எரிப்பு]
இன்று உதயன் பத்திரிகை
விநியோக ஊழியன்
தாக்கப்...
4 months ago
0 கருத்துரைகள்:
Post a Comment