மன்னார் மாவட்டம் நெற்செய்கை மீன்பிடி, முத்துக்குளித்தல் போன்று பல பொருளாதார வாய்ப்புக்களை கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் வன்முறை காரணமாக விவசாயிகள் பாதிககப்பட்டு வந்தார்கள். எடிபல இராணுவ நடவடிக்கையின் பின் விளைநிலங்களை ஊடறுத்து இராணுவவேலி அமைக்கப்பட்டதால் பல ஏக்கர் விளைநிலங்கள் பயன்படுத்தப்படாமலிருந்தது.மக்கள் மடுத்தேவாலயத்திற்கும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் இடம்பொயர்ந்திருந்தனர். ஐந்து வருடங்களிற்கு மேலாக அகதி வாழ்க்கையை அனுபவித்துவிட்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின் குறிப்பிட்ட இடங்களிற்கு வந்து மீள குடியேறினர்.
நான்காம் கட்ட ஈழப்போர் ஆரபம்பிக்கப்பட்ட பி;ன்னர் மீளவும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குட்பட்டதால் மாந்தைமேற்குப் பிரதேசசெயலர் பிரிவைச்சேர்;ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அதிலொரு தொகுதிமக்கள் பெரியமடுவில் அமைந்தள்ள 30 வீட்டுத்திட்ட கிராமத்தில் தொண்டர் நிறுவனங்களின் பராமரிப்பில் தற்காலிக கொட்டில்களை அமைந்து தங்கியிருந்தனர்.
நண்பகல் வேளை தங்களிற்கான உணவுகளை சமைத்து கொண்டிருந்தபோது 12 மணியளவில் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணை இவர்களது இடம்பெயர்முகாமில் வீழ்ந்து வெடித்ததில் 03 கொல்லப்ட்டனர். 09 காயமடைந்தனர்.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தால் பராமரிக்கப்பட்ட இந்தமுகாம் மீது, தமிழ்மக்களை அழிக்கும் நோக்குடன் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் இச்சம்பவத்தில் தற்காலிக கொட்டகையில் இருந்த நிறைமாதக் கர்ப்பிணியான செல்வநாதன் பரிமளா (வயது 19), அவரின் சகோதரி தங்கவேல் கௌசல்யா (வயது 09), இவர்களின் தந்தை சோமசுந்தரம் ஜெயபாலசிங்கம் (வயது 61) ஆகியோர் உடல்சிதறிப் பலியானதுடன் பரிமளா, கௌசல்யா ஆகியோரின் தாயார் ஜெயபாலசிங்கம் திரவியம் (வயது 55) இவரது பேரப்பிள்ளை செல்வநாதன் கோகிலன் (வயது 03), பிரான்சிஸ் சுதர்சன் (வயது 15), கறுப்பையா லோகநாதன் (வயது 45), இவரின் மனைவி சிவபாக்கியவதி (வயது 45), இவர்களின் மகள் உமாதேவி (வயது 13), வசந்தன் றெபேக்கா (வயது 05), சுப்பையா மோகன்ராஜ் (வயது 29), பா.சுப்பிரமணியம் (வயது 28) ஆகியோர் படுகாயமடைந்து முழங்காவில், கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக எடுத்து செல்லப்பட்டார்கள். இதில் குறிப்பாக நிறைமாதக் கர்ப்பிணியான பரிமளாவின் வயிற்றுப்பகுதியை செல்துண்டுகள் வெட்டி சென்றதனால் வயிற்றிலிருந்த இரணைச்சிசுக்களும் வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்தது
இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல அச்சம் காரணமாக மீண்டும அவ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உயிரைப்பாதுகாக்க தொடர்நது பல இடப்பெயர்வுகளை,அழிவுகளைசசந்தித்து தற்போது வவுனியா சிறையகதிமுகாமின் முட்கம்பிவேலிக்குள் சொந்த இடங்களிற்கு செல்லும் காலத்திற்காக காத்திருக்கின்றார்கள்.
0 கருத்துரைகள் :
Post a Comment