துரித சிங்களமயமாக்கல் திட்டத்தில் பறிபோகும் திருமலை

இலங்கைத்தீவின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் இயற்கைத்துறை முகத்தையும் முதலீட்டு வாய்ப்புகளுள்ள, தமிழர்தாயகத்தின் பிரதான மாவட்டமாக இருப்பது திருகோணமலையாகும்.

தென்னிலங்கைச் சிங்கள கொள்கை வகுப்பாளர்களின் திட்டத்தில் தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைக்கும் சிந்தனையின் வெளிப்பாடாக மணலாறு (வெலியோய)பகுதியில் சிலோன் தியட்டர், கென்பாம்,டொலர்பாம் முந்திரிகைக்களம் மண்கிண்டி(ஐனகபுர)மலை என விஸ்தரிக்கப்பட்ட குடியேற்றங்களினூடாக வடக்கு கிழக்கை துண்டித்து தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கமுற்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராடடம் வலுவாகவிருந்த காலத்தல் இக்குடியேற்றச்சிந்தனைகள் பெரும் முடக்கத்தை கண்டிருந்தது. தற்போது திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்கு சொந்தமான காணிகளையும் அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில், அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் குறிப்பாக திருகோணமலை முதலிக்குளம்(மொறவேவ), வேப்பங்குளம், தம்பலகாமம், பாலமோட்டை, பத்தினிபுரம், குச்சவெளி பிரதேசசபைக்குட்பட்ட இறக்கக்கண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தச் சட்டவிரோத குடியேற்றம் நடைபெறுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்படி இடங்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்குச் சொந்தமானவை. அவர்களை விரட்டிவிட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றது. சம்பூரிலிருந்து பூர்வீக குடிகளை இடம்பெயர செய்தவிட்டு அந்த இடம் அனல்மின்நிலையம் அமைக்க் ஒதுக்கப்பட்டதாக கூறி, தற்போது உயர்பாதுகாப்பு வலையங்கள் ஆக்கப்பட்ட அப்பிரதேசத்தின்; இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்து வாழ முடியாமல் உள்ளனர். மற்றும் வாகரைப்பிரதேசத்தில் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு சொந்தமாக 50 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளிருக்கின்றன என்ற செய்திகள் சில மாதங்களிற்கு முன் வெளிவந்திருந்ததன் பின்னனியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நகர்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது திருகோணமலையின் ஆரம்பக்குடியேற்றம் மணலாறு(வெலியோய), அல்லைக்கந்தளாய்திட்டம், மூதூர், வாகரை என திருகோணமலை மாவட்டம் சிங்களக்குடியோற்றத்திட்டங்களினால் வல்வளை(சுற்றி)க்கப்பட்டது. திருமலையின் மையப்பகுதியில் உள்ள துறைமுகத்தை சுற்றி பொருளாதார கைத்தொழில் வலையங்களை உருவாக்கி சிங்களமக்களை கொண்ட குடியேற்றங்கான 4ம் கட்டை, சீனன்குடா, தானியகம போன்ற பலகுடியேற்ற கிராமங்களை அமைத்துவிட்டு நோக்கிய குடியேற்றத்திட்டங்களின் முனைப்பையே இது சுட்டிக்காட்டி நி;றகின்றது. தற்போது எஞ்சியிருக்கும் பகுதிகளிலும் குடியேற்றங்கள் துரிதப்படுத்தப்டடுகின்றன. முழுமையாக மாவட்டத்தை காவுகொள்ளும் நோக்கில் கிளைவிட்டு பரவலடையத்தொடங்கியுள்ளது.

சட்டம் பெரும்பான்மையினருக்கு சார்பாகவும் சிறுபான்மையினருக்கு வேறுவிதமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி, நன்கு திட்டமிடப்பட்டு நகர்த்தப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள் உடன் நிறுத்தப்படாவிட்டால் சிறுபான்மை இனமக்களைத் தொடர்ந்தும் அங்கிருந்து விரட்ட பெரும்பான்மையினரின் முயற்சி மேலோங்கும். குறிப்பாக 15000 ஏக்கர் காணி காந்தளாய் பிரதேசத்தில அரசாங்கத்தின் அமைச்சர்கள் துணைகொண்டு மாவட்டத்தை சாராத சிங்கள முதலீட்டாளருக்கு கிழக்கு மாகாணசபையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மாவட்டத்தின் சொந்தமக்களிற்கு 20 'பேச்' காணயியைக்கூட வழங்கமுடியாத அதிகாரமே கிழக்கு மாகாணசபை கொண்டுள்ளது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான முயற்சிகளாக தற்போது முனைப்புப்படுத்தும் சிலவிடயங்களானது
வடக்கு கிழக்கின் தமிழரின் பாரம்பரியபூமி என்ன எண்ணக்கருத்தை சிதைவடைய செய்ய திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மற்றும் வன்னிப்பகுதியில் சிங்களக்குடியேற்றங்களை நிறுவுதல்.

தமிழ்மக்களை அவர்களின் பாராம்பரிய பிரதேசங்களிலிருந்து பரவலடையடைய செய்வதனுடாக பாரம்பரியம் என்ற கருத்தை பலவீனமடையச்செய்தல் மற்றும் நாட்டைவிட்டு வெளியேற ஊக்குவித்ததல்.

