வன்னியில் நலன்புரி மையங்களில் முடக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளையும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கும் தனது எதேச்சாதிகாரத்தை நீடிப் பதற்காக ஏதோவெல்லாம் செய்கின்றது கொழும்பு அதிகார மையம்.
அத்தகைய நோக்கில் இப்போது கிளப்பிவிடப்பட்டுள்ள பீதியே வதந்தியே அரசுத் தரப்புக்கு எதிராக படைத்தரப்பு முறுகி, அந்த மோதல் முற்றி, பெரும் முரண்பாடாக வெடித்து, விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடப் போகின்றது எனக் கொழும்பில் இருந்து பரப்பப்படும் கதைகளாகும்.
இத்தகைய "கயிறு"களை அவிழ்த்து விடுவதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த எத்தனிக்கின்றது கொழும்பு.
வன்னியில் அகதிகளை இப்படி லட்சக்கணக்கில் பல மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாத கொட்ட கைக்குள் தடுத்துவைத்திருக்கின்ற கொடூரத்துக்கு எதிராக சர்வதேச அபிப்பிராயமும் கண்டனமும் பீறிட்டு வருகின் றன. இதனால் உலக சமூகத்திடம் இருந்து கிளம்பும் அழுத் தங்களையும், நெருக்கடிகளையும் சமாளித்துத் திசைதிருப் புவதற்காகவே இலங்கை இராணுவம் பற்றிய பூச்சாண்டி காட்டப்படுகின்றது.
இப்படிக் கொழும்பு காட்டும் பூச்சாண்டி விளையாட்டு புதுடில்லி அதிகார வர்க்கத்திடம் நன்கு எடுபடுகின்றது. இங்கு இராணுவச் சதிக்கு ஆபத்து உள்ளது என்ற கொழும் பின் பருப்பு புதுடில்லியிடம் நன்கு அவிவதுதான் வேதனை யான விடயமாகும்.
ஏற்கனவே, தடுப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கும் வன்னி அகதிகளைப் பார்வையிடுவதற்காக கொழும்புக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப் பினர்கள் குழுவின் முக்கிய பிரதிநிதி ஒருவர், தாம் மேற்படி இராணுவச் சதிக்கு வாய்ப்பு என்ற கயிறை நன்கு விழுங்கிக் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படையாகவே போட்டு டைத்துச் சென்றிருக்கின்றார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மேற்படி இந்திய எம்.பிக்களின் குழுவுக்கும் இடையே கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி இந் திய எம்.பி தாம் இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் இருக்கின் றார் என்பதை பிரதிபலித்திருக்கின்றார்.
"வன்னி அகதிகள் மீள் குடியமர்த்தப்படுவது புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வழி செய்யும் என இலங்கை இராணுவத்தினர் கருதுகின்றனர். அதனால் மீள் குடியேற் றத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். அதைமீறி இலங்கை ஜனாதிபதி இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கு நட வடிக்கை எடுப்பாராயின், இராணுவத்தினர் ஜனாதிபதிக்கு எதிராகத் திரும்பவும் தயங்க மாட்டார்கள். அத்தகைய நிலை யில் இராணுவத்தினருக்கு நேரடியாக சீனாவின் ஆதரவு கிட்டவும் வாய்ப்புண்டு. அப்படி நேர்ந்தால் அது இந்தியா வுக்கு ஆபத்தாகி விபரீதங்களை ஏற்படுத்தலாம். ஆகவே தான், இந்த அகதிகளை அவசரப்பட்டு மீள்குடியேற்றுங்கள் என்று இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதைத்தள்ளிப் போடுங்கள் என்று கோருகிறோம்"" இப்படி இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருகாமான மூத்த அரசியல்வாதி ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்துடன் கதை முடிந்துவிடவில்லை. இலங்கைக்கு வந்த இந்திய எம்.