கைவேலிப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம்

சிங்கள அரசினால் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்கள் மீது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளில், சிறிலாங்காவின் விமானப்படை பெரும் பங்கினை ஆற்றியுள்ளது. போர் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, 2002 ஆம் ஆண்டு உருவான போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலத்திலும் சிறிலங்கா விமானப்படையின் கீபிர் விமானங்கள் தமிழ் மக்களை இலக்கு வைத்து தாக்கி வந்தன. இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக, 16.10.2006 அன்று கைவேலியில் நடந்தேறியது ஒரு படுகொலைச் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது கைவேலி எனும் கிராமம், 16.10.2006 அன்று வழமைபோல கலகலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவேளை, மாலை 5.15 மணியளவில் சிறிலங்கா விமானப்படையின் நான்கு கிபிர் விமானங்கள் திடீரென வட்டமிட்டுக் குண்டுகளைப் வீசின. வீட்டின் மீது விழுந்து சிதறிய குண்டுகளில் நான்கு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் யூட்கிறிஸ்ரின் டன்சிகா என்று ஒரு வயது பெண் குழந்தை, சிவகுமார் தனுசிகா, தவராஜா துசாந்தினி ஆகிய பதின்நான்கு வயது சிறுமிகள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவராசா இந்திரா என்ற நாற்பத்தியிரண்டு வயது குடும்பப் பெண் காயமடைந்து நான்கு நாட்களின் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட பத்துப் பொதுமக்கள் காயமடைந்தார்கள்.

இச்சம்பவத்தினை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்கள். ஆனால் வழமைபோல அப்பாவிமக்கள் படுகொலைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் யாராலும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலாங்கா விமானப்படையினரின் பொதுமக்கள் மீதான இலக்குகள் தொடர்ந்து சென்றது.

இதேவேளை, 2006.10.16 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களில் மூன்று தமிழர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் மார்க்கண்டு மகேந்திரன் (36) என்பவர் கிராம சேவையாளர் ஆவார்.

இவற்றைவிட, இதே தினம் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் கட்டிட ஒப்பந்தகாரார் ஆனா ரகிம் என்பவர் கொல்லப்படார்.

அன்றைய தினம் அநியாயமாகக் கொல்லப்பட்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவோம்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் பின்னுட்டலில் சேர்ப்பதுடன் தங்களுக்கு தெரிந்த சம்பவங்களினையும் சேர்த்துக்கொள்ளவும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. Muslim trader shot dead in Akkaraippattu
    A 35-year-old Muslim video store owner was shot by two unidentified gun men riding in a motorbike Sunday night 7:30p.m. at his business located on Main Street in Akkaraippattu. The gunmen used a pistol, and fled the scene after the shooting, local sources said.

    The victim identified as M.Uwaiz, a resident of First Division, Akkaraippattu, succumbed to his injuries while being transported to Akkaraippattu Hospital, police said.

    The police have commenced investigations into the killing.

    ReplyDelete