குடாநாட்டில் 25000க்கு மேற்பட்ட சிங்களவர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் வரலாற்றுப்பொய்யை அண்மையில் சிங்கள கடும்போக்கு தேசியவாதிகள் கூறிவருவதானது வடக்கு நோக்கிய குடியேற்றச்சிந்தனையின் உள்ளார்ந்த வெளிப்பாடானது தமிழ்தேசியத்தை சிதைப்பதான சிங்களத்தின் கபடசிந்தனைகளில் ஒன்றாகவே பார்க்கவேண்டும்
இதனூடாக வடக்கு கிழக்கின் சுயநிர்ணயக்கோட்பாட்டு கேள்வியை அர்த்தமற்றதாக்கும் செயற்பாட்டின் அங்கங்களிவை என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும.

தற்போதிருக்கும் ஓரேவழி சட்டரீதியாகவும் ஐனநாயக ரீதியாகவும் ஓன்றினைந்து போராட்டங்களை முன்னெடுப்பதாகும். இச்சந்தர்ப்பங்களில் காத்திரமான செயற்பாடுகளை தீவிரப்படுத்தாமல் விட்டால் கிழக்கைச்சிதைத்த சிங்களம் குறுகிய காலத்தில் வடக்கிலும் மேற்கொள்ளவிருக்கும் தாயகச்சிதைவை எதிர்கொள்ள வேண்டிவரும். தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தி நிற்கும் பாரம்பரியபூமி என்றும் எண்ணக்கருச்சிதைவை தடுத்துநிறுத்தும் போராட்டங்களையும் சட்டநடவடிக்கைகளையும முனைப்போடு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. பறிபோகும் திருமலை!

    திருமகள்

    சென்ற ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நலன்புரிச் சங்கம் நடத்திய திருமலை இரவு 2010 நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பொதுவாக இப்படியான ஒன்று கூடல்களுக்குப் போவதை நான் தவிர்த்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் போனதற்கு தக்க காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப் படும் நிதி சாம்பல் தீவு மல்லிகைத் தீவு இரண்டிலும் இயங்கும் ஆதரவற்ற சிறார் இல்லங்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இல்லங்களில் 75 குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள். 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பெற்றார் உற்றார் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி, மருத்துவம் வழங்கப்படுகிறது. சாம்பல்தீவு இல்லம் 2005 ஆம் ஆண்டு 40,000 டொலர் செலவில் கட்டப்பட்டது. இந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற மாதம் 3,000 டொலர் தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை இங்குள்ள திருமலையை வாழ்விடமாகக் கொண்டவர்களும் ஏனைய புரவலர்களும் தலைக்கு மாதம் நூறு வெள்ளிகள் கொடுத்து உதவுகிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறத்தில் திருகோணமலையில் எஞ்சியுள்ள தமிழ் ஊர்களை கட்டுக்கரையற்ற சிங்களக் குடியேற்றங்கள் விழுங்கி வருகின்றன. ஏற்கனவே பதவியா (பதவிசிறிபுர) குமரேசன் கடவை (கோமரங்கடவல) முதலிக்குளம் (மொறவேவா) தம்பலகாமம் ஆகிய செயலகப் பிரிவுகள் முழுமையாக சிங்களப் பகுதிகளாக மாறிவிட்டது. திருகோணமலை வடக்கில் உள்ள தென்னமரவடி, புல்மோட்டை, குச்சவெளி போன்ற கரையோர ஊர்கள் சிங்களக் குடியேற்றத்துக்கு இரையாகி வருகின்றன. இதே போன்று திருகோணமலை மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் உள்ள ஈச்சிலம்பற்றை, பூமரத்தடிச்சேனை, வெருகல், கிளிவெட்டி, இருதயபுரம், பருத்தித்திடல், பாலத்தடிச்சேனை, பாரதிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 2007 ஆம் ஆண்டு போர் காரணமாகத் தமி்ழ்மக்கள் வேறு மாவட்டங்களுக்கும் புலத்துக்கும் இடம்பெயர்ந்தார்கள். இப்போது இங்கு மீள்குடியேற அனுமதி இருந்தும் 90 விழுக்காட்டினர் மீள்குடியேறவில்லை. இதனைச் சாட்டாக வைத்து முஸ்லிம்களும் சிங்களவர்களும் இந்த ஊர்களில் குடியேறி வருகிறார்கள். கிளிவெட்டியில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் 3219 தமிழர்கள் இருந்தார்கள். இப்போது 15 குடும்பங்கள் மட்டும் அங்கு மீள்குடியேறியுள்ளன.

    கிழக்கில் வெள்ளம் தலைக்கு மேல் என்றால் வடக்கிலும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகள் வேண்டாம் எங்களை நிம்மதியாக இருக்கவிட்டால் போதும் என்று சொன்ன யாழ்ப்பாணத்தாரை இப்போது சிங்கம் பிடித்துத் தின்னத் தொடங்கிவிட்டது! மணியந்தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களை இராணுவம் துரத்திவிட்டு அங்கு சிங்களவர்களை சென்ற வாரம் குடியேற்றியுள்ளது.

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழக்கம் இட்டால் மட்டும் போதுமா? மண்பறி போனபின்னர் தமிழீழத்தை எங்கே உருவாக்குகிறது? நா.க.த. அரசில் அமைச்ர் பதவிகளுக்கு குடுமிச் சண்டை பிடிப்பவர்களும் அதன் யாப்பு பன்னாட்டு சட்ட நியமங்களுக்கு மாறானது என்று மொட்டையில் மயிர் பிடுங்குபவர்களும் தாயகத்தில் எமது இருப்புப் பறிபோவதையிட்டு கிஞ்சித்தும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை!

    ReplyDelete