பிக்கள் குழு தமிழகம் திரும்பியதும், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் தமது இலங்கை விஜ யம் குறித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. வன்னி அகதி முகாம்களில் உள்ளவர்களில் 58 ஆயிரம் பேரை அடுத்த இரு வாரங்களுக்கு முன் தாம் விடுவிப்பார் என இலங்கை ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்தார் என்றும் கூட அந்த அறிக்கையில் தமிழக எம்.பிக்கள் தெரிவித்திருந்தனர். அப்படி 58 ஆயிரம் பேரை அவர்கள் அவசரமாக விடுவிப் பதற்கு இலங்கை ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்ற செய்திக்குத் தமிழகத்திலும் இந்தியாவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவ் விடயத்தில் கொழும்பு "கப்சிப்" பெரிதாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. இந்த அகதிகளை விடுவிக்கும் எண்ணம் கொழும்புக்கு உண் மையாக இருந்தால் அல்லவா அது இத்தகைய அறிவுப் புக்கள் இந்தியாவில் வெளியானபோது அது குறித்து அலட் டிக் கொள்வதற்கு..... ஆயினும், உரிய காலம் இரண்டு வாரங் கள் முடியும்போது எங்கே குறைந்தபட்சம் 58 ஆயி ரம் அகதி களையாவது விடுவித்தாயிற்றா என்ற சிக்கல் இந்தி யாவி லிருந்து பூதாகரமாக கிளம்பும் என்பது கொழும்புக்குத் தெரியும்.
அதைச் சமாளிப்பதற்காகவே இப்போது கொழும்பு அதிகார மட்டத்தில் இருந்து "இங்கு இராணுவச் சதிப் புரட் சிக்கு வாய்ப்புண்டு" என்ற சாரப்பட கட்டுக்கதைக் அவிழ்த்து விடப்படுகின்றன எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
"இராணுவம் படைத்தரப்பு அரசுத் தலைமையுடன் முறுகிநிற்கும் இந்தச் சமயத்தில், இராணுவத்துக்கு அறவே பிடிக்காத அகதிகளை மீள்குடியேற்றம் செய்யும் நோக் குடன் அவர்களை விடுப்பது என்ற கடினமான பணியை நிறைவேற்றும் படி இலங்கை அரசுத் தரப்பை வற்புறுத்தா தீர்கள் அப்படிச் செய்வது கொழும்பு அரசுக்கு எதிராகப் படைத்தரப்பு திரும்புவதற்கே வழிசெய்யும்". என்ற சாரப் பட்ட செய்தியே புதுடில்லிக்கும், அகதிகள் மீள்குடியேற் றத்தை வற்புறுத்தும் ஏனைய உலகத் தரப்புகளுக்கும் வழங் கப்படுவதாகத் தெரிகின்றது. இவ் வாரத்திலும் இத்தகைய பரபரப்புத் தகவல் ஒன்று திடீரென கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அறியவந்தது.
காட்டில் இருந்து "புலி வருகிறது", "புலி வருகிறது" என அடிக்கடி பொய் சொன்னால், ஒருநாள் உண்மையாக அப்படிப் புலிவரும்போது அதுபற்றிய அறிவிப்பை வழமை போல மக்கள் நம்பமாட்டார்கள். காப்பாற்ற யாருமே வரமாட்டார்கள். அதுபோலவே அரசுத்தலைமைக்கெதிராகப் படைத் தலைமை திரும்புகின்றது என்ற கட்டுக்கதையை இப்படி அரசியல் இலக்குளை எட்டுவதற்காக அடிக்கடி கொழும்பு கட்டவிழ்த்து விடுமானால் ஒருநாள் உண்மையாக நிலைமை மாறுமாகின் அரசுத் தலைமையைக் காப்பாற்ற யாரும் உதவிக்கு சரியான சமயத்தில் வரமாட்டார்கள் என்பதுதான் நிலைமையாகிவிடும்.
சம்பந்தப்பட்டோருக்கு இது புரிந்தால் சரி....
நன்றி : யாழ் உதயன் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment